Thursday, November 7, 2013

மான் வெஜ் ஆனா நான் நான்வெஜ் (07/11/2013) ஆரம்பம் ஸ்பெஷல்

தீபாவளி மிச்சர்

தீபாவளியன்று நல்லா மூக்குபிடிக்க தெருவெல்லாம் வாங்கி தின்றுவிட்டு சென்னையில் முக்கிய இடங்களில் எல்லாம் பாம் வெடிக்கப்போகிறது என கமிஷனர் ஆபீஸில் புரளியைக்கிளப்பிவிட்டு மெரினா கடற்க்கரை, சத்தியம் தியேட்டர் மற்றும் சத்தியபாமா யுனிவர்சிட்டி ஆகிய பகுதிகளில் பாமை வெளியேற்றினேன்.

திருட்டு முழியின் மூலமாக கண்டறிந்து பொதுமக்கள் தர்ம அடி அடித்தனர். அடி முடிந்ததும்

அடிச்சு முடிச்சிட்டிங்க தர்மம் எங்கே?

என உரிமைக்கு குரல் குடுத்தேன். தர்மம் போட்டனர்.

 உடனே நல்ல தொழிலாக இருக்கிறதே என்று அதே வேலையை தொடர்ந்தேன் தூரத்தில் ஒருவன் மரண அடி அடிக்கனும்டா என பாய்ந்தான் கார்பன் டை ஆக்சைடென காற்றில் மறைந்தேன்.


 ***********************************************

இப்போது விமர்சனங்களுக்கிடையே இயக்குனர்களுக்கும் நடிகர்களுக்கும் விர்ச்சுவல் பரிசுகளை அறிமுகப்படுத்தி இருக்கிறேன் அதாவது விமர்சனம் எழுதும்போதே

தீபாவளி ஸ்வீட் பாக்ஸ் பார்சேல்...........

புல்லட் பீர் பார்சேல்.....

போன்ற விர்ச்சுவல் பரிசுகள்.....


தீபாவளியை முன்னிட்டு போனஸ் கேட்டு மனைவியிடம் போராட்டத்தில் இறங்கினேன் விர்ச்சுவல் சம்பளம் குடுத்து, விர்ச்சுவல் சாப்பாடு போட்டு செருப்படி மட்டும் ரியாலிட்டியில் கிடைத்தது

*******************************************************

பொட்டு வெடி டப்பா ஒன்றினை நண்பர் ஒருவர் பரிசளித்திருந்தார் வெடிக்க மனைவியிடம் அனுமதி கேட்டேன் தீபாவளியாதளால் அனுமதி கிடைத்தது.

உடனே உரிமைஎடுத்து huggy time என்று கட்டிப்பிடிக்க முயற்ச்சித்தேன் 

மனைவியும் ஆமா ஹக்கிஸ் டைம் போய் குழந்தைக்கு ஹக்கிஸ் மாற்றிவிடு என் கன்னத்தைப்பெயர்த்தார்.

பன்றியும் தன் வாயால் கெடும் எனும் பழமொழியை நினைத்துக்கொண்டேன்.

வேலை முடிந்ததும் சட்டென பாம்பு மாத்திரைகளை பொருத்தி வைத்து மனைவியை மூச்சுத்திணற வைத்து நழுவினேன்.

************************************************

மும்பை பதிவர் நண்பர் அதுல் குல்கர்னி அவர்களிடம் மனைவி  அடியிலிருந்து தப்பிக்க  ஐடியா கேட்டிருந்தேன் அவர் தனது போலிஸ் நண்பர் உதவியுடன் குண்டு துளைக்காத ஜாக்கெட் பரிசளித்தார். உடனே ஜாக்கெட்டுடன் வீட்டுக்கு வந்து வீராவேசமாக பேசினேன்.

மனைவி மற்றும் மாமியார் கூட்டனி தாக்குதல் நடத்தி அடித்து  அடித்தே ஜாக்கெட்டை கிழித்தனர்.

தரமில்லாத ஜாக்கெட் போல :(.

சாவின் விளிம்பிலிருந்து தப்பித்திருக்கிறேன் .

ஆனால் இந்த ஊழலுக்கு காரணமான ஒருத்தரையும் சும்மா விடமாட்டேன்.
என சபதமிட்டு மும்பைக்கு திருட்டு  ரயிலேரி இருக்கிறேன்.**************************************************


வாசகர் கடிதம் 


தமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு,

தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து, உங்கள் தமிழ் தலத்தில் விளம்பரங்கள் காண்பிப்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php . பதிவுசெய்து முற்றிலும் இலவசம் .

வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம்.

--------------------------------------------------
அன்பின் தமிழ்,


                      உங்களுடைய  " பதிவுசெய்து முற்றிலும் இலவசம் ", "தலத்தில்" ஆகிய சொல்லாடல்கள் மூலம் நீங்கள் என்னுடைய நீண்டநாள் வசாகார் என அறிகிறேன் என்னை நீங்கள் ரோல்மாடலாக கொண்டிருப்பதும் தெரிகிறது. நன்றி.

உங்களுடைய தளத்தை கடந்த ஒரு வார காலமாக ரிப்ரெஷ் செய்து கொண்டிருக்கிறேன், இன்னும் பணம் வரவில்லை.
உங்களுக்கு என் கண்டனங்கள்.

*********************************************

தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி அறிய நேர்ந்தது உடனே 1975ல் பெயிலான பத்தாம் வகுப்புத்தேர்வுக்கு மறுதேர்வுக்கு அப்ளை செய்துவிட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பள்ளிக்கல்வித்துறையிடம் கொஸ்டின் பேப்பர் கேட்டு விண்ணப்பித்திருந்தேன்.

நீதிமன்றம் வழக்கை
Rehabilitation Centre for Mentally Ill Persons என்னும் அமைப்புக்கு  பார்வார்ட் செய்திருக்கின்றனர் 


ஹ்ம்ம்ம்ம் நீதி கிடைக்கிறதா பார்க்கலாம்

Version 2


தகவலறியும் உரிமை சட்டம் பற்றி நண்பர் நக்கிலக் விளக்கினார். உடனே இந்த ஆண்டு SSLC  தேர்வுக்கு அப்ளை செய்துவிட்டு தகவலறியும் உரிமை சட்டம் மூலமாக தேர்வுத்தாள் கேட்டு நண்பர் காடுவிரும்பல் மூலமாக வழக்கு தொடர்ந்தேன் நீதிபதி  மூவரையும் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். சட்டம் அதிகாரவர்கத்திற்கு மட்டுமே என்பது மறுபடியும் நிரூபணமாகியுள்ளது..


**********************************************
நான்வெஜ் 18+

ஆரம்பம் படத்தில் நயன்தாரா வரும் ஹோட்டல் காட்சியை கண்டுகழித்துக்கொண்டிருந்தேன் அப்போது நயன்


"தம்பி அசஞ்சா சுட்டுடுவேன் "

 என சொன்னதும் முச்சை அடக்கிப்பிடித்து படம் பார்த்தேன் பிரியங்களுடன் 

சாம் 

4 comments:

 1. //கண்டுகழித்துக்கொண்டிருந்தேன் //


  ROFL

  ReplyDelete
 2. // அப்போது நயன்


  "தம்பி அசஞ்சா சுட்டுடுவேன் "

  என சொன்னதும் முச்சை அடக்கிப்பிடித்து படம் பார்த்தேன் //

  மரண மாஸ்!

  ReplyDelete

வந்தவங்க எல்லாரும் கமெண்ட் போடுங்க, இல்லே கனவில வந்து கண்ணை நோண்டிப்புடுவேன்!!

Indli