ஆங்கில படங்களை வகை பிரிக்க சொன்னால் எதனை வகையாக உடனே தரம் பிரிப்பீர்கள் Comedy,Horror,Romance,Action வேற அவ்ளோ தானா..! (அஜால் குஜால் அப்டின்னு சொல்றவங்க என்கூட சேர கூடாது. நான் நல்ல பையன் ) இந்த அனைத்து வகையான ரசிகர்களுக்கு விருந்து படைக்க வந்த வந்த படம் தான்Tucker and Dale vs Evil
கதை: டக்கர் மற்றும் தேவ்(DAVE) இருவரும் தங்களுடைய விடுமுறை கொண்டாட தங்களுடைய காட்டு காயிலாங்கடையை (Rest House) நோக்கி பீர் சகிதமாக புறப்படுகின்றனர்... இதில் டக்கர் தான் அசிங்கமாக இருப்பதாக தாழ்வு மனப்பான்மை உடையவனாக இருக்கிறான்... இதே நேரம் காட்டுக்குள் 5 ஆம்பள 3 மட்டும் பொம்பள காலேஜ் குழந்தைகள் தங்களது வார இறுதி நாட்களை கொண்டாட அதே காட்டுக்குள் வருகின்றனர் (படத்தில் College Kids என்று தான் சொல்லபடுகிறது)
அவர்கள் கரடு முரடான டக்கர் மற்றும் தேவ் பார்த்ததும் சீரியல் கில்லர்கள் என நினைக்கின்றனர்
கோர்வையாக வரும் காட்சிகளும் இதற்க்கு ஏற்றார் போல் அமைய ,காமெடி அதகளம் நடக்கிறது.இத்தனைக்கும் படம் நெடுக வரிசையாக மரணங்கள் ஆனால் ஒவ்வொருத்தர் இறக்கும் பரிதாபம் வரவில்லை மாறாக சிரிப்பு வருகிறது (சிரிப்பு வரவில்லை என்றால் நல்ல டாக்டரை பார்ப்பது நலம்)
மரணம் என்றால் மரத்திலிருந்து குதித்து அல்லது விஷம் குடித்து சாவது அல்ல
மரணம் 1.கழுத்து வழியாக கதி குத்தப்பட்டு கடைசி சொட்டு இரத்தம் வரை வழிகிறது
மரணம் 2.மரம் வெட்டும் எந்திரத்தில்(WOOD CHOPPER) உடல் அறைக்கபடுகிறது
மரணம் 3.தலையில் ஆணி அடங்கிய பலகை குத்தபடுகிறது இன்னும் கொடுமையான 8 மரணங்கள்
ஆனால் இதை எல்லாம் பார்த்தால் கண்டிப்பா சிரிப்பு மட்டும் தான் வருகிறது அவ்வளவு அழகான காட்சிகள் நகைச்சுவை உணர்வுடன் படமாக்கபட்டுள்ளது
டிரைலரை பார்த்ததும் இது வெறும் த்ரில்லர் படம் என நினைத்தால் ஏமாற்றம் மட்டும் தான் மிஞ்சும்
தேவ் தக்கருக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதும்.. அழகான ஹீரோயின் கேத்ரினா ப்வ்டன் (கேத்ரினா கையிப் இல்ல) டக்கரை காதலிக்க ஆரம்பிப்பதும் செமையான காட்சிகள்
நட்பும் காதலும் நம்ம சசி குமார் படங்களை ஞாபக படுத்தும்............
ஏழாம் அறிவு படத்தில முழு நீள கதையாக எடுத்துக்கொண்ட ஜீன் பற்றின உண்மைகளை இவ்வளவு தெளிவாக அனால் ரொம்ப சாதாரணமாக சொல்லிருக்கிறார்கள்
படத்தில் சில ரக வசனங்கள் இருக்கிறது காட்சிகள் இல்லை ஒரு லாங் டாப்லெஸ் காட்சி தவிர
வசனம் உதாரணம் :அழகான பொண்ணுங்கள எல்லாம் இவனுக தள்ளிட்டு வந்துட்டானுகன்னா நாம எல்லாம் என்ன டாய்லெட்லேவா இருக்கறது?
இன்னொரு வசனம் தேவ் அழுது கொண்டே வந்து நம்ம வீட்ட சுத்தி காலேஜ் பசங்க தற்கொலை பண்ணிக்கிறாங்க அப்டின்னு சொன்னதும் டக்கர் முகபாவம் கிளாஸ்...
மொத்தத்தில் "Tucker and Dale vs Evil ...This Vocation Sucks"
Movie Details:
Directed by | Eli Craig |
---|---|
Produced by | Morgan Jurgenson Albert Klychak Rosanne Milliken Deepak Nayar |
Written by | Eli Craig Morgan Jurgenson |
Starring | Alan Tudyk Tyler Labine Katrina Bowden Jesse Moss Chelan Simmons |
Music by | Michael Shields Andrew Kaiser |
Cinematography | David Geddes |
Editing by | Bridget Durnford |
Studio | Eden Rock Media Looby Lou Reliance Motion Picture Company Urban Island |
Distributed by | Maple Pictures |
Release date(s) | January 22, 2010 |
Running time | 88 minutes |
Country | Canada |
Language | English |
Box office | $4,163,177 |
படத்தின் டிரைலர்
டிஸ்கி : இது என்னுடைய முதல் விமர்சனம் தவறுகள் இருந்தால் சுட்டி காட்டவும்
படித்ததும் பார்க்க துண்டுதே
ReplyDeleteஇன்று என் வலையில்
ReplyDeleteவிஜய் ரசிகர்கள் – சிரியுங்கள் ஆனால் சீரியஸா எடுத்துகாதீர்கள்