டீ கடைக்கு காலையில் சீக்கிரமாக போனால்தான் ஓசி டீ கிடைக்கும்..
ஆனால் டீ ஓசியில் கிடைப்பது போல் இன்று வரை உணவு வகைகள் சரியா கிடைத்து இல்லை(ஓசியில்)நேற்று தேதி ஆறு என்பதால் எல்லாரும் சம்பளம் வாங்கி இருப்பார்கள் என்ற காரணத்தினால் அடித்து பிடித்து எங்கள் கொளப்பாக்கம் டீ கடைக்கு சென்றேன்.. வாசகர் விளாத்திகுளம் வீரமணி அவர்கள் நின்று கொண்டிருந்தார் அவரிடம் மெதுவாக பேச்சு குடுத்து சீக்கிரம் டீ குடித்து விட்டு சென்று விடலாம் என்று கனவு கண்டேன்..ஆனால் ஒன்றரைமணி நேரம் ஆகும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை..
முன்பு போல் காலைவேளைகளில் அதிகமான ஆண்களை டீ கடைகளில் இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை... சிம்பிள் காரணம்தான்... என்னுடைய மான் வெஜ் ஆனா நான் நான்வெஜ் தொடரில் நான்வெஜ் 18+ பகுதி படித்து விட்டு இரவு தாமதமாக தூங்க செல்வதே அதற்கு காரணம்.....
ஆனால் என் நினைப்பில் மண்.. எனது சைக்கிள் உள்ளே நுழையும் போதே வேறு ஒரு தள்ளு வண்டி வந்ததை நான் சரியாக கவனிக்கவில்லை.. நான் நேராக போய் ஓசி டீ குடிப்பவர்களுக்கான வரிசையில் நடுவில் சென்று சொருக பார்த்தேன் ஏற்கனவே நின்றிருந்தவர்கள் அடி பிழிய பிழிய அடித்தனர் .. கூட்டமே இல்லை ஆனாலும் ஒரு பில்டப்பை கொடுக்குறீர்களா என கேட்டேன் அதற்க்கு இவரு பெரிய இவரு என சொல்லி மிதித்தனர்... ஆனால் அந்த தள்ளு வண்டியில் இருந்து ஆர்பாட்டம் இல்லாமல் இறங்கி நடந்து வந்தார்.. அவர் நடிகர் சாம் ஆண்டர்சன்.
அவரை பார்த்த உடன் எங்கள் ஊர் கொளப்பாக்கம் டீ கடைகாரர் மாதவன் நாயர் பதட்டமானார்..சாம் ஆண்டர்சன் டீ குடிக்க வந்தார் என்றால் யாருக்கு தான் பதட்டமாக இருக்காது.
காலையில் என் முகத்தில் முழித்து அவருக்கு ஞாபகம் வந்திருக்கலாம் சுடு தண்ணியை பிடித்து மூஞ்சியில் ஊத்தினார் ஆனாலும் பொறுத்துக்கொண்டு வரிசையில் நின்றேன்.
அவர் 555 சிகரெட் பாக்கெட் ஒன்றை வாங்கினார் ஆனால் உள்ளே 20 சிகரெட் தான் இருக்கிறது என்று கூச்சலிட்டார் நானும் சேர்ந்துகொண்டு குரலை உயர்த்தினேன் மாதவன் நாயர் மங்கி நாயராக மாறி தலையில் இருந்த சொச்ச முடிகளையும் பதம் பார்த்தார்....
வேறு எதாவது பிரச்சனை இருந்தால் சொல்லுங்கள் என்றார் சாம் ..நான் வர வர மக்கள் விழிப்புணர்வு பெற்று வருவதாக சொன்னேன் அவர் யாருக்கு யாரோ தோல்வியின் போதே இதை புரிந்து கொண்டேன் என்றும் அவரது படையப்பா பார்ட் 2 படத்தில் வாய்ப்பும் தருவதாக சொன்னார்
பக்கத்தில் இருந்த ஒரு பையனிடம் அவர் பேச்சு குடுக்க தொடங்கினார்
உங்க பேர் என்ன தம்பி-?
ஜெட்லி ..
எத்தனாவது படிச்சிருக்கிங்க??
பத்தாவது ஐயா...
என்ன வேலை பாக்குறிங்க?
ஒன்னுக்கு ரெண்டு வியாபாரம் பாக்கறேன்
பஸ் ஸ்டாண்ட்ல கக்கூஸ் நடத்துறின்களா?
அட அது இல்லைங்க ரெண்டு தொழில் பாக்கறேன்னு சொன்னேன்
சரி நல்லா நடிக்கணும் என்று ஜெட்லி சாம்க்கு கை கொடுத்தார்...
வாசகர் வாணியம்பாடி வண்ணமுத்து வந்தார் அவரிடம் டீயும் பன்னும் வாங்கி கொண்டு ஜுட் விட்டேன்..
//அவர் 555 சிகரெட் பாக்கெட் ஒன்றை வாங்கினார் ஆனால் உள்ளே 20 சிகரெட் தான் இருக்கிறது என்று கூச்சலிட்டார் ....///
ReplyDeleteநல்லகாமெடி...
//வேறு எதாவது பிரச்சனை இருந்தால் சொல்லுங்கள் என்றார் அமைச்சர்//
அமைச்சர்ன்னு எழுதிட்டீங்க.... மாத்திருங்க.......
ஒரே ஆளை ஸ்பூப் பண்ணுறதுக்கு...இன்னும் நிறைய பேர மாதிரி எழுதலாம்.....
Bus stand----comedy.....super..!!!!!
ReplyDeleteராஜ்
ReplyDeleteDecember 6, 2011 7:15 PM
//அவர் 555 சிகரெட் பாக்கெட் ஒன்றை வாங்கினார் ஆனால் உள்ளே 20 சிகரெட் தான் இருக்கிறது என்று கூச்சலிட்டார் ....///
நல்லகாமெடி...
//வேறு எதாவது பிரச்சனை இருந்தால் சொல்லுங்கள் என்றார் அமைச்சர்//
அமைச்சர்ன்னு எழுதிட்டீங்க.... மாத்திருங்க.......
Changed Boss
ஒரே ஆளை ஸ்பூப் பண்ணுறதுக்கு...இன்னும் நிறைய பேர மாதிரி எழுதலாம்.....
Sure
அமைச்சர்ன்னு எழுதிட்டீங்க.... மாத்திருங்க.......
ReplyDeleteChanged Boss
ennun change avalai..
nice..
அந்த ஆள் ஆத்ர டீயில இடையில ஒரு தம்ளர் நீட்டி பிடிச்சு குடிக்கணும் போல இருக்குது
ReplyDeleterufina rajkumar
ReplyDeleteDecember 9, 2011 6:42 PM
அந்த ஆள் ஆத்ர டீயில இடையில ஒரு தம்ளர் நீட்டி பிடிச்சு குடிக்கணும் போல இருக்குது
////////
ஒரு ரெண்டு ரூவா குடுத்தீங்கன்னா அவரே ஒரு தம்ளர்ல புடிச்சு உங்களுக்குத் தருவாரு..