Monday, January 23, 2012

மான் வெஜ் ஆனா நான் நான்வெஜ் (23/01/1947) திங்கள்


அடிமேல் அடி விழுந்தா அம்மியும் நகரும் என்று ஒரு பழமொழி இருப்பதாகச் சொன்னதும் ஒரு கம்பு வாங்கி வந்து எங்கள் வீட்டு அம்மியை அடிக்க தொடங்கி இருக்கிறேன்..

   ஹ்ம்ம் நகருகிறதா பார்க்கலாம் 

=====================================

ஒரே ஒரு மாவட்டமான கடலூர் மட்டும்தான் தானே புயலால் பாதிக்கபட்டு இருக்கின்றது.. இதுக்கே நிவாரண பணிகளில் மெத்தனமான நிலைமை என்றால், தமிழ்நாடு முழுவதும் பாதித்து இருந்தால்...... அடராமா? நினைக்கவே பயமா இருந்ததால் பக்கத்து வீட்டுப் படுக்கை அறையில் ஒளிந்து இருந்தேன்.. தர்ம அடி அடித்து அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர் ...

===================================

புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற்றீர்களா? என்று  கேள்வி கேட்டேன் மம்மி யானைகள் சரணாலயத்தில் சாணி அள்ளும் வேலை குடுத்திருக்கிறார்.... வேலையில்லாத நாதாரியான எனக்கு வேலை குடுத்த முதல்வருக்கு என் நன்றிகள்!

==================================
சென்னை போன்ற பெருநகரங்களில் கள்ள நோட்டுக் கும்பல் தினமும் பிடிபட்டு வருவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன..அவர்களைத் தேடிப் பிடித்துக் கள்ள நோட்டு கேட்டேன்.. 250 ரூபாய் நோட்டு இரண்டு குடுத்தனர். வாங்கிகொண்டு அவர்களைப் போலீசில் பிடித்து கொடுக்கப் பார்த்தேன்.. மரண அடி கிடைத்தது ...=============================================

புதியதலைமுறை செய்தி சேனலில் நண்பேன்டா நிகழ்ச்சியில் பேசும் பெண்மணி ஒருவர் எதிராளிகள் அமைதியாகப் பொறுமையாகக் கருத்தை முன் வைத்துப் பேசும் போது கூட, அவர் குரல் உயர்த்தி பேசுவது ஏன் என்று  தெரியவில்லை..  அதற்காக திருச்சியில் 4 நாள் ரூம் போட்டுக் காரணத்தை ஆராயலாம் என்று இருக்கிறேன்.... தனி பதிவும் போடுவேன்.. ஓட்டுக்களும் தேவை.
===============
சில வருடங்களுக்குமுன் லேடர் 49 ஹாலிவுட் படத்தைப் பார்த்த போது இரண்டு நாட்களுக்கு தூக்கம் இல்லாமல் தவித்தேன்...அந்த படத்தில் கதை ஆங்கிலத்தில் இருந்ததால் எனக்குப் புரியவில்லை.. பின்பு லேடர் என்றால் ஏணி என தெரிந்து கொண்டு ஏணியில் ஏறி யோசிக்கத் தொடங்கினேன். அப்போதும் கதை புரிந்தபாடில்லை .. 


===============================================

மிக்சர்.
மாட்டுப்பொங்கல் அன்று சென்னை புத்தகக்கண்காட்சிக்கு போயிருந்தேன்.. பதிவர்கள் அனைவரும் எனக்குப் பொங்கல் படைத்து மகிழ்ந்தனர். லீவ் நாள் என்பதால் நல்ல கூட்டம்....நான் கடன் வாங்கியிருந்த நிறைய பேர் அடையாளம் கண்டு கொண்டார்கள். முக்காடுடன் வலம் வரத் தொடங்கினேன். சாகித்திய அகாடமி ஸ்டாலில் நானும் விட்டில்பூச்சி ஜோதிகாவும் வந்த போது, மேற்குப் பதிப்பகம் கில்லி வந்தார்..பதிவுலக சூப்பர் ஸ்டார்... என்று என்னை அழைத்தார்.. அங்கு சுத்திக் கொண்டிருந்த சொறி நாய் முதலில் அவரைக் கடித்து வைத்து விட்டு என்னை ஒரு கை பார்த்தது..


===================================================

நான், பெருச்சாளி மற்றும் ஜோதிகா மூவரும் சாரு நேர்க்கானல் நடக்கும் இடத்துக்கு போய் இருந்தோம்..59 வயது ஆகின்றது... இன்னும் தமிழகத்தின் வெகுஜனமக்களிடம் செல்ல போராடிக்கொண்டு இருக்கின்றேன் என்றார்.. அடுத்த பத்தியிலேயே எனக்கு அங்கீகாரம் கிடைத்து விட்டது எனும் தொனியில் எழுதினேன். அவரது “கொசு யானையை புணர்ந்த கதை”யில் என்னைக் கொசுவாக பிரகடனம் செய்திருக்கிறார்.. அவருக்கு என் நன்றி கலந்த கண்டன வாழ்த்துக்கள்..


=============================================
இந்தவாரக் கடிதம்..

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது ! 

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது ! 

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

நன்றி நண்பரே அப்படியே செய்கிறேன் 

பிரியங்களுடன்

சாம் ஆண்டர்சன் 

========================================================
பிலாசபி பாண்டி

அரியலூர் மாவட்டம் சமயனல்லூரிலிருந்து பிரிந்தது அல்ல
பெரம்பலூரிலிருந்து பிரிந்தது
-சாம் ஆண்டர்சன் .

=====================

14 comments:

 1. ஹெஹெஹெஹெஹேஹெ சிரிப்பு தாங்க முடியல இந்த வார கடிதம் பார்த்து!!

  ReplyDelete
 2. படத்துல இருக்குரது சாருவா? விலுந்து விழுந்து சிரிசிட்ருக்கென் பாச்.... ஜெட்லீ ஸ்டைல் கம்மண்ட்

  ReplyDelete
 3. //மைந்தன் சிவா
  January 23, 2012 9:01 AM
  ஹெஹெஹெஹெஹேஹெ சிரிப்பு தாங்க முடியல இந்த வார கடிதம் பார்த்து!!//

  ஆது தான் நண்பரே எனக்கு கிடைத்த அங்கீகாரம்

  ReplyDelete
 4. naallaa irukku saru mettarai thavira pira ellaam...

  ReplyDelete
 5. பொய்யாக பில்டப் செய்து ஊரை ஏமாற்றும் நாதாரிகள் இதைப்பார்த்து திருந்தட்டும்.

  ReplyDelete
 6. செம மொக்க ஹி ஹி !!
  வாழ்த்துக்கள்..!! ;-) ;-)

  ReplyDelete
 7. antha aal adangamaatengaran thalai..daily avana azha vidunga

  ReplyDelete
 8. அந்த ஆப்பது ஆயிரம் ஓவா ???? ): ): ஹையோ ஹையோ ........

  ReplyDelete
 9. இந்தவாரக் கடிதம்.. செம காமெடி சார்...
  இந்த போஸ்ட் ரொம்ப நல்லா இருந்துச்சு...நல்ல காமெடி..

  ReplyDelete
 10. ha ha kaditham thaan ultimate , yen tamil10 la podala vote summa pichikittu pokume???

  ReplyDelete
 11. சூப்பர் தல. இன்னும் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.

  ReplyDelete
 12. இந்தவாரக் கடிதம் நல்லாருந்துச்சுன்னே!

  ReplyDelete
 13. செட்டப் செல்லப்பாFebruary 2, 2012 at 10:52 AM

  உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு

  ReplyDelete

வந்தவங்க எல்லாரும் கமெண்ட் போடுங்க, இல்லே கனவில வந்து கண்ணை நோண்டிப்புடுவேன்!!

Indli