Friday, August 24, 2012

பதிவர் மாநாடு 2012 சாம் அனுபவங்கள்


     கடந்த முறை பதிவர் சந்திப்புக்கு நான் தான் கடைசியாகப் பதிவு போட்டேன். அதனால் இந்த முறை நான் தான் முதலாவது ஆளாக இருக்க வேண்டும் எனப் பதிவர் சந்திப்பு துடங்கும் முன்னரே பதிவிடுகிறேன்.

பதிவர் சந்திப்புக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பதிவர் மீனாட்சிபவன் மணிக்குமார் என்பவர் அழைத்திருந்தார். நானும் மீனாட்சிபவன் தானே என்று மீனாட்சிபவனில் தயிர் வடை சாப்பிட்டுக்கொண்டே காத்திருந்தேன்.... 

ஆனால் நெடுநேரமாகியும் அவர் வரவில்லை. சாப்பிட்ட பில் வேறு தர வேண்டும். உடனடியாக மீனாட்சிபவனுக்கு மிஸ்ட் கால் குடுத்தேன். அவர் திரும்ப அழைத்தார்.
“யோவ்... என் பேருதான்யா மீனாட்சிபவன். உடனடியா அனிமல் ப்ளானட் புக் பேலஸ்க்கு வந்துருய்யா” என்றார்.“த்தா... ஏமாந்துட்டோமே” என முனகிக்கொண்டே பில் தராமல் தப்பிக்க வழி தேடிக் கக்கூஸுக்கு ஓடினேன். வெண்டிலேட்டர் வழியாக முகத்தில் கரித்துணியைக் கட்டிக்கொண்டு எஸ்கேப் ஆன போது பின்பக்கமாக கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த ரவுடிகள் காரணமேயில்லாமல் இரும்புக்கரம் கொண்டு என்னை நையப்புடைத்தனர்.
ரவுடி ஒருவனிடம், “எதுக்கு சார் அடிக்கிறீங்க?” என்றேன்.

“நாங்க தடையர தாக்க படம் பாக்கலன்னு நெனக்கிறியா?” த்தா ம்மா என்று அடியை கண்டின்யூ செய்தனர். (அவர்களுக்கு என் கண்டங்கள்)

பின்பு ஒரு வழியாக கூட்டத்துக்கு வந்து சேர்ந்த நான் ஆலோசனையில் என்னென்ன சமைக்கலாம் என்னும் விவாதத்தை தொடங்க முயன்றேன். போரூர் சானா ஆண்டர்சன் பக்கத்தில் அமர்ந்து இருந்தார். “மதியத்துக்கு எல்லாருக்கும் பிரியாணி போடலாம்” என்றேன் . “சாம்பில் குடு” எனக் கலவரத்தில் இறங்கினேன். அதைக் கூட்டத்தில் ஒருவர் மொபைல் ஃபோனில் புகைப்படம் எடுப்பதைப் பார்த்ததும் பம்மி அமைதியாக இருந்துவிட்டேன்.

அடுத்ததாக லோக்கல் பதிவர்களுக்குப் பரிசுத்தொகை அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தேன். அதை மறுத்து மூத்த பதிவர்களுக்கு மட்டும் தான் மரியாதை எனச் சொல்லிவிட்டனர்.


தயிர்வடை செரித்துப் பல நேரம் ஆகிவிட்டதால் மீண்டும் சாப்பாடு பற்றிக் கேட்டேன். போரூர் சானா முறைத்தார். உடனே புத்தகங்களை விசிரி அடித்துப் போராடத் தொடங்கினேன். கைலியப்பன் கைலியைக் கழற்றி முகத்தில் சுற்றி அடி பிரட்டி எடுத்து விட்டார். சரி என்று இரண்டு புத்தகங்களை திருடிக்கொண்டு ஓடத்தொடங்கினேன். ஹி ஹி ஹி

பதிவர் சந்திப்புத் தினத்தில் மண்டபத்துக்கு வந்தேன். வாசலில் இரு பெண்கள் பன்னீர் தெளித்தனர். உடனடியாக “அனானிகள் என் மீது தண்ணீர் ஊற்றித் தாக்குதல் நடத்துகின்றனர்” எனக் கூவத்தொடங்கினேன். நண்பர் காடு ரமேஷ்குமார் வந்து சாப்பிடும் அறைக்கு வழி காட்டினார். நடையைக் கட்டத் தொடங்கினேன்.
உள்ளே ஃபுல்லாக மக்கள் அமர்ந்திருந்தனர். அப்போது ஒரு பதிவரிடம் சென்று “உங்கள் பெயர் என்ன சகோ?” என்றேன். “பசிக்கலா” என்றார். “பசிக்கல பசிக்கலன்னு சொல்லிட்டே பந்தியில ஒக்காந்துருந்தா என்ன அர்த்தம்?” என்ற நியாயமான கேள்வி ஒன்றைக் கேட்டேன். தென்றல் புயலாக மாறி தாக்குதல் நடத்தத் தொடங்கியது.


சாப்பிட்டுவிட்டு முத்த பதிவர்களுக்கான பதிவுத்தொகையைப் பெறுவதற்காக மேடைக்குச் சென்று “யாரை முத்தமிட வேண்டும்?” எனக் கேட்டேன்.

அமைதியின் வடிவாய் இருந்த கவிஞர் மிதிமதி என்னைக் கால்மிதியாக மாற்றி மிதித்தார். பட்டிணத்தார் பாண்டி அட்டாக் பாண்டியாக மாறித் தாக்குதலை நடத்தினார். “அண்ணே மூத்த பதிவர தான் முத்த பதிவர்ன்னு நென்ச்சுட்டேன்”னு சமாளித்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து என்னிடம் மைக்கை கொடுத்தனர்.


“பதிவர்களே பதிவர்களே நீங்கள் என்னை அமேரிக்காவில் தூக்கிப் போட்டாலும் நான் லோக்கலாகத்தான் இருப்பென் STD ஆக மாற மாட்டேன்“ எனப் பாடிக்கொண்டே இருக்கும் போதே முட்டை மற்றும் அழுகிய தக்காளியால் அடித்தனர். துடைத்துவிட்டு வெளியேறும் போது அண்ணன் குண்டுக்கல் குணபாலன் வந்தார்.


கலக்கல்... நன்றி... (த ம ஓ 5 ) என்றார்.

“ஒன்னிய தாண் இவ்ளோ நாளா தேடிட்ருக்கேன் ” என விரட்டத் தொடங்கினேன். ஆனால் ஓடி மறைந்துவிட்டார்.


பின்பு பதிவர் கில்மாகுமார் வந்து “வாங்கண்ணே நம்ம தல இருக்கார் அவர்ட்ட பேசலாம்” என அழைத்துச் சென்றார். அங்கே,

ஆம் அவரே தான் குறுந்தாடியுடன் அல்டிமேட் ரைட்டர் நின்று கொண்டிருந்தார். “அண்ணே அடிச்சு ஜட்டிய கிழிச்சு வுட்டாங்கண்ணே” என்றேன். “அப்படியா நான் ஜட்டியே போடறதில்ல போட்டா CK தான்” என்றார். நானும் “அப்படியா நானும் CK தான்” என்றேன்.
“நான் சொன்னது CALVIN KLEIN” என்றார்.

அல்ட்டிமேட் ரைட்டருடன் நான் 


நான் “C.KARTHIKEYAN எங்க எதுத்த வீட்டுக்காரர்” என்றேன். அவரது ரியாக்‌ஷனைப் பார்க்கும் முன்னமே ஓட்டத்தை ஆரம்பித்தேன்.


22 comments:

 1. யாருக்கேனும் ஏதேனும் எதிர்ப்பு இருக்கும் பட்சத்தில் வரிகள் உடனடியாக நீக்கப்படும்

  ReplyDelete
 2. நகைசுவயாகத்தான் இருக்கு...

  /யாருக்கேனும் ஏதேனும் எதிர்ப்பு இருக்கும் பட்சத்தில் வரிகள் உடனடியாக நீக்கப்படும்/
  குட் பாலிஸி கீப் இட் அப் சாம்.

  ReplyDelete
 3. //பட்டிகாட்டான் JeyAugust 24, 2012 10:45 AM

  நகைசுவயாகத்தான் இருக்கு... //

  Thanks Jey

  ReplyDelete
 4. கலக்கல் நன்றி! :)))))))))))))

  ReplyDelete
 5. 'லோக்கல்' பதிவர்களுக்கு பரிசுத்தொகை... :))

  ReplyDelete
 6. Sema kalaaippu machchi! :)

  ReplyDelete
 7. சாமு....உமக்குதாம்ய்யா..!பரிசு தொகை கொடுக்கனும்!

  ReplyDelete
 8. உங்கள் உற்சாகமும் சந்தோஷமும்
  படிப்பவர்களுக்குள்ளும் இயல்பாகப்
  பொருந்திக் கொள்கிறது
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. கலக்கல் சாம் !!! சிரிப்புத் தாங்கவில்லை !!!

  ReplyDelete
 10. “ஒன்னிய தாண்டா இவ்ளோ நாளா தேடிட்ருக்கேன் ..த்தா” என விரட்டத் தொடங்கினேன். ஆனால் ஓடி மறைந்துவிட்டார்.
  please remove the words like ....ஒன்னிய தாண்டா, ..த்தா”.......

  ReplyDelete
 11. //வல்லத்தான்August 24, 2012 10:24 PM

  “ஒன்னிய தாண்டா இவ்ளோ நாளா தேடிட்ருக்கேன் ..த்தா” என விரட்டத் தொடங்கினேன். ஆனால் ஓடி மறைந்துவிட்டார்.
  please remove the words like ....ஒன்னிய தாண்டா, ..த்தா”.......//

  Edited Boss.... Thanks

  ReplyDelete
 12. // கலக்கல்... நன்றி... (த ம ஓ 5 ) என்றார்.//

  Super. I could not stop laughing.

  ReplyDelete
 13. நல்ல கலக்கல் காமெடி.

  ReplyDelete
 14. வழக்கம் போலவே நல்ல காமெடி ..நீங்க பதிவர் சந்திப்புக்கு வரீங்களா..???

  ReplyDelete
 15. குடியால் அழியுமா பதிவுலகம்?
  பதிவுலக சண்டைக் குறித்து ஒரு நடுநிலை ஆய்வு!

  http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_25.html

  ReplyDelete
 16. வணக்கம் மைடியர் அல்லக்கை (அப்படித் தான் ஊருக்குள்ளே பேசிக்கிறாங்க)
  சிரிப்பை அடக்க முடியலே...என்னா ஒரு டெரர் பதிவு.
  செம ஜோரா பலரை கடிச்சு வைச்சிருக்கீங்க.
  ரசித்தேன் சார்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் குரு..... நன்றி தலைவா

   Delete
 17. அப்பாடி பதிவர் சந்திப்ப்பு பதிவுகளில் சுவராசியம்சம் தந்த பதிவு..வாழ்த்துக்கள்....இதை பற்றிய இந்த பதிவை படிக்க அழைக்கிறேன்....

  ReplyDelete
 18. சாம் வந்தால் நான் வரமாட்டேன்......

  ReplyDelete

வந்தவங்க எல்லாரும் கமெண்ட் போடுங்க, இல்லே கனவில வந்து கண்ணை நோண்டிப்புடுவேன்!!

Indli