Tuesday, January 3, 2012

மினி மான் வெஜ் ஆனா நான் நான்வெஜ் (03/01/1947) செவ்வாய்

ஆல்பம்.
நண்பன் ஒருவன் புதுவருடம் தொடங்கப் போகிறது என்றான்.
இப்போது தான் புத்தாண்டு கொண்டாடியது போல இருக்கு.. அதுக்குள் 2012 இரண்டு நாளில் ஆரம்பிக்க போகிறதா நான் நம்ப மாட்டேன் என்றேன். மெரீனா கடற்கரையில் பல அனானிகள் கூச்சலிட்டு கொண்டிருந்தார்கள் அவர்களிடம் சென்று கடுமையான வாக்குவாதத்தில் ஈடு பட்டேன். மீதமிருந்த பீர் பாட்டிலை குடுத்தார்கள். புதுவருடம் தொடங்கியது என ஒப்புக்கொண்டு நடையை கட்டினேன். 
--------------------------------
--------------------------------
தானே புயல் தமிழகத்தில் பல கோடி ரூபாய் சேதத்தை வருட கடைசியில் ஏற்படுத்தி விட்டு சென்று இருக்கின்றது என்று கடற்கரையில் மீனவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். நான் நடுவில் சென்று "தானே புயல் எப்படி தமிழகம் வரும்? தானே பாலக்காடு பக்கத்தில் அல்லவா இருக்கிறது. உங்களுக்கெல்லாம் அறிவு இல்லை" என வாதிட்டேன். துடுப்பு உடைந்து போகும் அளவுக்கு அடி கிடைத்தது....


======================
எங்கள் ஊரில் மார்கழி மாசத்துக்குச் சாணி தெளித்துச் சரிபடுத்தி வைத்த வாசலை, தானே பயுல்  நாஸ்த்தி பண்ணி விட்டதாக நான் கவலைபட்டுக் கொண்டிருந்தேன். ஏண்டா அவன் அவன் வீடு வாசல் இல்லாம தெருவுல நின்னுட்ருக்கோம்..  உனக்கு சாணி அழிஞ்சது பெரிய விசயமா போச்சா என பக்கத்துக்கு வீட்டு சாந்தி அக்கா கழுவி கழுவி ஊத்தினார்..
-------------------------
------------------------
தானே புயல் கடலூர் அருகே கரையைக் கடந்து விட்டது...  பாண்டியும், கடலூரும் தொலைத்தொடர்புகள் மற்றும் சாலை போக்குவரத்துகள் துண்டிக்கபட்டு இருக்கின்றன...11 ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருக்கின்றது..என்று கிரிகெட் வர்ணனையாளர் போல நடுத்தெருவில் நின்று கத்திக்கொண்டிருந்தேன். தானே புயல் பின்புறமாக வந்து டிக்கியில் ஒரு காட்டு காட்டியது..எங்கள் ஊர் மீண்டு வருவதற்காகச் சக்தி கொடு பாடலை பாடிக்கொண்டே அலைந்து திரிந்தேன் மறுபடியும் கீழ்பாக்கத்தில் தனி செல்லில் அடைத்து வைத்திருக்கின்றனர்.  
--------------------------------
--------------------------------
மனைவி இருசக்கர வாகனத்தில் ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்ல சொன்னார். மழை காரணமாகக் காற்று அதிகமாக இருக்கிறது மாலையில் போகலாம் என்று சொன்னேன்.
மாலையில் மறுபடியும் போகலாம் எனச் சொன்னார் முடியாது என்றேன்.. 

இப்போ தான் காத்து இல்லையே அப்புறம் என்ன? என்றார்

வண்டி ஓட்ட தெரியாது என்றேன்... அப்போது நான் வாங்கிய அடி சத்தம் விண்ணைப் பிளந்தது.

--------------------------------
--------------------------------
எனக்கு விமர்சனம் பிடிக்காது என்பது என் வாசகர்கள் அனைவரும் அறிந்ததே.. அதனால் சன் டிவி அலுவலகத்துக்குச் சென்று திரை விமர்சனத்தை உடனே நிறுத்தச் சொல்லிப் போராட்டத்தில் இறங்கினேன். அப்போது அங்கு வந்த ஹன்சிராஜ் சக்சேனா சட்டையைப் பிடித்து உலுக்கினேன்.

அப்போது சக்சேனா "ஏண்டா! நானே வேலைய உட்டுத் தூக்கிட்டணுக அப்டின்னு கடுப்புல இருக்கேன் சட்டயவாடா புடிக்கிற" என்று கொலை வெறி பார்வை பார்த்தார்.

என்னைய கூட தான் வேலைய வுட்டு தூக்கிட்டாங்க நான் கூலா இல்லையா நீங்களும் அப்படியே இருங்கண்ணே என்று சொல்லி விட்டு ஓட்டக்காட்சியைத் தொடங்கினேன்.

-------------------------
-------------------------
கடந்த வருடம் என் நண்பர்கள் & உறவினர்கள் அதிகம் வசிக்கும் உகாண்டா தேசத்தில் எனக்கும் என் மனைவிக்கும் வேலை தேடிக்கொண்டு இருந்தேன்.. இப்போதும்  தேடிக்கொண்டு இருக்கின்றேன். இன்னமும் தேடுவேன்.  கொஞ்சம் கடன் இருக்கின்றது.. அதனை அடைக்காமல் தப்பிக்க வேண்டுமானால் வெளிநாடு சென்று அனானி ஆவதை தவிர வேறு வழி இல்லை..இந்த புது ஆண்டில் அந்த முயற்சி வெற்றிபெருகின்றதா? என்று பார்ப்போம்.


----------------------------------------------
----------------------------------------------

மை கிளிக்ஸ் 
 
சால்னா கடை சரோஜா 
----------------------------------------
---------------------------------------

பிலாசபி சோழன்

கடற்கரையில் நின்று கொண்டு கால் தூசியைப் பற்றிப் பேசாதே...
================================================================================

9 comments:

 1. late a vanthalum kalakkala vanthurukku

  ReplyDelete
 2. innum nallaa try pannalaam. kalaaikka innum niraiya per irukaanga. cable, cp senthil kumar ivangalai ellaam kalaainga paa.

  ReplyDelete
 3. innum nalla kalaaiga please..

  ReplyDelete
 4. உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன். எப்ப பார்த்தாலும் அறிவு ஜீவி மாதிரி மத்தவங்களுக்கு புத்தி சொல்லிட்டே இருக்கான். நல்லா கலாயுங்க சார். கடலூருக்கு இவன் தலைவர் கருணாநிதி கார்ல போனாராம்...ஆனா முதலமைச்சர் ஹெலிகாப்டர்ல போறாங்களாம்... அதுக்கல்லாம் டென்சன் ஆகுறான். எல்லா பதிவுலயும் ஹெலிகாப்டர்ல போறதையே திருப்பி திருப்பி சொல்லிட்டு இருக்கான். ஓங்கி ஒரு கொட்டு வைங்க சார்.

  ReplyDelete
 5. naan karagattakaaran..che kadalurkaaran..neenga karalakattaikkaari..jatti sekar

  ReplyDelete
 6. வணக்கம் நண்பா
  ஹே...ஹே...
  அதே எழுத்து நடையில் செமையா கலாய்ச்சிருக்கிறீங்க.

  ReplyDelete
 7. //நிரூபன்
  January 4, 2012 7:40 PM

  வணக்கம் நண்பா
  ஹே...ஹே...
  அதே எழுத்து நடையில் செமையா கலாய்ச்சிருக்கிறீங்க//

  நன்றி நிரூபன். வருகைக்கும் வாழ்த்துக்கும்

  ReplyDelete

வந்தவங்க எல்லாரும் கமெண்ட் போடுங்க, இல்லே கனவில வந்து கண்ணை நோண்டிப்புடுவேன்!!

Indli