Showing posts with label ஜெனிலியா. Show all posts
Showing posts with label ஜெனிலியா. Show all posts

Sunday, October 30, 2011

வேலாயுதம் "வச்சிகிட்டா வஞ்சனை பண்றேன்"

ஜெனிலியா ஒரு ஹோட்டல் ஆரம்பிக்கிறார்.(அல்லது பரோட்டா  செய்கிறார்.) ஏதோ ஒரு எழவு வேலை செய்கிறார். உள்துறை அமைச்சரின் வீடு என்று தெரியாமல் இட்லி வியாபாரத்தில்  அவரும், அவரின் நண்பர்களும் ஈடுபடுகிறார்கள்.  அதில் ஜெனிலியாவின் நண்பர்கள் கொல்லப்பட, அந்த ரவுடிகள் மூலமாக சென்னையில் பல இடங்களில் இட்லி கடை  ஆரம்பிக்க போவதாய் தெரிகிறது. ஜெனிலியா கத்திக்குத்தோடு உயிர்பிழைக்கிறார். ஒரு கடையில் தோசைகள் கரிந்து போயிருக்க, அப்போது ஜெனிலியா தோசையை கருக்கியது “வேலாயுதம்” என்று கற்பனைப் பெயரை எழுதி வைக்க, அடுத்து நடக்கவிருக்கும் இட்லி கடை தொடங்கவிருக்கும் மேட்டரையும் எழுதி வைக்கிறார். 




இப்போது கிராமத்தில் தன் தங்கை மீது அதீத பாசமுள்ள அண்ணனாக விஜய். அப்பா அம்மா இல்லாமல் பிறந்த தன தங்கையை  பாசத்துடன் வளர்க்கிறார் விஜய். தங்கையின் திருமணத்திற்காக சென்னையின் ஒரு சமையல் மாஸ்டர் , புக் பண்ண  சென்னை வருகிறார். அடுத்தடுத்து தொடங்கப்படும் இட்லி கடைகள் எத்தேசையாய் அவருக்கே தெரியாமல் செயலிழக்கப்பட, வேலாயுதம் மக்களிடையே ஒரு சூப்பர் ஹீரோவாக பார்க்கப் படுகிறான். விஜய்  ஜெனிலியாவிடம்  சமையல் காண்ட்ராக்டை ஒப்படைக்கிறார்    இது பற்றி தெரியாத விஜய் அப்பாவித்தனமாய் ஜாலியாய் சுற்ற, ஒரு கட்டத்தில் அவர் நம்பி பணம் கட்டியசமையல் மாஸ்டர் அட்வான்ஸ் பணம் திருப்பிகொடுக்காமல் ஏமாற்றிவிட, நொந்து போயிருக்கும் நேரத்தில் ஜெனிலியா மூலம் தன்னைத்தான் எல்லோரும் வேலாயுதம் என்று நம்பியிருக்கிறார்கள் என்ற உண்மையை தெரிந்து கொள்கிறார். பின்பு அவர் வேலாயுத அவதாரம் எடுத்தாரா? தங்கையின் திருமணம் நடந்ததா? அதில் ஜெனிலியா சமையல் செய்தாரா?வில்லனின் இட்லி கடை திட்டத்தை அழித்தாரா? என்பது போன்ற **** பைட்டிங் கேள்விகளுக்கு எல்லாம் பதில் வெண்திரையில். 

                                          சமையலுக்கு வரும் ஜெனீலியா மற்றும் விஜய் 
                                        

இப்படி இந்த படத்தை இவ்வளவு உத்து பார்த்ததில   இருந்தே நான் எவ்வளவு பெரிய விமர்சகன் அப்டிங்கறது   உங்களுக்கு தெரிந்திருக்கும்.விஜய் என்னுடைய இயக்கத்தில் நடிக்க ஆசைபட்டார் இப்போது நான் குறும்படம் பார்பதிலும். என்னுடைய நடிப்பு திறமைகளை வெளிக்கொண்டுவரவும் முயற்சி செய்து கொண்டு இருப்பதனால் என்னால் இயக்க முடியாது என்று சொல்லி விட்டேன் 

சுருக்கமாக சொல்வது என்றால் இது போன்ற மொக்கை படங்களை பார்க்கும் நேரத்தில் என்னால் நூறு முறை ஆஸ்கார் வாங்கும் அளவுக்கு நடித்து காட்ட முடியும் .... வேறு என்ன சொல்ல 


ஆங்... எங்க விட்டேன்.... சரி மீண்டும் வேலாயுதத்துக்கு வருவோம்  சரி அதுக்கென்ன பண்றது வச்சிகிட்டா வஞ்சனை பண்றாரு. இதற்கு முன் வந்த விஜய் படங்களைப் பார்த்ததும் ஒரு விதமான எரிச்சல் வரும். அது இந்த படத்தைப் பார்த்ததும் வரவில்லை. அந்த வகையில் விஜய்க்கு இப்படம் ஒரு கம்பேக் என்றே சொல்ல வேண்டும். 

அப்புறம் ஹன்சிகா இந்த பெயரை தட்டச்ச ஆரம்பித்த உடனேயே எனக்கு ஜெர்க் ஆகி விடுவதால் இப்போதைக்கு அப்பீட் ஆகிறேன் 

என்னுடைய இந்த வீடியோவை பார்த்து உங்களுக்கும் எரிச்சல் வரும் அதற்க்கு என்னுடைய பதிலும் அதுவே "வச்சிகிட்டா வஞ்சனை பண்றேன் "


நன்றிகளுடன்  

சாம் 

Indli