Tuesday, June 18, 2013

மான் வெஜ் ஆனா நான் நான்வெஜ் (18/06/2013) புரசைவாக்கம்

ஆல்பம்..எனக்கு ஏன் அனானிகளை பிடிப்பதில்லை? மில்லியன் டாலர் கேள்வியின் விடையாக கிடைத்த தகவல்கள் கீழே

1.அனானிகள் மனித இனத்தை சேற்ந்தவர்களே அல்ல...
2. அனானிகள் யூதர்கள்
3.அனானி ஹிட்லரின் ப்ரதான அல்லக்கை
4.அனானிகளிடம் ரேஷன் கார்டு இருப்பபதில்லை
5.அனானிகள் மீ த பர்ஸ்ட்டு பின்னூட்டம் இடுவதில்லை

இப்போது தெரிகிறதா என்னுடய வெறுப்பிற்க்கான காரணம்


********************************

இலக்கியம்

மனம் ஓர் குரங்கு என்று சொல்லுவார்கள்.ஆனால் நானே ஒரு குரங்காக பிறந்ததற்காக மகிழ்ச்சி கொள்கிறேன் .பூமியில் பிறந்த மனிதனுக்கு என்றோ ஓர் நாள் காதல் என்ற ஓர் தெய்வீக உணர்வு நிச்சயமாக வந்திருக்கும் .

இரு தலையாக காதல் வரா விட்டாலும், ஒரு தலையாக நிச்சயமாக காதல் உணர்வுகள் அவன் மனதினைக் கட்டிப் போட்டிருக்கும் 
என்று என்னுடைய குடும்ப நண்பர் சொன்னார்.

நான் உடனே

 "நமக்கெல்லாம் ஒரு தலை தானே இருக்கிறது எப்படி இரு தலை காதல் வரும்"


 என்று வினவினேன் தலை வீங்கும் அளவுக்கு கொட்டி வைத்து விட்டார். உடனே தெரு முனைக்கு ஓடி சென்று அவரை கேட்ட வார்த்தையில் திட்டி விட்டு ஓட்டம் பிடித்தேன் போர் குழாயில் விழுந்திருக்கிறேன். நண்பர்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு போன் செய்து நேரலைக்கு ஏற்பாடு செய்யவும்.
********************************

கிரிக்கெட் பைத்தியமாகத்தான் இருந்தேன்.... எப்போது சோனி சிக்ஸ் சானலுக்கு சண் டைரக்டில் மாசம் 30 ரூபாய் என்றார்களோ அன்றோடு கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்திவிட்டென் ஆனாலும் சூதாட்டம் அது இதுவென சப்பைக்கட்டு கட்டி காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறேன். இதுவும் ஒரு பிழைப்பு


********************************

மிக்சர்.

 அம்மா கொண்டு வந்த திட்டதில் நான் பாராட்டும் திட்டம் அம்மா உணவகம்தான்...  அம்மா உணவகத்தில் சாப்பிட்டு விட்டு  சாப்பிட்ட தட்டை அப்படியே அபிட் செய்து வீட்டை நோக்கி விரைந்தேன். மகளிர் சுய உதவிக்குழுவினர் விரட்டி வவந்து வன்முறையை பிரயோகித்தனர்.

உடனே முகபுத்தகத்தில்

" ஏதோ ஏழை பாழை மகளீர் சுயஉதவிகுழுக்கள் வாயை  கட்டி வயித்தை  கட்டி ஏதோ வேலை செஞ்க்கிட்டு இருக்குங்க... அதுங்க அடி மடியில கை வைக்காதிங்கடே... நல்லா இருக்க மாட்டிங்க."

என்னும் நிலைத்தகவலைப்போட்டுவிட்டு லைக்குக்காக காத்திருந்தேன்.
********************************

 அப்படி இப்படி என UPS ஸ்டார் ஜெட்லி இயக்கியகுறும்படம் .... இன்றுடன் 50வதுவாரத்தை கொண்டாடுகின்றது... என்படத்தை விமர்சிக்க சினிமா அறிவு   நிச்சயம் இருக்க வேண்டும் என்று தனது வலைதளத்தில் சொன்னதாக தகவல்...


********************************

இந்த வார விகடனில் விகடன் மேடையில்....

பதிவர் ஜெட்லி ஒரு கேள்விக்கு நச்ன்னு பதில் சொல்லி இருக்கின்றார்...

உங்களைப் பற்றிய விமர்சனங்களை எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?''

''முதலில் நன்றாக கதறி அழுவேன். பின்பு முகத்தைத்துடைத்துவிட்டு அம்மா உணவகத்தில்  8 இட்லி, பின்பு தெருவில் சுற்றும் தெரு நாய் மீது கல்வீச்சு நடத்திவிட்டு அதனிடம் கடி வாங்குவேன். பின்பு எதிர் வீட்டு கவிதா அக்காவிடம் அரைமணி நேர அரசியல் விவாதம், பின்பு அலுவலகம் முடிந்து வரும் மனைவியிடம் வழாக்கம் போல விளக்குமாத்தடி,  இரவு சமையல் வேலை அடுத்து பாத்திரம் மற்றும் கக்கூஸ் கழுவுதல். இதெல்லாம்  முடிஞ்சதும் பக்கத்து வீட்டு Wi Fi திருட்டுதனாமா திருடி முகபுத்தகத்தில்''விமர்சிக்கப்படும் வரைதான் நான் உயிரோடு இருக்கேன்னு அர்த்தம். என் மீதான விமர்சனங்கள் நின்னுட்டாநான் இறந்துட்டேன்னு நினைச்சிக்கோங்க!''என்று ஸ்டேட்டஸ் போடனும் '(லூசு மோகன் வாய்சில் படிக்கவும்)  புச்சிருக்கு நைனா

********************************

OLDZEE  முதியோர்  பள்ளியில் படித்த போது கடலூர் ஆண்டிநாயர் தெருவில் இருக்கும் கிளை நூலகத்தில்,மல்கோவா ஆண்டி  பத்திரிக்கையை விரும்பி படிப்பதுண்டு... சரோஜாதேவியின் ஒரு பக்க கட்டுரையை தீவிரமாக வாசித்த காலம். நேற்று நான் பார்த்த புதிய பறவை படத்தில்  சரோஜாதேவி வந்து இருந்தார். அப்படியேதான் இருக்கின்றார்...

சேலை அணிந்து...ஆனால் எனக்கு 15 வயதாக இருக்கும்போது போட்டிருந்த அதே மஞ்சள் நிற சேலையையே இன்றும் அதே படத்தில் அணிந்திருந்தார் 
... அதுக்காகவே அவருக்கு ஹேட்ஸ் ஆப் சரோஜா மேடம்......


********************************

ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட்


கருப்பு கண்ணாடி அணிவதில் ஒரு உபகாரம் இருக்கின்றது. கருப்பு கண்ணாடி அணிந்தவர் எதிரில் இருப்பவரை நன்றாக பார்க்கலாம்... பிடிக்காதவர் என்றால் கவனிக்கவில்லை என்று சொல்லி டபாய்க்கலாம்...ஆனால் கண்ணாடி அணியாதவர்... பார்த்தாரா இல்லையா என்று புரியாமல் விழிப்பார்கள்... அப்படி கருப்பு கண்ணாடி அணிந்த பதிவர் கில்மா குமாருக்கு இரண்டு முறை வணக்கம் வைத்து ஏமாந்து இருக்கின்றேன்....
********************************

நேற்று மவுண்ட் ரோட்டில் நின்றுக்கொண்டு ஒரு ஆயிரம் ரூபாய் பணமுடையில் தவித்து போனேன்... எதிரில் ஈகோவுக்காக 88 கோடியை செலவு செய்து மருத்தவமனையாக மாறப்போகின்றது புதிய  தலைமைசெயலகம்... துறைமுக மதுரவயல் பறக்கும் சாலை 500 கோடி முழுங்கி 20 சதவிகித பணிகளை மட்டும் முடிந்து  அதே ஈகோ  காரணமாக பாதியில் நிற்க்கின்றது...பல   கோடிகளை கடலில் விழுங்கி விட்டு சேதுசமுத்திரம் முச்சு பேச்சு இல்லாமல் இருக்கின்றது...பணப்பிரச்சனை,கடன்  எல்லாம் சமான்யனுக்குதான்.... அதிகாரவர்கத்துக்கும் அரசுக்கு அது பற்றிய கவலையே இல்லை.

உடனே தலைமைச்செயலகம் சென்று என்னுடைய பங்கு பணத்தை திருப்பத்தரவேண்டும் என மம்மியிடம் கொரிக்கை வைத்தேன், கூலிப்படையை ஏவி விட்டிருக்கிறார்.

இது நியாயமா? வாசகர்கள் காப்பாற்றவும்.

********************************
மெட்ரோ ரயில்  பணிகள் பாதி முடிந்து  விட்டன...மெட்ரோ ரயில் பாலங்கள் நகரத்தில் ராட்சத அனகோண்ட பாம்பு  போல வளைந்து நெளிந்து  செல்கின்றன. உடனே அவற்றைப்பிடித்து கிண்டி பாம்புப்பண்ணையில் விற்க்கலாம் என முயற்ச்சி செய்தேன் பலனளிக்கவில்லை.

*******************************
அன்புடம்

பாதிவார் சாம்

Indli