Thursday, December 8, 2011

என்னைக் காயப்படுத்திய உயர்திரு உளுந்தவடை உன்னி கிருஷ்ணன் அவர்கள்

நானும் உன்னி கிருஷ்ணனும் நண்பர்கள் என்பது எல்லாரும் அறிந்ததே ஆனால் அவர் கொஞ்ச நாட்களாகவே என்னைக் காயப்படுத்தி வருகிறார்.

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் எங்களிருவரிடையே நடந்த உரையாடல் 


உன்னி: உங்க வீட்ல இன்னிக்கு கோழிக் குழம்பா?

நான் : ஆமாடா எப்படி கண்டுபுடிச்ச?

உன்னி : எங்க வீட்டு கோழிய காணோம்டா.. அதான் கேட்டேன்


 என்று சொல்லி அடித்துக் காயப்படுத்தினார்.அடுத்ததாக எனக்கு நண்பர் உன்னிகிருஷ்ணனிடம் இருந்து, வரவிருக்கும் 2012, பிப்ரவரி 30 தேதி அன்று 50க்கும் மேற்ப்பட்ட மெயில்கள் வந்தன..

அது மேல்பட்ட மெயில் ஆக இருந்ததால் மேல் படி விசயமாகத் தான் இருக்கும் என்ற ஆர்வம்+நம்பிக்கையில் வேக வேகமாக மெயில் ஓபன் பண்ணினால் என்னுடைய கணினி அப்படியே நின்று விட்டது. நானும் அதை மறுபடியும் உட்கார வைக்க எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை..

கடைசியில் பழக்க தோஷத்தில் பிரம்பு வைத்து அடித்துப் பார்த்தேன். மானிட்டர் உடைந்தது. சரி உன்னி அவர்களின் மானிட்டரை எடுத்து கொள்ளலாம் என்று அவரது அறைக்குச் செல்ல எத்தனித்தேன். மறுபடியும் அவர் என்னை அடித்துக் காயப்படுத்தினார்.ஆனாலும் என்னுள் ஒரு பொறி அந்த மெயிலில் என்ன உள்ளது என்று கண்டு அறிய வேண்டும் என்று.

நண்பர் ஒருவர் அது பிஷிங் மெயில்(FISHING MAIL) என்றார். நான் அவரிடம் அதற்கு வாய்ப்பே இல்லை எனவும் நான் மீன் பிடிக்கவோ குளிக்கவோ சென்று 3 மாதங்களுக்கு மேல் ஆகிறது என்றும் சொன்னேன்.

நல்ல யோசிச்சு பாருடா என்று அவர் சொன்னதை செயல் படுத்திப் பார்த்ததும் எனக்கு உள்ள LONG TERM MEMORY GAIN சக்தியை "ஜீன் ஆச்டிவேசன்" முறையில் ஸ்ருதிஹாசன் உதவியுடன் ஆக்டிவேட் செய்தேன்.

அதன் மூலம் அது 3 மாதம் அல்ல 3 எனவும் வருடம் எனவும் கண்டு பிடித்தேன்.

அடுத்து ஒரு நண்பர் அதை ஸ்பாம்(SPAM) என்றார். நான் இந்தியாவில் அடிக்கடி ஸ்காம்(SCAM) கேள்வி பட்டதுண்டு அது என்ன ஸ்பாம் என்று நான் அவரையும் புறக்கணித்தேன்.


அடுத்ததாக ட்ராஜன் ஹார்ஸ்(TROJAN HORSE) ஆக இருக்கலாம் என நண்பர் ஒருவர் ட்வீட் செய்தார். நான் டார்ஜான் படம் பார்த்திருக்கிறேன் ஆனால் அதில் குதிரை வராது என கடுமையாக வாக்கு வாதம் செய்தேன்.

கடைசியாக அது வைரஸ் தொல்லையாகத் தான் இருக்கும் என்று நண்பர் தகவல் சொன்னதும் எந்த ஒரு பேச்சும் பேசாமல் என்னுடைய மடிக்கணினியை கொதிக்கும் நீரில் முக்கினேன் ஆனாலும் வைரஸ் இன்னும் சாகவில்லை என்ற சந்தேகம் என்னுள் இருந்து கொண்டே இருக்கிறது.... 

மனசு கேட்காமல் நண்பர் உன்னியிடம் சென்று கடுமையான வாக்கு வாதத்தில் ஈடு பட்டேன்.

நான் யார் மனதையும் புண் படுத்த மாட்டேன் நான் கோழை அல்ல நான் மதுரையிலிருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் வாழ்பவன் போன்ற வாதங்களை முன்வைத்தேன்.


அப்புறம் அவர் வீட்டு வாசலுக்கு வந்து என்னுடைய அலக்ஸாஆன்ட்ரியா (ALEXA என வாசிக்கவும்) ரேன்க் 3500000 ஆனால் உன்னுடைய ரேங்க் வெறும் 75000 நான் தான் பெரியவன் எனக் கூச்சலிட்டேன்.


அப்போதும் அவர் என்னை அடித்துக் காயப்படுத்தினார்.. இது நியாயமா?
மேலமாசி வீதி ஆண்டர்சன் 

13 comments:

 1. eppadithan ellaraium nalla kalaainga

  ReplyDelete
 2. உங்கள் சந்தோசம் என் சந்தோசம்

  ReplyDelete
 3. அப்புறம் அவர் வீட்டு வாசலுக்கு வந்து என்னுடைய அலக்ஸாஆன்ட்ரியா (ALEXA என வாசிக்கவும்) ரேன்க் 3500000 ஆனால் உன்னுடைய ரேங்க் வெறும் 75000 நான் தான் பெரியவன் எனக் கூச்சலிட்டேன்./

  nice..

  ReplyDelete
 4. Nice.....
  Thodarnthu kalakkunga.....
  Ellaraium....spool pannunga....
  Daily im visiting.... U

  ReplyDelete
 5. ha ha super.like your blog lot. expecting more from u.

  ReplyDelete
 6. //Katz
  December 9, 2011 7:29 AM
  ha ha super.like your blog lot. expecting more from u.//

  Damm Sure Mr:Katz.............. Thanks a lot

  ReplyDelete
 7. Ennada Nadakkuthu Inga Super Thalaiva

  ReplyDelete
 8. ///சுபத்ரா
  December 9, 2011 8:35 AM
  உன்னி கிருஷ்ணனுக்கும் உங்களுக்கும் உள்ள பிரச்சனை பேசி தீர்க்கும் அளவில் தான் உள்ளது.. எதற்கும் அவரைப் பாராட்டி ஒரு கவிதை எழுதுங்கள்.//

  ஏன் நண்பனே என்னை ஏய்தாய்
  உனக்காகவே நான் வாழ்வேன்

  ---கவிதை (சொல்லலாட்டி ஒரு பயலுக்கும் தெரியாது)

  ReplyDelete
 9. உங்களிடம் மாட்டிக் கொண்டு முழிக்கிற அந்த கணினியைப் பார்த்தால் பாவமாகத் தான் இருக்கிறது

  ReplyDelete
 10. rufina rajkumar
  December 9, 2011 6:45 PM

  உங்களிடம் மாட்டிக் கொண்டு முழிக்கிற அந்த கணினியைப் பார்த்தால் பாவமாகத் தான் இருக்கிறது

  .........oru orama ukkaanthu aluthuttu vanga

  ReplyDelete
 11. நான் என் அழுறேன். ப்ளூ கிராஸ் மாதிரி எந்த கிராஸ் ஆவது இருக்கானு தேடப் போறேன்

  ReplyDelete

வந்தவங்க எல்லாரும் கமெண்ட் போடுங்க, இல்லே கனவில வந்து கண்ணை நோண்டிப்புடுவேன்!!

Indli