கூடங்குளத்தில் சொந்த நாட்டு மக்களையே அடித்து தும்சம் பண்ணி இருக்கின்றார்கள்…
இந்த செய்தியை கேட்டதும் கூடங்குளத்தை தனி நாடக அறிவிக்கும்படியான கோரிக்கையுடன் ராஜபக்ஷேவை சந்திக்க சென்றேன் வெலிகடா
(Welikada ) ஜெயிலில் சாணி அள்ள வைத்திருக்கிறனர்.
*********************************************************************
அதிமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஒடி விட்டன…. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆறு மாதத்தில் மின்வெட்டை போக்குவோம் என்றார்கள். இன்னும் மின் வெட்டை சரி செய்த பாடில்லை… இதை எந்த ஊடகமும் கேட்க வக்கில்லை… பல சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.. அது கூட பராவாயில்லை.. நேற்று காலை பல் துலக்காமல் சாப்பிட அமர்ந்தேன் மனைவி கண்டுபிடித்து
”ஏண்டா பல் விளக்காமல் சாப்பிட வந்தாய்” என்றார்..
ஊஞ்சல் ஆடும்போது எடுத்தது |
கரண்டு இல்லத்ததால் என்றேன்.
கரண்டுக்கும் பல்லு விளக்குவதற்க்கும் என்ன சம்மந்தம் என்றார்
நான் உடனே சைக்கிள் டையனமோவில் பல் போன்ற அமைப்பு நீரின் உதவியால் சுழல்வதனால் மின்சாரம் வரும். அதேபோல் இன்று மின்சாரம் இல்லாததால் நான் எனது பல்லை நீர் வைத்து சுழற்றவில்லை என்றேன்.
வெளக்காத பல்லுக்கு அறிவியல் விளக்கமா என விளக்கமாற்றால் விளாசி
சங்கிலியில் பிணைத்து வெயிலில் வாழைமரத்தில் கட்டிப்போட்டிருக்கின்றார். நண்பர்கள் வந்து காப்பாற்றவும்.
*********************************************************************
திரும்பவும் பெட்ரோல் விலை 5 ரூபாய்க்கு ஏற்றப்போவதாக பெட்ரோலியா(மங்கோலியாவில் அண்டை நாடு) நிறுவனங்கள் கொஞ்சிக்குலாவி அறிவிக்க இருக்கின்றன… திரும்ப 78 ரூபாய் லெவலுக்கு போவும்ன்னு நினைக்கிறேன்.. இருந்தாலும் வண்டி ஓட்டித்ன் ஆவனும் இல்லைன்னா லாஸ் ஆப் பே தான். என்று ரோட்டில் ஒருவர் புலம்பிக்கொண்டிருந்தார்.
உடனே நான் பெட்ரோல் விலை ஏறினால் ஆப்பேக்கு (PIAGGIO APE) எப்படி லாஸ் ஆகும்? அது டீஸலில் தானே ஓடுகிறது என என்னுடைய எதிர்ப்பை நியாயமாக பதிவு செய்தேன்.
காதை கடித்து வைத்துவிட்டார்........இது போன்ற மூடர்களை என்ன செய்வது?
*********************************************************************
கூடங்குள மக்கள் வாழ்வாதார பிரச்சனைக்கு போராடிக்கொண்டு இருக்கும் போது ஸ்ரீரங்கத்தில் தொடர்ச்சியாக அன்னதான விழாவை இனிதே நடத்தி நம்மை மெய் சிலிர்க்க வைத்து இருக்கின்றார்... நம் முதல்வர் ஜெ இந்த விஷயம் அறியக்கிடைத்ததும் உடனடியாக ஸ்ரீரங்கம் சென்று அன்னதானப்பந்தலை வட்டம் சுற்றத்தொடங்கினேன்.
மம்மியின் பாதுகாவலர்கள் பெட்டக்ஸில் எத்தி கால்வாயில் தள்ளினர்.
உடனே அங்கேயே உட்கார்ந்து பிடில் வாசிக்க தொடங்கினேன் முதல்வரின் பாதுகாப்பு கருதி வண்டலூர் பூங்காவில் கூண்டு எண் 19 ல் அடைத்துள்ளனர்
*********************************************************************
ஜெமினி பிளை ஓவர் கிட்ட இருக்கற பார்க் ஓட்டல் கிட்ட ரைட் கட் பண்ணி சேம வேகத்துல வந்துகிட்டுஇருந்தேன்.. இரண்டு பேர் என்னை துரத்திகிட்டு டேய் டேய் பண்ணாடன்னு கத்திகிட்டு வந்தாங்க... நானும் கடன்காரர்களாக இருக்குமோ என்று வேகமாக கொரங்கு பெடல் போட தொடங்கினேன் .
வாசகர்களுடன் அடியேன் :))))) |
வள்ளுவர் கோட்டத்துகிட்ட வண்டியை நிறுத்தினேன்.. சார் நான் உங்க வலை ரசிகர்...என்று பெயர் சொன்னார்...
அய்யோ நான் மீன் பிடிப்பதில்லையே என்றேன். பிடித்து பரங்கிமலையின் உச்சியிலிருந்து உருட்டி விட்டனர்
*********************************************************************
நான்வெஜ் 18+
கிரிக்கெட் ஃபீவர் அடிக்கிறது என்று நண்பர் சொன்னார் உடனே க்ரோஸினுடன் அவரை பார்க்க சென்றேன் அசிங்கமாக திட்டினார் உடனே அவரை பழிவாங்க வேண்டி ஃபேஸ்புக்கிலிருந்து அவரை அன்ஃப்ரெண்ட் செய்து விட்டு கிரிக்கெட் என கூகுளில் தேடத்தொடங்கினேன்
”கிரிஜாவில் கிரவுண்டில் ஒரு கிரிக்கெட் மேட்ச்”
என்னும் கதையை படித்துக்கொண்டிருந்தேன் வேலையை விட்டு எடுத்திருக்கின்றனர்.
கிரிக்கெட் உலகக்கோப்பை நடக்கும் போது கூட கிரிக்கெட் பத்தின பதிவுகள் படிக்கக்கூடாதா... என்னா உலகம்டா இது?*********************************************************************
சமீபத்தில் பார்த்த வீடியோ, பதிவுலக பின்னூட்ட சண்டைகளை நினைவுபடுத்தியது
*********************************************************************
அன்புடன்
நான்வெஜ் 18+
கிரிக்கெட் ஃபீவர் அடிக்கிறது என்று நண்பர் சொன்னார் உடனே க்ரோஸினுடன் அவரை பார்க்க சென்றேன் அசிங்கமாக திட்டினார் உடனே அவரை பழிவாங்க வேண்டி ஃபேஸ்புக்கிலிருந்து அவரை அன்ஃப்ரெண்ட் செய்து விட்டு கிரிக்கெட் என கூகுளில் தேடத்தொடங்கினேன்
”கிரிஜாவில் கிரவுண்டில் ஒரு கிரிக்கெட் மேட்ச்”
என்னும் கதையை படித்துக்கொண்டிருந்தேன் வேலையை விட்டு எடுத்திருக்கின்றனர்.
எனது வாசகர் வண்ணமுத்து |
சமீபத்தில் பார்த்த வீடியோ, பதிவுலக பின்னூட்ட சண்டைகளை நினைவுபடுத்தியது
*********************************************************************
அன்புடன்
சாம் ஆண்டர்ஸன்