Thursday, December 29, 2011

ஈரோடு சங்கமம்/2011 A சாம் பார்வைஎல்லோரும் ஈரோடு சங்கமம் பற்றி எழுதி விட்டார்கள்.. நான் என்ன எழுத போகின்றேன்.?
ஆனால் வருட இறுதிக்குள் பதிவிட்டுவிடவேண்டும்.. என்று எழுதுகின்றேன்..


வீட்டில் நிறைய வேலைகள்..சமையல் சாக்கடை கழுவுதல்.. பக்கத்துத் தெருவில் இரண்டு கல்யாணம்.. மாரியம்மன் கோவில் கூழ்.. ஈரோடு பதிவர் சந்திப்பு என்று டிசம்பர் மாதம் ரொம்ப பிசியாக போனது. அதுமட்டும் இல்லாமல் மனைவியுடன் மாமியாருக்கும் சேர்த்து சமைக்க வேண்டும் என்று பிசியாக இருந்த காரணத்தால் ஈரோடு சங்கமத்தைப் பதிவிட லேட்டாகிவிட்டது.. அது மட்டும் அல்ல நிறைய பேர் எழுதினார்கள்.. அதனால் எல்லோரும் எழுதி முடிக்கட்டும் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் ஆட்டய போட்டு பதிவிடலாம் என நினைத்தேன்....

                     எனது நண்பர் மங்கி மனோ 

பொதுவாகத் தெருவில் கல்யாணம் நடக்கும் போது அந்தப் பத்து நாட்களும் கல்யாண மண்டப வாசலில் பழியாகக் கிடப்பேன்...ஆனால் 18ம் தேதி ஈரோடு சங்கமம் என்று சொன்ன போது எனக்கு வருத்தமாகப் போய் விட்டது.. காரணம்.. இரண்டு நாட்கள் நல்ல சோறு மிஸ் ஆகிவிடும் என்பதால் போலாமா? வேண்டாமா? என்று டைலாமாவாக(இந்த வார்த்தைக்கு அர்த்தம் என்னைத்தவிர யாருக்கும் தெரியாது) இருந்தேன்.. ஆனாலும் போனமுறை சாப்பிட்ட சோறு ஆவலைத் தூண்டியது என்பேன்..


ரஜினி, கமல், பவர் ஸ்டார் போன்றவர்கள் போன் செய்து எனது வருகையைக் கன்பார்ம் செய்ய போன் செய்தார்கள்.. சரி ஓசி சோறு தானே சேர்த்து சாப்பிட்டுக்கலாம் என்று.. ஆப்ரிக்க மக்களை இது போல சந்திப்புக்களில் மட்டுமே பார்க்க முடியும் என்பதால் ஈரோடு செல்ல முடிவெடுத்தேன்..
ஷகிலா படத்திற்கு மழை காரணமாக சோகன் ராய் அவர்கள் திங்கட்கிழமை ஷூட்டிங் வைத்து விட்டார், படத்தின் விளம்பரத்திற்காக என்னை அதில் நடிக்க சொல்லி இருந்தனர், அது கடைசிவரை இழுபறியாக இருந்து பைனலாக நானும் போவதாக முடிவானது...மாதா என்ஜினியரிங் காலேஜ் பெண்களை பார்வையாலேயே  கற்பழித்துக்கொண்டிருந்தேன்.. மாணவிகள் அனைவரும் செருப்பால் அடித்து விரட்டினர்.
                  என்னை தாக்கிய மாணவிகள் படை 


ஒன்பது மணிக்கு கேபிள் ஆண்டர்சன், மேலமாசிவீதி, ஈக்காட்டுதாங்கல் நரன் போன்றவர்களை சுமந்து என்னுடைய மீன் பாடி வண்டி வந்தது. நானும் அதில் எனது  வெயிட்டோடு திணித்துக்கொண்டேன்.....வழி முழுவதும் கல்யாணவீடு, அன்னதானம் என்று பயணம் களைகட்டியது.. நடுவில் மேலமாசி வீதி ஜோதி தியேட்டர் எபெக்ட்டில் சில கவிதைகள் சொன்னார் அசந்து தூங்கி விட்டோம். முல்லைப்பெரியார் வழியாக சென்று முல்லைப்பெரியார் டேம் அருகில் மதகு வழியாக நீர் வெளியேறும் வழியில் போட்டோ எடுத்துக்கொள்ள ஆயுத்தமானோம். அப்போது எனது போட்டோ எடுக்கும் திறமையைப் பார்த்து கேரளா முதல்வர் எடியூரப்பா தெலுங்கானா பிரச்சனைக்குத் தீர்வு காணுவேன் என உறுதி அளித்தார்.


                    பயணத்தின் போது.....வரும் வழியில் மீன் வறுவல் பார்த்து வண்டியிலே எச்சில் ஒழுக விட்டு விட்டேன், நண்பர் மேலமாசிவீதி ஒரு கவிதையை எனக்குத் தண்டனையாக தந்தார்.

ஈரோடு வந்ததும் உணவு உணவு என அலைந்தேன்.. சோறு போட்டு தூங்க வைத்தனர். பின்பு நானும் பதிவர் கில்மா குமாரும் சேர்ந்து "ஜலபுலஜங்க்ஸ் தண்ணிக்குள்ள குயின்ஸ்" எனும் குடும்பத்துடன் பார்த்தே தீர வேண்டிய கில்மா படத்தை பார்த்தோம்.

காலை 18ம்தேதி விழா பத்து மணிக்கு ஆரம்பிக்கபட்டது.. சங்கமம் 2011ல் பாராட்டி மகிழ ஆயிரத்து ஐநூறு பேர் மேடை ஏறினார்கள்..
அந்த  ஆயிரத்து ஐநூறு பேரில் நானும் ஒருவன்... என்னைப் பற்றிய விபரங்கள் நான் பதினைந்து வரிகளில் மட்டுமே கொடுத்தேன். என்னைப் பற்றி எனது சைட்டில் எல்லா விஷயத்தையும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் படித்து வருகின்றார்கள் என்பதால் நான் என்னைப் பற்றிய தகவல்களைக் குறைத்தே கொடுத்தேன்.

                  நான்,மேலமாசிவீதி, ஈக்காட்டுத்தாங்கல், அனானி

மேடைக்கு அழைக்கும் போதே மிகப்பெரிய கைதட்டல் கிடைத்தது  எனது புகைபடங்கள் பெரிய திரையில் காட்டினார்கள்.. குழந்தைகள் மற்றும் பெண்கள் அலறல் சத்தம் காதைப் பிளந்ததால் எனக்கு ஒரு மாதிரி நெகிழ்ச்சியாக ஆகிவிட்டது...

நான் ஏற்புரையில் கொஞ்சம் பேசலாம் என்று இருந்தேன்.. ஆனால் 30 செகன்ட் மட்டுமே  ஒதுக்கி இருந்தார்கள்.. அதனால குறைவாகவே நெகிழ்ச்சியில் பேசினேன்... அதுக்குக் காரணம்... முதல் வரிசையில் நண்பார் முல்லைப் பெரியாறு ரமேஷ் உட்கார்ந்து கொண்டு என்னையும் பொதாவையும் பார்த்து கண்கலங்கி நெகிழ்ச்சியாக தம்ஸ் அப் போல கைகளை உயர்த்தினார்.. அதைப் பார்த்த என்னால்   நெகிழ்ச்சியினால் என்னால் நிறைய பேசமுடியவில்லை... கீழே இறங்கி வந்ததும் தம்ப்ஸ் அப் எங்கே என கேட்டேன் வாசல் தெளிக்க வைத்திருந்த சாணியை மூஞ்சியில் ஊத்தி விட்டார்.

தம்ப்ஸ் அப் ஆசையில் பாதியிலேயே கீழே இறங்கி வந்து விட்டபடியால் இங்கே விரிவாக அங்கு பேச நினைத்ததை இங்கே சொல்லுகின்றேன்...

                   ஆவேசமான பேச்சின்போது நான் 

அனைவருக்கும்  என் காலை வணக்கம்..
சிலருக்கு மட்டும் இரவு வணக்கம் (இதை நேற்று இரவு வணக்கம் சொல்ல விட்டுப்போனவர்களுக்காகச் சொன்னேன்....)

பொதுவா சென்னையில் மாரியம்மன் கோவில் திருவிழா நடக்கும் போது நான் எங்கும் செல்வதில்லை மீறி இங்கே வர காரணம் இங்கு கிடைக்கும் சுவையான உணவுதான்.. என்று சொன்னதும் பதிவர் கில்மா அவர்கள் கண் கலங்கினார்(அவருக்கு என் நன்றிகள்)

என்னைப் பற்றித் தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் அனானிகளை அங்கே வைத்துக் காய்ச்சி எடுக்கலாம் என நினைத்திருந்தேன் 

ஆனால்

விழா தலைவர் குழு மொத்தமும் என்னைத் தாக்கி எழுதும் அனானிகள் தான் என வாசகர் டிடெக்டிவ் டினோ அவர்கள் துப்பு(முகத்தில் அல்ல) குடுத்ததும் தலைதெறிக்க ஓடி வந்து விட்டேன்.
                             
யாராவது சரக்கு வாங்கித் தர மாட்டார்களா என கண்ணில் ஏக்கத்துடன் ஒரு பார் வாசலில் காத்து கிடந்தேன்.. பார் வாசலில் இருக்கும் போது போன் செய்து விட்டு ஒரு தம்பி எங்கிருந்தோ வந்தான்.. என் பையை எடுத்து வைத்துக் கொண்டான்.. ஈரோட்டில் இளநீர் வியாபாரம் செய்கின்றானாம்...என் புகைப்படத்தைப் பார்த்து விட்டு நிறைய பேர் நல்ல வழுக்கையா இளநீர் கேட்பதாகவும் வியாபாரம் நன்றாக நடப்பதாகவும் சொன்னான்.. இளநீர் கேட்டேன் மெதுவாக நழுவினான்(அறிவுள்ளவன் போல... ஹும்ம்ம்) 

குறிப்பு:

ஜெட்லி குருப், சன் டைரக்ட் ப்லஸ் குருப் என்று சில பேச்சுகள்  கவனத்துக்கு வருகின்றன.. 
அதை சோதனை செய்த பொது ஒரு பதிவு கண்ணுக்குத் தட்டுபட்டது. அதை ஆதாரமாக எடுத்துக்கொண்டு சத்தியமூர்த்தி பவன் சென்று இன்று முதல் நானும் ஒரு க்ரூப் என்று சொன்னேன்..


தங்கபாலு என்னைவிட பெரிய சொட்ட ஒருத்தன் வந்துருக்கான் என்று கூச்சலிட்டார்..

முதல் முறையாக தங்கபாலு மற்றும் இளங்கோவன் கூட்டணி அமைத்து என்னைத் தாக்கினர்.

சாம் ஜெட்லி ஆண்டர்சன் 

3 comments:

வந்தவங்க எல்லாரும் கமெண்ட் போடுங்க, இல்லே கனவில வந்து கண்ணை நோண்டிப்புடுவேன்!!

Indli