எனது சொந்த ஊரான சென்னிமலையில் ஊரின் சென்டரான இடமான வண்டிப்பேட்டை பஸ் ஸ்டாப்பில் குமரன் சிலை எதிரே கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஆறுமுகம் கடை என்றால் ஊரில் தெரியாத ஆள் இல்லை. அந்தளவு ஃபேமஸ். அங்கு தான் நான் ஓசியில் டீ குடித்து வருகிறேன். ஒரு நாள் ஓசியில் டீ குடித்த பொது மூஞ்சியில் கழனித் தண்ணியை ஊத்தி காசு கேட்டனர்.. அன்றே அவர்களை அவமானப்படுத்துவது என முடிவு செய்தேன்.
டீக்கடை ஓனருடைய மகன் ராஜநாகம். இவரது மகள் பல்லிமூக்கி (சூப்பர் பிகர்). இவர் எம் எஸ் சி விசுவல் கம்யூனிகேஷன் (VISHAL KAMUNIKESAN) படித்து சென்னையில் பன் டீவி யில் நிருபராக வேலை பார்த்து வந்தார். 19.2.2011 சனி அன்று இவர் ரயிலில் அடிபட்டு மரணம் அடைந்ததாக 18.2.2011 தேதி இட்ட தினத்தந்தி நாளிதழில் படித்து அதிர்ச்சி அடைந்தேன்.
உடனே அதை வைத்து ஒரு கேள்வி பதில் கதை தயார் செய்தேன். என்னுடைய மொக்கையான சந்தேகங்கள்..
1. இவ்வளவு அழகான பிகராக இருந்தும் இவருக்கு காதலர் இருக்கிறாரா இல்லையா என போலீசார் விசாரிக்காதது ஏன்?
2. இவர்களது டீக்கடையில் வாடிக்கையாக டீ குடிக்கும் யாரிடமும் இதுவரை விசாரித்ததாக தெரியவில்லை..
3. மகள் மரணமடைந்த அன்றே கடை அடைக்கப்பட்ட மர்மம் என்ன (நாங்க எல்லாம் எப்படி டீ குடிக்கரதாம் ஹீ ஹீ ஹீ )
4. ரயிலில் அடிபட்டதும் அவர் என்ன சொல்லி கத்தினார் என FIR-ல் பதிவு செய்யவில்லையே ஏன் ?
5. அவர் 30000 ரூபாய் சம்பளம் வாங்குகிறார்., இருந்தும் அவரது தந்தை டீக்கடை நடத்துவதன் மர்மம் என்ன? (என்னிடம் காசும் கேட்கிறார்)
இந்த மொக்கையான சந்தேகங்களுக்கு பின்னர் அந்தக் கடை பக்கமே செல்ல முடியாமல் போய் விட்டது. பின்பு அந்த பெண்ணின் தந்தை என்னை அழைத்து இதுவரை நீ குடித்த அத்தனை டீயும் இலவசம் என்னும் கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டார்..... உடனே நான் அடுத்த கட்டுக்கதையை அவரது கடையில் ஓசி டீ குடித்துக்கொண்டே யோசிக்க தொடங்கினேன். அப்போது...
நான்: "என்னண்ணே டீயில சூடு இல்ல?
டீ மாஸ்டர்: நாயே.. அது டீ க்ளாஸ் கழுவுன தண்ணிடா!!!!
என்று அவமானப்படுத்தினார். உடனே மறுபடியும் கட்டுக் கதைகளை யோசிக்க ஆரம்பித்தேன். ஓசி டீயும் கிடைக்க வேண்டும்.. அதே நேரம் அவனை அவமானப்படுத்தவும் வேண்டும்.. எப்படி?? கட்டுக்கதைகள் கீழே:
அந்தப் பெண்ணுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். தினமும் மொக்கை என்று கூகிளில் டைப் செய்து படித்து வந்துள்ளார். ஒருநாள் திடீரென என்னுடைய தளத்திற்கு வந்து படிக்கத் தொடங்கி இருக்கிறார். அவ்ளோதான் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதன்மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்:
1. பையனோ, பெண்ணோ வெளியூரில் படிக்க வைப்பதை முடிந்த வரை தவிர்க்கலாம்.. தனிமை பல தவறுகளை(என்னுடைய தளம் படிப்பது போன்ற ) செய்யத்தூண்டுகிறது..
2. மொக்கை என்பது நான் மட்டும் போடுவது அல்ல.. அதைப் பலரும் செய்து வருகின்றனர். ஆனாலும் தளத்தை வாசித்து விட்டு சாகும் முன் இன்டர்நெட் ஹிஸ்டரி டெலீட் செய்து விட்டு சாகவும்.
3.யாராவது தற்கொலை செய்தால் கூட அவர்களைப் பற்றி குடும்ப விவரத்துடன் இவ்வாறு ஒரு பதிவு தேத்த வேண்டும்..
டிஸ்கி : ஓர் பால் உறவு சரியானதா? தவறானதா? என்ற விவாதத்திற்கான தளம் இது அல்ல... எனவே கமெண்ட் போடுபவர்கள் அந்தக் கோணத்தில் கருத்து சொல்வதை தவிர்க்கவும்.. ஒரு பெண்ணுக்குத் தந்தை என்ற கோணத்தில் சிந்தித்து கமெண்ட் போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்... பெண்ணுக்குத் தந்தை இல்லாதவர்கள் பெரியப்பா, சித்தப்பா, மாமா என்ற கோணத்தில் சிந்தித்தும் கமெண்ட் போடலாம்.