Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Thursday, November 7, 2013

மான் வெஜ் ஆனா நான் நான்வெஜ் (07/11/2013) ஆரம்பம் ஸ்பெஷல்

தீபாவளி மிச்சர்

தீபாவளியன்று நல்லா மூக்குபிடிக்க தெருவெல்லாம் வாங்கி தின்றுவிட்டு சென்னையில் முக்கிய இடங்களில் எல்லாம் பாம் வெடிக்கப்போகிறது என கமிஷனர் ஆபீஸில் புரளியைக்கிளப்பிவிட்டு மெரினா கடற்க்கரை, சத்தியம் தியேட்டர் மற்றும் சத்தியபாமா யுனிவர்சிட்டி ஆகிய பகுதிகளில் பாமை வெளியேற்றினேன்.

திருட்டு முழியின் மூலமாக கண்டறிந்து பொதுமக்கள் தர்ம அடி அடித்தனர். அடி முடிந்ததும்

அடிச்சு முடிச்சிட்டிங்க தர்மம் எங்கே?

என உரிமைக்கு குரல் குடுத்தேன். தர்மம் போட்டனர்.

 உடனே நல்ல தொழிலாக இருக்கிறதே என்று அதே வேலையை தொடர்ந்தேன் தூரத்தில் ஒருவன் மரண அடி அடிக்கனும்டா என பாய்ந்தான் கார்பன் டை ஆக்சைடென காற்றில் மறைந்தேன்.


 ***********************************************

இப்போது விமர்சனங்களுக்கிடையே இயக்குனர்களுக்கும் நடிகர்களுக்கும் விர்ச்சுவல் பரிசுகளை அறிமுகப்படுத்தி இருக்கிறேன் அதாவது விமர்சனம் எழுதும்போதே

தீபாவளி ஸ்வீட் பாக்ஸ் பார்சேல்...........

புல்லட் பீர் பார்சேல்.....

போன்ற விர்ச்சுவல் பரிசுகள்.....


தீபாவளியை முன்னிட்டு போனஸ் கேட்டு மனைவியிடம் போராட்டத்தில் இறங்கினேன் விர்ச்சுவல் சம்பளம் குடுத்து, விர்ச்சுவல் சாப்பாடு போட்டு செருப்படி மட்டும் ரியாலிட்டியில் கிடைத்தது

*******************************************************

பொட்டு வெடி டப்பா ஒன்றினை நண்பர் ஒருவர் பரிசளித்திருந்தார் வெடிக்க மனைவியிடம் அனுமதி கேட்டேன் தீபாவளியாதளால் அனுமதி கிடைத்தது.

உடனே உரிமைஎடுத்து huggy time என்று கட்டிப்பிடிக்க முயற்ச்சித்தேன் 

மனைவியும் ஆமா ஹக்கிஸ் டைம் போய் குழந்தைக்கு ஹக்கிஸ் மாற்றிவிடு என் கன்னத்தைப்பெயர்த்தார்.

பன்றியும் தன் வாயால் கெடும் எனும் பழமொழியை நினைத்துக்கொண்டேன்.

வேலை முடிந்ததும் சட்டென பாம்பு மாத்திரைகளை பொருத்தி வைத்து மனைவியை மூச்சுத்திணற வைத்து நழுவினேன்.

************************************************

மும்பை பதிவர் நண்பர் அதுல் குல்கர்னி அவர்களிடம் மனைவி  அடியிலிருந்து தப்பிக்க  ஐடியா கேட்டிருந்தேன் அவர் தனது போலிஸ் நண்பர் உதவியுடன் குண்டு துளைக்காத ஜாக்கெட் பரிசளித்தார். உடனே ஜாக்கெட்டுடன் வீட்டுக்கு வந்து வீராவேசமாக பேசினேன்.

மனைவி மற்றும் மாமியார் கூட்டனி தாக்குதல் நடத்தி அடித்து  அடித்தே ஜாக்கெட்டை கிழித்தனர்.

தரமில்லாத ஜாக்கெட் போல :(.

சாவின் விளிம்பிலிருந்து தப்பித்திருக்கிறேன் .

ஆனால் இந்த ஊழலுக்கு காரணமான ஒருத்தரையும் சும்மா விடமாட்டேன்.
என சபதமிட்டு மும்பைக்கு திருட்டு  ரயிலேரி இருக்கிறேன்.



**************************************************


வாசகர் கடிதம் 


தமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு,

தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து, உங்கள் தமிழ் தலத்தில் விளம்பரங்கள் காண்பிப்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php . பதிவுசெய்து முற்றிலும் இலவசம் .

வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம்.

--------------------------------------------------
அன்பின் தமிழ்,


                      உங்களுடைய  " பதிவுசெய்து முற்றிலும் இலவசம் ", "தலத்தில்" ஆகிய சொல்லாடல்கள் மூலம் நீங்கள் என்னுடைய நீண்டநாள் வசாகார் என அறிகிறேன் என்னை நீங்கள் ரோல்மாடலாக கொண்டிருப்பதும் தெரிகிறது. நன்றி.

உங்களுடைய தளத்தை கடந்த ஒரு வார காலமாக ரிப்ரெஷ் செய்து கொண்டிருக்கிறேன், இன்னும் பணம் வரவில்லை.
உங்களுக்கு என் கண்டனங்கள்.

*********************************************

தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி அறிய நேர்ந்தது உடனே 1975ல் பெயிலான பத்தாம் வகுப்புத்தேர்வுக்கு மறுதேர்வுக்கு அப்ளை செய்துவிட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பள்ளிக்கல்வித்துறையிடம் கொஸ்டின் பேப்பர் கேட்டு விண்ணப்பித்திருந்தேன்.

நீதிமன்றம் வழக்கை
Rehabilitation Centre for Mentally Ill Persons என்னும் அமைப்புக்கு  பார்வார்ட் செய்திருக்கின்றனர் 


ஹ்ம்ம்ம்ம் நீதி கிடைக்கிறதா பார்க்கலாம்

Version 2


தகவலறியும் உரிமை சட்டம் பற்றி நண்பர் நக்கிலக் விளக்கினார். உடனே இந்த ஆண்டு SSLC  தேர்வுக்கு அப்ளை செய்துவிட்டு தகவலறியும் உரிமை சட்டம் மூலமாக தேர்வுத்தாள் கேட்டு நண்பர் காடுவிரும்பல் மூலமாக வழக்கு தொடர்ந்தேன் நீதிபதி  மூவரையும் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். சட்டம் அதிகாரவர்கத்திற்கு மட்டுமே என்பது மறுபடியும் நிரூபணமாகியுள்ளது..


**********************************************
நான்வெஜ் 18+

ஆரம்பம் படத்தில் நயன்தாரா வரும் ஹோட்டல் காட்சியை கண்டுகழித்துக்கொண்டிருந்தேன் அப்போது நயன்


"தம்பி அசஞ்சா சுட்டுடுவேன் "

 என சொன்னதும் முச்சை அடக்கிப்பிடித்து படம் பார்த்தேன் 



பிரியங்களுடன் 

சாம் 

Tuesday, October 22, 2013

ரொம்ப தேங்கஸ் ஜாக்கியன்னா

சென்னை அதன் மாலை நேர இயக்கத்தில் குறியாய் இருந்தது....

நேற்று  இரவு எட்டு மணி... அந்த நபர்    தனது தள்ளு வண்டியை தள்ளிக்கொண்டு வியர்வை வழிய கேகே நகர் சிவன் பார்க் அருகே தள்ளிக்கொண்டு நடந்து சென்றுக்கொண்டு இருந்தார்....

முதலில் அவரை நான்  தாண்டி சென்றாலும் மனது கேட்கவில்லை... ஒருவேளை பெட்ரோல் இல்லையென்றால் அந்த நபர் எவ்வளவு தூரம் நடந்து செல்ல  வேண்டி வரும்? பக்கத்தில் பெட்ரோல் பங்கும் இல்லை...



காலையிலேயே மனைவியிடம் விளக்குமாத்து பூசை வாங்கியாகிவிட்டது ...வீட்டுக்கு அவசரமாக போய் பெரிய வேலை இல்லை என்பதால் அந்தநபர்   நடந்து வர  காத்திருக்க ஆரம்பித்தேன்...

இது போல வலிய உதவி செய்ய போகும் போது இருக்கும் பெரிய  பிரச்சனை என்னவென்றால்..?  இது போன்ற நபர்கள் நம்மை தோஸ்த்தானாவாக  நினைத்துக்கொண்டு  நம்முடைய வாயில் வெற்றிலை பாக்குபோட வைத்து விடுவார்கள்.

நானும் நண்பர் தள்ளுவண்டி தங்கராசுவும் 

நாய் நக்கும் இயல்புடையது .... நான் காப்பாற்றும் இயல்புடையவன்(அடுத்தவன் காசில்)   என்ற அந்த சித்தாந்தத்தை ஒரு சில இடங்களில் நான்பிரயோகப்படுத்தி ஆசுபத்திரியில் அட்மிட் ஆகியவன் ...ஒரு வேளை அந்ததள்ளுவண்டிமீன்பாடி  வண்டியாக இருந்தால் அய்யகோ.....இப்படி முட்டாள்தனமாக உளறிவிட்டு காரணமே இல்லாமல்   சரி கிளம்பலாம் என்று நினைத்தேன்...

 ஒருவேளை அந்த நபருக்கு இன்று தேர்வு ஏதேனும் இருந்தால்  லேட்டாகிவிடுமே இன்னும் அந்த  வேதனையோடு எவ்வளவு தூரம் நடக்க வேண்டுமோ? என்று  யோசித்த காரணத்தால் நின்று வெயிட் செய்தேன்...


த்தா என்ன பிரச்சனை. பெட்ரோல்  இல்லையா?

பங்க் பக்கத்துல எதுவும்  இல்லை... நான் வேணா வாங்கி வரட்டா...

இல்லைங்க  இன்னும் ரெண்டு தெரு தள்ளிதான் வீடு... தம்பிக்கு போன் செஞ்சி இருக்கேன்...  வந்துக்கிட்டு இருக்கான்...

அப்ப சரிசார் ... நான் கிளம்பறேன்....

அண்ணா.....

நான் திரும்பினேன்...



பொளேர் என கன்னம் பழுத்தது ...ஏன்டா   நானும் 40 வருஷமா தள்ளு வண்டி தள்ளிகிட்டு இருக்கேன் மனநிலை பிறழ்ந்தவன் கூட பெட்ரோல் இல்லையான்னு  கேள்வியை கேட்டதில்ல போ அந்தால என் தாக்கத்தொடங்கினார்.

ரொம்ப தேங்கஸ்ண்ணா என்றேன் .....

ஏன்டா இந்த அடி அடிக்கிறேன் தேங்கஸ்கிற என்றார் 

இல்ல தினுமும் பொண்டாட்டி அடிப்பா இன்னிக்கு நீங்க அடிச்சு ஒரு மாறுதல் குடுத்துருக்கிங்க அதான் என்றேன் 

 அண்ணா என  அழைக்கு சில அழைப்புகளில் பாசமும், நேசமும் , கனிவும் ஒளிந்து இருக்கும்.

ஆனாலும் அடி தொடர்ந்தது. நடைபாதை மக்களும் ஆளுக்கு ஒரு கை போட்டனர் 

இந்த  தேங்ஸ்ண்ணாவில் எல்லாமும் உணர்ந்தேன்..(என்னா அடி )



பிரியங்களுடன்
சாம் .


Monday, September 9, 2013

மான் வெஜ் ஆனா நான் நான்வெஜ் (09/09/2013) ஆண்டிபட்டி

எவ்வளவு ஆடிச்சாலும் தாங்குவான் அப்படின்னு இருந்தா..மனைவியும் , மாமியாரும் வாலை ஆட்டிக்கிட்டுதான் இருப்பாங்க... இவ்வளவு ஏன் சீராட்டி பாராட்டி  வளர்த்த   என் மச்சினிச்சி மரகதம் கூட  நாளைக்கு என்னை செருப்பால் அடித்துவிட்டு நாயின்னு நெனசிட்டேன்னு சொல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை.
பால்ய கால நினைவுகள் :(


இதை உணர்ந்து உடனடியாக அடுத்த வீட்டுக்காரர்  வீட்டை அவரது மனைவியுடம் ஆக்கிரமிக்க திட்டமிட்டேன். வன்புணர்வு வழக்கில் உள்ளே தள்ளியிருக்கிறார்கள் 

******************************************
பக்கத்து வீட்டில் செருப்பு திருடிய வழக்கில் எனக்கு 15 நாட்களுக்கு பின் ஜாமீன் கிடைத்திருக்கிறது. பக்கத்து வீட்டுக்காரன் மலையாளி  இப்போது எனக்கு ஜாமீன் கிடைத்தாலும்  பேஸ்மென்ட்டில்  மலையாளிகளின் லாபி காரணமாக நியாயம் கிடைக்காமல் போய்  விடுமோ என்று யோசிக்க வைக்கின்றது. எதுவும் நடக்கலாம்..  காரணம்  அவர்கள் ஒற்றுமை அப்படி... (என்னா அடி )
************************************
சென்னை  கவிமணி சாலையில்  அதிகாலை இரண்டு மணிக் சைக்கிள் ரேசில் ஈடுபட்டுகொண்டிருந்தேன் ... வாட்ச்மேன்கள் கண்டித்தும், திரும்பவும் சேசிங், வீலிங் என்று  இறங்கினேன் ...  விரட்டிப்பிடித்து சாணியை வாளி வாளியாக ஊற்றி குளிப்பாட்டி அடித்தனர்  


எனது ரேஸ் சைக்கிள் 

பாஸ்ட் பியுரியஸ் படம் பார்த்துட்டு பைக் ரேஸ் போனா, போதையில இருக்கோம்,... எவன் என்ன செஞ்சிடுவான்னு பார்த்துடலாம்ன்னு நினைச்சா இப்படித்தான்  ஆவும் என பாடம் கற்றுக்கொண்டேன் 

***********************************************************

மிக்சர்

 சென்னை முகப்பேரில்   ஒரு பெண்ணை கிண்டலடித்த என்னை செருப்பால் அடித்து கொடுரமாக கொடுமைப்படுத்தி இருக்கின்றார்கள் அப்பெண்கள் ... அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிராணி நல  சங்கங்கள் போராட்டம் நடத்தி இருக்கின்றார்கள்...

******************************************************

காலையில் வீட்டு கேட்டை திறந்து ,கேட்டுலயே சாவியை அதுலேயே விட்டு விட்டு மறந்துட்டேன்... அரைமணி நேரம் கழிச்சி கதவுக்கிட்ட போறேன்... கேட்டுல பூட்டு சாவி தொங்குது.

ச்சே எவனாவது இங்கிலிஷ் படத்துல திருடறது போலகேட்ல இருக்கற பூட்டு சாவியை இந்த அரைமணி நேரத்துல எடுத்துக்கிட்டு போய் சோப்புல அச்சி போட்டு ,தெரியாம வந்து வச்சிட்டா?

கோத்தாநம்மக்கிட்டயேவாஉடனே சாவியை நான் மொந்து பாத்தேன்...ம்ஹும்  சாணி நாத்தம் அப்போதுதான் சாவி சாக்கடையில் விழுந்தது நியாபகம் வந்தது ... இதுல பெரிய ஷெர்லக் ஹோம்ஸ்ன்னு நினைப்பு மயிறு வேற...

குறிப்பு :  ஷெர்லக் ஹோம்ஸ் - வீட்டில் குழந்தைக்கு வைத்திருக்கு செரலாக்கினை திருடி தின்று மாமியாரிடம் சீவக்கட்டை அடிவாங்குவத்தின் காரணமாக அமைந்த காரணப்பெயர் 

******************************************
கடனுக்கு வேலை செய்யறவனை விடரசிச்சி வேலை செய்யறவனை எனக்கு ரொம்பவே பிடிக்கும்... முந்தா நாள் நைட்டு ஓஎம்ஆர்ல அந்த ஷேர் ஆட்டோவை பார்த்தேன்... ஷேர் ஆட்டோ எண். TN -07-AM 5758- PIAGGIO டைப் ஷேர் ஆட்டோ... ஆட்டோவுக்கு உள்ளே ரெண்டு பக்கமும் புக்ஸ்... பேப்பர்... ஒரு பக்கம் வார இதழ்கள் மறு பக்கம் தினசரி பேப்பர்... அதுமட்டும் அல்ல சின்னதா டிவியில் சிஎன்என் ஐபிஎன் இங்கிலிஷ் நியூஸ் ஓடிக்கிட்டு இருக்கு....


 பிட்டுப்படம் தெரியுமா எனக்கேட்டேன் அடித்துவிரட்டினார் த்தா 5 ஓவா மிச்சம்னு மனதைதேத்திக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன் . ஆனாலும் மனதில் ஒரு  இனம்புரியாத குழப்பம்,

அநேகமா அது அடையார்திருவான்மியூர்ஓம்ஆர் ரோட்டுலதான் அந்த ஷேர் ஆட்டோ சுத்திக்கிட்டு இருக்கும்... ஒருவேளை நீங்க யாராவது பார்த்தா அந்த ஷேர் ஆட்டோடிரைவரிடம்  பிட்டு வருமான்னு கேட்டு எனக்கு தகவல் சொல்லவும்.....


மனசத்தம் (Mind voice) : நான் பெற்ற அடியை அனைவரும் பெருக 

********************************************

நள்ளிரவு 15 கொசுக்களை கொன்று விட்டு என்னை நானே சீரியல் கில்லர் என பிரகடனப்படுத்திக்கொண்டென் FBI கைது செய்து Guantamo சிறை  கொரில்லா செல்லில் கொரில்லாவாக பணிஆனை வழங்கியிருக்கின்றனர் (அவர்களுக்கு என் நன்றிகள் )....

என் ஐடி கார்டு புகைப்படம் 


*******************************************

மகளிர் தினம் முதல் மணமாகாத  பெண்களின் எதிர்கால நலனை கருத்தில் என்னுடைய குருநாதர் சேலம் சிவராஜ் ஆணைக்குஇணங்கி ஆங்கில பட விமர்சனங்கள், ஹாட் ஹாட்டர்  ஹாட்டஸ்ட், அடல்ட் கார்னர்  நிறுத்தப்படுள்ளது 




Tuesday, June 26, 2012

கேபிள் ஆண்டர்சன்- குத்துப் பரோட்டா - 26/06/2012


   தமிழ்நாட்டில் வர வர மல்ட்டிப்ளெக்சுகளின் தொல்லை அதிகமாகிக்கொண்டே வருகிறது
டிக்கெட் இல்லாமல் உள்ளே செல்ல முடியவில்லை
ஓ எம் ஆர் ஏ ஜீ எஸ் மல்ட்டிப்ளெக்ஸில் சென்று காலை முதல் மாலை வரை ஓய்வெடுத்துக்கொண்டிருந்தேன் அப்போது காவலாளி பிடித்து
  ஒன்னும் வாங்கவும் மாட்ட இங்கயே ஏ சில ஒக்காந்துட்டு ஓடுடா 
என அடித்து துவைத்தார்
KFC போராட்டம் நான் நண்பர் கில்மாவுடன் (வலது & இடது)

உடனே அவரிடம்
பி வீ ஆர் மால் வர்ரவரதாண்டி உங்க ஆட்டம் என கத்திவிட்டு ஓடத்தொடங்கினேன் 

மால் மேனஜர் டிக்கி பஞ்சர் ஆகுமாறு எட்டி உதைத்தார்

பின்பு நேராக ஃபுட்கோர்ட்டிற்க்கு சென்று குடிநீர் கேட்டேன் இல்லை என்றனர் உடனே அங்கு சாப்பிடவருபவர்கள் அனைவரிடமும் சென்று

அண்ணே பர்கர்ல கோழி செத்து கெடக்கு இங்க வாங்காதிங்க

என்னும் மொக்கையை போட்டென் கக்கூஸ் வாளி நிறைய நீரை ஊற்றி துரத்தினர்

==============================

மீண்டும் ஒரு டெர்ரரான ரேப் கேஸ் ராணுவ வீரரின் மனைவியை AC காரில் வைத்து  மிரட்டி கற்பழித்திருக்கிறார்கள்
உடனே நானும் வாடகை காரை எடுத்துக்கோண்டு ராணுவ வீரரின் மனைவியை தேடத்தொடங்கினேன் இறுதியாக கண்டுபிடித்து காரில் ஏற்றிக்கொண்டு மிரட்டத்தொடங்கினேன்
தற்ப்போது புழல் சிறையில் உள்ளேன் கைதி எண் : ஏக் தோ தீன் (123)

அடல்ட் கார்னர்

குறிப்பு : மிரட்டும் போது மனைவியுடன் ராணுவ வீரரும் அமர்ந்திருந்தார் ஹி ஹி ஹி

==============================

கடந்த சில நாட்களாக சென்னையில் பெட்ரோல் தட்டுப்பாடு எல்லா பங்குகளிலும் உள்ளது என்வே ரேஷன் முறையில் பெட்ரோல் போடுகிறார்கள் என நண்பர் சொன்னார் உடனே நானும் ரேஷன் கார்டுடன் பெட்ரோல் பங்கை நோக்கி விரைந்தேன்.

 ஆனால் அங்கு லிட்டர் 75 ரூபாய் தான் என்றும் ரேஷன் கார்டு தேவையில்லை என்றும் சொன்னார்கள் உடனே கடும் கலவரம் செய்து
ரேஷன் கடையில் விலை குறைவாகத்தானே இருக்க வேண்டும்? அதனால்
 பங்கை மூடு பங்கை மூடு “ 
என்று கோஷமிட்டேன் 

பெட்ரோல் ஊற்றி கொளுத்த முயன்றனர் தலை தெறிக்க ஓடி தப்பித்தேன்
=============================

கடந்த வாரம் இயக்குனர் சேரனை ஒரு விழாவில் சந்தித்தேன் நான் தான் டேபிள் என்றேன்
அப்படியா கான்ஸ்டேபிளா எந்த ஸ்டேஷன்ல?


 என்று காமெடி(?) அடித்தார் அண்ணே இந்த காமெடிய உங்க படத்துல
 வச்சிருந்தா யாராவது பாக்குறமாதிரி இருந்திருக்கும் என்றேன்.

பின்பு அவரிடம் நான் எழுதிய “முரண்” திரைப்பட விமரிசனத்தினை காண்பித்தேன். ”ஆட்டோக்ராஃப்” சேரன் “யுத்தம் செய்” சேரனாக மாறினார்.
===============================
இருட்டுல சோறு

சென்னையில் பார்க் ஷெரட்டன் ஓட்டலில் கண்ணைகட்டி டின்னர் சாப்பிடும் உணவகம் தொடங்கி இருப்பாதாக நண்பர் ஒருவர் சொன்னார். சர்வர் கூட இருட்டில் தான் இருப்பர்கள் என அறிந்ததும் உடனடியாக சென்று ஃபுல்மீல்ஸ் சாப்பிட்டு விட்டு இருளோடு இருளாக மறைந்து வெளியேறினேன் வெளிச்சத்தில் நின்றிருந்த வாட்சுமேன் பிடித்து மேனேஜரிடம் ஒப்படைத்தார் அவரிடம்

 “அண்ணே நான் தான் சோத்த பாக்கவே இல்லையே அண்ணே அப்போ ஃப்ரீ தானே 

என்றேன் பாத்திரம் கழுவ வைத்திருக்கின்றனர்.
பாத்திரம் எல்லாம் சுத்தம் ஆனதும் மனநல காப்பகத்தில் சேற்க்க இருக்கின்றனர்

===========================


மொட்டை மாடியை வாடகைக்கு விடறீங்களா?
ஆம் உங்கள் மொட்டை மாடியை நீங்கள் வாடகைக்கு விடுவதன் மூலம். இந்தியாவின் மின்சாரத்தேவையை குறைக்கப் போகிறீர்கள். அதற்காக நீங்கள் எந்த முதலீடும் செய்யத் தேவையில்லை. ஆனால் பலனும், வருமானமும் நிச்சயம் உண்டு. உங்களுடய முதலீடு உங்களது மொட்டை மாடியை எங்களுக்கு அளிப்பதே என்கிறார்கள் Bridge to India நிறுவனத்தினர். உங்களது மொட்டை மாடியில் சோலார் பவர் தகடுகளை அவர்களே இன்ஸ்டால் செய்து அதன் மூலம் வரும் மின்சாரத்தை உங்களுக்கும் பகிர்ந்தளித்து அதன் மூலம் வரும் வருமானத்தையும் பகிர்ந்து கொள்கிறார்களாம்.

இந்த விளம்பரத்தை பார்த்தது பதிவர் ஜெட்லியை அழைத்துக்கோண்டு Bridge to India நிறுவனத்திற்க்கு சென்று

இந்த மொட்டை மாடியில் மின்சாரம் தயாரிக்க மாதம் எவ்வளவு பணம் தருவீர்கள்?

எனும் வினாவினை முன்வைத்தேன் இருவருக்கும் ஷாக் ட்ரீட்மெண்ட் ஏற்ப்பாடு செய்துள்ளனர்
 =====================================

                                               கேபிள் 

Tuesday, April 10, 2012

அட்ரா சக்க சி பி செந்திகுமார் பேட்டி காமெடி கும்மி பாகம் 1

1.சி பி என்பதன் விளக்கம் ?    

நான் +1 படிச்சப்ப.. நம்ப மாட்டீங்களே.. சரி சரி.. +1 படிக்கறேன்னு சொல்லிட்டு ஸ்கூலுக்கு போனப்ப ஃபர்ஸ்ட் குரூப் இங்கிலீஷ் மீடியம்ல 4 செந்தில்குமார் இருந்தாங்க ( ஏய்.. எல்லாரும் கேட்டுக்குங்க.. நான் இங்கிலீஷ் மீடியம்,
இங்கிலீஷ் மீடியம் பிரபல ரவுடி ஹி ஹி ) அதுல 2 பேரு இனிஷியலும் P தான்.. அதனால அவங்கவங்க தாத்தா பேரை செகண்ட் இனிஷியலா போடச்சொன்னாங்க.. எங்க தாத்தா பேரு ஆறுமுகம்.. A வருது.. என் பேர்ல ஏ வரலாமா? ஏன்னா நான் ஒரு கண்ணியமான, கவுரவமான ஆள் ஆச்சே ஹி ஹி( சொன்னா நம்பனும்) அதனால ஊர் பேரை சென்னிமலை (CHENNIMALAI) C  இனிஷியல்ல சேர்த்துட்டேன் ..  ( ஹூம்.. கேள்வி கேட்கறது ஈசி.. அதுக்கு பதில் சொல்றது ரொம்ப கஷ்டம்.. )


சா ஆ : சும்மா சொல்லாதிங்க பாஸ் ஸ்கூல்ல சிலுக்கு நடிச்ச பிட்டு படத்த பாத்து மாட்டிருப்பிங்க அதான் சிலுக்கு பிட்டு செந்தில் சி பி ஆகிடுச்சு ஹி ஹி ஹி 




2. .முதன்முதலாக நீங்க பார்த்த படம்? 

அது சரியா நினைவில்லை.. ஆனா எங்கப்பா சொன்னது எம் ஜி ஆர் நடிச்ச நாடோடி மன்னனாம்.. சண்டைக்காட்சி வந்த போது முன்னால் அமர்ந்திருந்த ஆளை செல்லமா அடிச்சேனாம் 



சா ஆ : அதுக்கப்புறமா முன்னாடி இருந்தவன் உங்க ரெண்டு பேத்தையும் வீடு வர வெரட்டி வெரட்டி அடிசிருப்பானே அத சொல்லல? ஹி ஹி ஹி 


3.இதுவரை எத்தனை படம் பார்த்திருப்பீர்கள் ?                                                       

அதுவும் கணக்குல வைக்க முடியல. 1992 ல இருந்து ரிலீஸ் ஆகற 90% படங்களை பார்த்திருப்பேன்னு நினைக்கறேன், அது போக எங்கப்பா கால கட்டத்து ஹிட் படங்கள் எல்லாமே பார்த்துட்டேன்.. 



சா ஆ :ஏன் உங்க அப்பா கால சதுர மற்றும் கால வட்ட படங்கள பாக்கலியா? அவ்வ்வ்வ்வ்




 
4.எத்தனை படத்துக்கு விமர்சனம் எழுதியிருப்பிர்கள் ?  
பிளாக்ல இதுவரை 140 படங்களுக்கும், சாவி வார இதழில் 29 படங்களுக்கும், இதயம் பேசுகிறது வார இதழில்  17 படங்களுக்கும், நியூ ஃபிலிமாலயா இதழில் 9 படங்களுக்கும் எழுதி உள்ளேன்  

சா ஆ: ப்ளாக்ல எவனாவது படிக்க வாய்ப்பு இருக்கு சாவி அண்ட்  நியூ ஃபிலிமாலயா சுத்தம் ஹி ஹி ஹி 



5.முதன்முதலாக விமர்சனம் எழுதிய படம் எது ?        

களவாணி ( பிளாக்ல) நல்ல நேரம் சதீஷ் அவர் பிளாக்ல  என்னை எழுத வெச்சார்.. அப்போ அந்த படம் எந்த வித எதிர்பார்ப்போ, பர பரப்போ இல்லாம வந்தது, படம் ரிலீஸ் ஆன அன்னைக்கே மாலை 3  மணிக்கு விமர்சனம் போட்டேன்.. களவாணி - சூப்பர் ஹிட் இதுதான் டைட்டில்.. நான் கணித்த படி படம் ஹிட், ஆனால் கேபிள் சங்கர் சார் தன் விமர்சனத்தில் அந்த படம் சுமார் தான் எனவும் அதன் வெற்றி குறித்து தன் சந்தேகத்தை வெளீப்படுத்தி விமர்சனம் செய்திருந்தார்.. அப்போ நான் சதீஷ் கிட்டே “ அய்யய்யோ, என் கணிப்பு தப்பா போயிடுச்சே, இப்போ என்ன பண்ண்லாம்?னு கேட்டேன்.அவர் வெயிட் பண்ணலாம்னார். ஆனா விகடன் விமர்சனம் வந்ததும் சமாதானம் ஆகிட்டேன்.


சா ஆ : அதுக்கப்புறமா கிட்டத்தட்ட எல்லா படங்கள்லயும் பல்பு வாங்குனத சொல்லவே இல்லையே..... 



6.முதன்முதலாக எழுதிய பதிவு நினைவிருக்கிறதா ? அந்த பதிவின் பெயர் ?

 சப்ப மேட்டர்.காம் எனும் இணையத்துக்காக  சினிமா நியூஸை கிண்டல் அடித்து ஒரு காமெடி கும்மி போஸ்ட் போட்டேன்.. 

சா ஆ : சப்ப மேட்டர் இப்படி மொக்க மேட்டர கோர்த்து உட்டன்களே அவ்வ்வ்வ் 

7.தங்களின் குடும்பம் பற்றி கூறுங்களேன் ?                                                             

 எனக்கு அம்மா, அப்பா, அக்கா, மனைவி,  மகள்  என்ற சொந்தங்களில் அப்பா இறந்து விட்டார்.. அக்கா ஈரோட்டில் அரசு பள்ளி ஆசிரியர், மனைவி ஈரோடு தனியார் கல்வி நிலைய ஆசிரியை..அம்மா டெய்லர்.. மகள் பெயர் அபிராமி 3 ஆம் வகுப்பு படிக்கிறார்

சா ஆ: வாழ்த்துக்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு....

நண்பர் “பன்னி-பக்ஸ்”

8.அட்ராசக்க என்ற பெயரை தேர்வு செய்ய காரணம் எதாவது இருக்கிறதா ? இருந்தால் கூறுங்களேன் ?    

 நான் கவுண்டமணி  ரசிகன்.. மதுரை வீரன் எங்க சாமி படத்தில் அவர் அடிக்கடி அட்ரா சக்க அட்ரா சக்க என்ற டயலாக்கை சொல்வார்.. படம் செம காமெடி ஆனாலும் அந்த கால கட்டத்தில் அது சுமாரா தான் போச்சு டைட்டில் முக்கிய காரணம் .. அதையே ப்ளாக் நேம் ஆக்கிட்டேன்.. நான் எழுதும் ஒவ்வொரு மேட்டரும் அட்ரா சக்க என எல்லாரும் சொல்லும்படி இருக்கனும்னு நினைச்சேன்.. ஆனா பெரும்பாலும் போட்றாண்டா மொக்கை என  திட்டும்படி ஆகிடுது அவ்வ்வ் 

சா ஆ:இப்பொ எதுக்கு மேட்ச் ஆகுதோ இல்லயோ உங்கள எல்லாரும் அடிச்சு சக்கயா புழிஞ்சு எடுக்குரதுக்கு அல்லது இனிமே புழிஞ்ஜு எடுக்குரதுக்கு இது சூப்பர் டைட்டில் பாஸ் 

9.விமர்சனம் எழுதுனதிலேயே மிகவும் திருப்தியாக உணர்ந்த படம் எது ?     

வ குவாட்டர் கட்டிங்க் காமெடி படம் தான். ஆனா படம் ஓடலை.. அதுல வந்த காமெடி வசனங்கள் அனைத்தையும் நினைவு வைத்து போட்டது ரொம்ப சவாலா இருந்துச்சு.. ஏன்னா என் மெம்மரி கெப்பாசிட்டி ஆரம்பத்துல 20 டூ 25 வசனங்கள் தான் தாங்குச்சு.. ஆனா இந்த படத்துல தான் முதன் முதலா 45க்கும் மேற்பட்ட ஜோக்ஸ் ஞாபகம் வெச்சு எழுதுனேன்..

சா ஆ : அப்பு...அத நாங்க சொல்லோனும் நீங்களா சொல்லிக்க கூடாது... ஆமாஆந்த ஜோக்ஸ் எத்தன பேரு படிச்சிருப்பங்கன்னு நினைக்கிறீங்க ஒரு பய படிச்சிருக்கமாட்டான்

  10.விமர்சனம் எழுதுனதிலேயே மிகவும் மொக்கையாக உணர்ந்த படம் எது ?
  
நாம புடுங்கற எல்லாமே தேவை இல்லாத ஆணிகள் தான்.. மொக்கை ப்படமா அமைஞ்சுட்டா விமர்சனத்துல காமெடி கலந்து சமாளிச்சுக்குவேன், படம் தான் போர் அடிக்கனுமே தவிர பட விமர்சனம் போர் அடிக்கக்கூடாதுன்னு கவனமா இருப்பேன். ஆனாலும் என்னையே கதி கலங்க வைத்த மொக்கைப்படம் 365 காதல் கடிதங்கள் ..ராமராஜன்,பவர் ஸ்டார் படங்கள்க்கு விமர்சனம் எழுதமாட்டேன்,ஹி ஹி 


சா ஆ : கிட்டத்தட்ட எல்லா விமர்சனங்களுமே மொக்கை தான் . ராமராஜன் பவர் ஸ்டார் நான்(சாம் ஆண்டர்சன்) எவ்வளவோ பரவாயில்லை

Thursday, March 15, 2012

எடக்கு மடக்கு பய டேட்டா



பெயர் எடக்கு மடக்கு

புனைப்பெயர் எட்டக்கு மட்டக்கு

தலைவர்  :  புரட்சிக்காரன்

உபதலைவர்கள்  :  வெளங்காதவன் & போரூர் சானா பொந்தில்

பிரதான அல்லக்கை பன்னி பக்ஸ்

வயது அந்த 30 நாட்கள்

தொழில்ஆளே இல்லாத கடையில்
அரக்கப்பரக்க டீ ஆத்துவது

உபதொழில் பத்து ரூபாய் சேர்ந்த உடனே கம்ப்யூட்டர்
                                                               செண்டருக்குப் போய் கமெண்ட் போடுவது

பலம் வேலை வெட்டி எதுவும் இல்லாதது

பலவீனம்கண்ணீர் அஞ்சலி பதிவிற்கு வந்து காலில் விழுந்தது

சமீபத்திய சாதனை  :  ஆளுக்கு 30 ரூபாய் சேர்த்து டொமைன் வாங்கியது

நீண்ட கால எரிச்சல்  :  வலையுலகில் யாரும் கண்டுக்காம விட்டது

சமீபத்திய எரிச்சல்  :  ஹீரோ சாம் ஆண்டர்ஸன்

நண்பர்கள் நண்பா, அக்கா என அன்போடு அழைக்கும்
   அல்லக்கைகள்

எதிரிகள் : ஐடியா மணி, நிரூபன், கில்மா குமார் மற்றும்
   பக்கி உலகம்  (இது வரை)

ஆசை  : ஒரே ஒரு நல்ல பதிவரிடமிருந்தாவது
   அட்லீஸ்ட் ஒரு கமெண்ட்?

நிராசை  : 50 ஆவது பாலோயர்

பாராட்டுக்குரியது  : என்னைப் பிரபலமாக்கியது.........
                                                   அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பயம்  : இல்லாத மாதிரி காட்டிக்கொள்வது

கோபம் : வந்த மாதிரி நடிப்பது

கருத்து : இவர்கள் மட்டும் சொல்வது

ஒரே ஆறுதல் : கோவில்பட்டி வீரலட்சுமி

பாடல் : எட்டனா இருந்தா எட்டு வூரும் எம்பாட்ட கேக்கும்...

பின்குறிப்பு : வாந்தி எடுப்பவர்கள் வழக்கம்போல் தாங்கள் தங்கள்
வீடுகளுக்குப் போய் எடுக்கவும்.. மீறுபவர்கள் மீது வழக்கம்போல்
காரி துப்பப்படும்..

 
Sam Anderson
                                                                                                                                                                                                               

Indli