Thursday, December 29, 2011

ஈரோடு சங்கமம்/2011 A சாம் பார்வை



எல்லோரும் ஈரோடு சங்கமம் பற்றி எழுதி விட்டார்கள்.. நான் என்ன எழுத போகின்றேன்.?
ஆனால் வருட இறுதிக்குள் பதிவிட்டுவிடவேண்டும்.. என்று எழுதுகின்றேன்..


வீட்டில் நிறைய வேலைகள்..சமையல் சாக்கடை கழுவுதல்.. பக்கத்துத் தெருவில் இரண்டு கல்யாணம்.. மாரியம்மன் கோவில் கூழ்.. ஈரோடு பதிவர் சந்திப்பு என்று டிசம்பர் மாதம் ரொம்ப பிசியாக போனது. அதுமட்டும் இல்லாமல் மனைவியுடன் மாமியாருக்கும் சேர்த்து சமைக்க வேண்டும் என்று பிசியாக இருந்த காரணத்தால் ஈரோடு சங்கமத்தைப் பதிவிட லேட்டாகிவிட்டது.. அது மட்டும் அல்ல நிறைய பேர் எழுதினார்கள்.. அதனால் எல்லோரும் எழுதி முடிக்கட்டும் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் ஆட்டய போட்டு பதிவிடலாம் என நினைத்தேன்....

                     எனது நண்பர் மங்கி மனோ 

பொதுவாகத் தெருவில் கல்யாணம் நடக்கும் போது அந்தப் பத்து நாட்களும் கல்யாண மண்டப வாசலில் பழியாகக் கிடப்பேன்...ஆனால் 18ம் தேதி ஈரோடு சங்கமம் என்று சொன்ன போது எனக்கு வருத்தமாகப் போய் விட்டது.. காரணம்.. இரண்டு நாட்கள் நல்ல சோறு மிஸ் ஆகிவிடும் என்பதால் போலாமா? வேண்டாமா? என்று டைலாமாவாக(இந்த வார்த்தைக்கு அர்த்தம் என்னைத்தவிர யாருக்கும் தெரியாது) இருந்தேன்.. ஆனாலும் போனமுறை சாப்பிட்ட சோறு ஆவலைத் தூண்டியது என்பேன்..


ரஜினி, கமல், பவர் ஸ்டார் போன்றவர்கள் போன் செய்து எனது வருகையைக் கன்பார்ம் செய்ய போன் செய்தார்கள்.. சரி ஓசி சோறு தானே சேர்த்து சாப்பிட்டுக்கலாம் என்று.. ஆப்ரிக்க மக்களை இது போல சந்திப்புக்களில் மட்டுமே பார்க்க முடியும் என்பதால் ஈரோடு செல்ல முடிவெடுத்தேன்..
ஷகிலா படத்திற்கு மழை காரணமாக சோகன் ராய் அவர்கள் திங்கட்கிழமை ஷூட்டிங் வைத்து விட்டார், படத்தின் விளம்பரத்திற்காக என்னை அதில் நடிக்க சொல்லி இருந்தனர், அது கடைசிவரை இழுபறியாக இருந்து பைனலாக நானும் போவதாக முடிவானது...



மாதா என்ஜினியரிங் காலேஜ் பெண்களை பார்வையாலேயே  கற்பழித்துக்கொண்டிருந்தேன்.. மாணவிகள் அனைவரும் செருப்பால் அடித்து விரட்டினர்.
                  என்னை தாக்கிய மாணவிகள் படை 


ஒன்பது மணிக்கு கேபிள் ஆண்டர்சன், மேலமாசிவீதி, ஈக்காட்டுதாங்கல் நரன் போன்றவர்களை சுமந்து என்னுடைய மீன் பாடி வண்டி வந்தது. நானும் அதில் எனது  வெயிட்டோடு திணித்துக்கொண்டேன்.....வழி முழுவதும் கல்யாணவீடு, அன்னதானம் என்று பயணம் களைகட்டியது.. நடுவில் மேலமாசி வீதி ஜோதி தியேட்டர் எபெக்ட்டில் சில கவிதைகள் சொன்னார் அசந்து தூங்கி விட்டோம். முல்லைப்பெரியார் வழியாக சென்று முல்லைப்பெரியார் டேம் அருகில் மதகு வழியாக நீர் வெளியேறும் வழியில் போட்டோ எடுத்துக்கொள்ள ஆயுத்தமானோம். அப்போது எனது போட்டோ எடுக்கும் திறமையைப் பார்த்து கேரளா முதல்வர் எடியூரப்பா தெலுங்கானா பிரச்சனைக்குத் தீர்வு காணுவேன் என உறுதி அளித்தார்.


                    பயணத்தின் போது.....



வரும் வழியில் மீன் வறுவல் பார்த்து வண்டியிலே எச்சில் ஒழுக விட்டு விட்டேன், நண்பர் மேலமாசிவீதி ஒரு கவிதையை எனக்குத் தண்டனையாக தந்தார்.

ஈரோடு வந்ததும் உணவு உணவு என அலைந்தேன்.. சோறு போட்டு தூங்க வைத்தனர். பின்பு நானும் பதிவர் கில்மா குமாரும் சேர்ந்து "ஜலபுலஜங்க்ஸ் தண்ணிக்குள்ள குயின்ஸ்" எனும் குடும்பத்துடன் பார்த்தே தீர வேண்டிய கில்மா படத்தை பார்த்தோம்.

காலை 18ம்தேதி விழா பத்து மணிக்கு ஆரம்பிக்கபட்டது.. சங்கமம் 2011ல் பாராட்டி மகிழ ஆயிரத்து ஐநூறு பேர் மேடை ஏறினார்கள்..
அந்த  ஆயிரத்து ஐநூறு பேரில் நானும் ஒருவன்... என்னைப் பற்றிய விபரங்கள் நான் பதினைந்து வரிகளில் மட்டுமே கொடுத்தேன். என்னைப் பற்றி எனது சைட்டில் எல்லா விஷயத்தையும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் படித்து வருகின்றார்கள் என்பதால் நான் என்னைப் பற்றிய தகவல்களைக் குறைத்தே கொடுத்தேன்.

                  நான்,மேலமாசிவீதி, ஈக்காட்டுத்தாங்கல், அனானி

மேடைக்கு அழைக்கும் போதே மிகப்பெரிய கைதட்டல் கிடைத்தது  எனது புகைபடங்கள் பெரிய திரையில் காட்டினார்கள்.. குழந்தைகள் மற்றும் பெண்கள் அலறல் சத்தம் காதைப் பிளந்ததால் எனக்கு ஒரு மாதிரி நெகிழ்ச்சியாக ஆகிவிட்டது...

நான் ஏற்புரையில் கொஞ்சம் பேசலாம் என்று இருந்தேன்.. ஆனால் 30 செகன்ட் மட்டுமே  ஒதுக்கி இருந்தார்கள்.. அதனால குறைவாகவே நெகிழ்ச்சியில் பேசினேன்... அதுக்குக் காரணம்... முதல் வரிசையில் நண்பார் முல்லைப் பெரியாறு ரமேஷ் உட்கார்ந்து கொண்டு என்னையும் பொதாவையும் பார்த்து கண்கலங்கி நெகிழ்ச்சியாக தம்ஸ் அப் போல கைகளை உயர்த்தினார்.. அதைப் பார்த்த என்னால்   நெகிழ்ச்சியினால் என்னால் நிறைய பேசமுடியவில்லை... கீழே இறங்கி வந்ததும் தம்ப்ஸ் அப் எங்கே என கேட்டேன் வாசல் தெளிக்க வைத்திருந்த சாணியை மூஞ்சியில் ஊத்தி விட்டார்.

தம்ப்ஸ் அப் ஆசையில் பாதியிலேயே கீழே இறங்கி வந்து விட்டபடியால் இங்கே விரிவாக அங்கு பேச நினைத்ததை இங்கே சொல்லுகின்றேன்...

                   ஆவேசமான பேச்சின்போது நான் 

அனைவருக்கும்  என் காலை வணக்கம்..
சிலருக்கு மட்டும் இரவு வணக்கம் (இதை நேற்று இரவு வணக்கம் சொல்ல விட்டுப்போனவர்களுக்காகச் சொன்னேன்....)

பொதுவா சென்னையில் மாரியம்மன் கோவில் திருவிழா நடக்கும் போது நான் எங்கும் செல்வதில்லை மீறி இங்கே வர காரணம் இங்கு கிடைக்கும் சுவையான உணவுதான்.. என்று சொன்னதும் பதிவர் கில்மா அவர்கள் கண் கலங்கினார்(அவருக்கு என் நன்றிகள்)

என்னைப் பற்றித் தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் அனானிகளை அங்கே வைத்துக் காய்ச்சி எடுக்கலாம் என நினைத்திருந்தேன் 

ஆனால்

விழா தலைவர் குழு மொத்தமும் என்னைத் தாக்கி எழுதும் அனானிகள் தான் என வாசகர் டிடெக்டிவ் டினோ அவர்கள் துப்பு(முகத்தில் அல்ல) குடுத்ததும் தலைதெறிக்க ஓடி வந்து விட்டேன்.
                             
யாராவது சரக்கு வாங்கித் தர மாட்டார்களா என கண்ணில் ஏக்கத்துடன் ஒரு பார் வாசலில் காத்து கிடந்தேன்.. பார் வாசலில் இருக்கும் போது போன் செய்து விட்டு ஒரு தம்பி எங்கிருந்தோ வந்தான்.. என் பையை எடுத்து வைத்துக் கொண்டான்.. ஈரோட்டில் இளநீர் வியாபாரம் செய்கின்றானாம்...என் புகைப்படத்தைப் பார்த்து விட்டு நிறைய பேர் நல்ல வழுக்கையா இளநீர் கேட்பதாகவும் வியாபாரம் நன்றாக நடப்பதாகவும் சொன்னான்.. இளநீர் கேட்டேன் மெதுவாக நழுவினான்(அறிவுள்ளவன் போல... ஹும்ம்ம்) 

குறிப்பு:

ஜெட்லி குருப், சன் டைரக்ட் ப்லஸ் குருப் என்று சில பேச்சுகள்  கவனத்துக்கு வருகின்றன.. 
அதை சோதனை செய்த பொது ஒரு பதிவு கண்ணுக்குத் தட்டுபட்டது. அதை ஆதாரமாக எடுத்துக்கொண்டு சத்தியமூர்த்தி பவன் சென்று இன்று முதல் நானும் ஒரு க்ரூப் என்று சொன்னேன்..


தங்கபாலு என்னைவிட பெரிய சொட்ட ஒருத்தன் வந்துருக்கான் என்று கூச்சலிட்டார்..

முதல் முறையாக தங்கபாலு மற்றும் இளங்கோவன் கூட்டணி அமைத்து என்னைத் தாக்கினர்.

சாம் ஜெட்லி ஆண்டர்சன் 

Thursday, December 22, 2011

மச்சினி,மலையாளி,முல்லைபெரியார்........


எனது மச்சினிச்சியின் திருமணத்திற்கு அலுவலகப் பணிகள்(!) காரணமாக போகமுடியவில்லை அதனால் நானும் எனது மனைவியும் வார இறுதியில் அவள் கணவனின் ஊரான கொச்சிக்கு செல்வதாக முடிவெடுத்தோம்.

மனைவியைக் காலையில் எழுப்பி விட்டதும் அவளுக்கு காப்பி போட்டு கொண்டு தரவேண்டும். ஞாபக மறதியில் காப்பியில் உப்பு போட்டுக் கொண்டு வந்து விட்டதால் மனைவி காப்பியை மூஞ்சியில் ஊத்தினார் துடைத்துப் போட்டு விட்டு காலை சமையலைக் கவனிக்கச் சென்றேன்.

நண்பர் தொழில் நுட்ப பதிவர்(!) "பாரத் மாதா கீ ஜே" ரவிக்குமார் அவர்கள் பஸ்ஸை நிறுத்தி விட்டதாக முகபுதகத்தில் போட்டிருந்தார். உடனே தனி ஆளாக கோயம்பேடு பேருந்து நிலையம் சென்று மறியலில் ஈடுபட்டுக் கடைகளை அடைக்க வேண்டுமென்று கலவரத்தில் ஈடு பட்டேன்.


சாலையோர வியாபாரிகள் அனைவரும் சாக்கடைக்குள் தள்ளி விட்டு அடித்தனர்.. பின்பு தான் தெரிந்தது அது கூகிள் பஸ் என்று.... அவ்வ்வ்வ் என ஓசை எழுப்பினேன் தெரு நாய் எனது டிக்கியை கடித்து வைத்தது.



சரி என்று வீட்டிற்குச் சென்றதும் மனைவி  "இவ்ளோ நேரமா எங்க பொருக்க போன?" என்று சொல்லி அடித்தார்.

கையில் 100 ரூபாயைக் கொடுத்து மச்சினியைப் பார்க்கப் போவதால் ஏதாவது பழம் வாங்கிவர சொன்னார் பார்சலுடன் வீடு திரும்பினேன்.... மச்சினியைப் பார்க்க போகும் ஆவலுடன் பயணத்தை தொடங்கினேன்.... மனைவி ஸ்லீப்பர் கிளாசில் ஏறிக்கொண்டார் நான் வழக்கம் போல வித் அவுட்டில் பயணத்தை தொடங்கினேன்.

கொச்சினில் வந்து இறங்கியதும் மனம் ரக்கை கட்டி பறந்தது. மச்சினியை பார்க்க போகும் ஆவலில் ஒரு மலையாள சேட்டனை இடித்து விட்டேன் கழுவி ஊத்தினான். பின்பு அவனிடம் சென்று போதி தர்மரின் அருமை பெருமைகளை பற்றி சொன்னதும் ஆனந்த கண்ணீர் விட்டு முல்லை பெரியாறு அணை குறித்து சாண்டியிடம் பேசுவதாக சொன்னார்(அவருக்கு என் நன்றிகள்).


பின்பு அவரிடம் பாபிலோனா வீடு எங்கே என்று மெதுவாக கேட்டேன். சாப்பிட்டுக் கொண்டிருந்த கப்பை கிழங்கால் எறிந்தார் அதை பிடித்து சாப்பிட்டுக்கொண்டே மச்சினி வீட்டை நோக்கி நகர்ந்தேன்..

வீட்டிற்குச் சென்றதும் மச்சினியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன் மனைவி கண்ணைக் குத்திக் காயம் செய்துவிட்டார். அப்புறமாக வாங்கி வந்த பழங்களை எடுத்து கொடுக்க தொடங்கினேன். ஆனால் ரெண்டு கிலோ பழம் குடுங்க என்று கேட்டதும் தக்காளி பழத்தை கொடுத்து விட்டான் கடைக்காரன். மனைவி மச்சினி மாமியார் மூவரும் சேர்ந்து தக்காளிகளாலே அடித்து துரத்தினர்..

அப்புறம் மனது கேட்காமல் எதாவது கேக் வாங்கிச் செல்லலாம் எனக் கடைக்கு சென்று ஒரு கேக் வாங்கினேன் மீண்டும் வீட்டுக்கு சென்று கேக் பார்சலை பிரித்தேன். அதைப் பார்த்ததும் அனைவரும் காரித் துப்பினர். ஆனாலும் வற்புறுத்தலின் பேரில் அதை வெட்டி சாப்பிட தொடங்கினர். அப்போது மச்சினியின் கன்னத்தில் கேக் ஒட்டிக் கொண்டதால் அதை ஆர்வக்கோளாரில் துடைக்க சென்றேன் மனைவி பத்ரகாளியாக மாறி வீட்டை விட்டுத் துரத்தினார்.


                        நான் வாங்கி வந்த கேக் 

வீட்டை விட்டு வெளியே வரும் பொது அவள் காதுக்கு கேட்காதமாதிரி "நான் ஆம்பளடி" கொஞ்சம் அப்படி இப்படிதான் இருப்பேன் என சொல்லிவிட்டு தலை தெறிக்க ஓடினேன்..

வழியில் ஒருவர் மீது மோதினேன். ஏன் இந்த அவசரம் என தமிழில் கேட்டார்.. நான் எனது மச்சினியின் மீது கொண்டிருந்த காதல் முதல் சற்று முன்பு அவளது கன்னத்தில் கை வைத்தது வரை அனைத்தையும் சொன்னேன். ஆனால் அவரோ என்னை மூர்க்கத்தனமாகத் தாக்க தொடங்கினார். அப்புறம் தான் தெரிந்தது அவர் தான் மச்சினியின் கணவனாம் மறுபடியும் ஓட்டக்காட்சி ஆரம்பமானது..


                   சகலயிடம் அடி வாங்கும் ஒரு அழகிய தருணம் 

களைப்பில் ஒரு மலையாளி வீட்டிருக்குச் சென்று தண்ணி கேட்டேன் தண்ணி தருவாரோ மாட்டாரோ என்ற தயக்கத்தில் இருந்தபோது நன்றாக சுட வைக்கப்பட்ட சீரகதண்ணியை குடுத்தார்.

                  ஓமனகுட்டன் சேட்டன் மனைவி என் மனைவியுடன் 

அவரிடம் தமிழ்தான் மலையாளத்தின் மூலம் என்றும் தமிழின் தழுவலே மலையாளம் என்றும் சென்னேன். அவரும் ஆமோதித்தார் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது மனைவியை நான் தழுவ தொடங்கினேன் அதற்கு தமிழின் தழுவல் தானே மலையாளம் என நீயே ஒத்துக்கொண்டு இப்போது என்ன? என்று சட்டம் பேசினேன் முல்லைபெரியாறு அணையில் என்னைக் கட்டி வைத்துவிட்டு அணையை திறந்து விட்டனர்.


                               சாம் ஆண்டர்சன் 


Wednesday, December 14, 2011

மினி மான் வெஜ் ஆனா நான் நான்வெஜ் (13/12/1947) புதன்

நானும் சான்ட்விச் வரும் வரும் என இலவு காத்த கிளி போல காத்திருந்து
 (1 நாள் 12 மணி 3 நிமிடம் 37 வினாடி) ஏமாந்து விட்டேன் அதனால் நானே என்னுடைய மான் வெஜ் பகுதியை வெளியிடுகிறேன்.. இது எனது சொந்த படைப்பு 
=================================================
வாழத்தகுதி இல்லாத நகரமாகச் சென்னை மாறிக்கொண்டு இருக்கின்றது...
மழையில் வெளியே போய் வரவே கடுப்பாக இருக்கின்றது... இதைக் காரணம் சொல்லி வீட்டிலேயே இருந்தேன் மனைவி கழனி தண்ணியை மூஞ்சியில் ஊத்தினார். 

சாலைகள் எங்கும் நீர் நிறைந்து இருக்கின்றது... எந்த இடத்தில் பள்ளம் இருக்கின்றது, எது சாலை என்று தெரியவில்லை.. போரூர் சிக்னல் அருகே சாலையில் தண்ணீர் இருந்த காரணத்தால் அதில் நீச்சலடித்துக் குளித்தேன் பொதுமக்கள் வழக்கம் போல நடுரோட்டில் ஆசை தீர அடித்தனர்..



=================================================

சரத் பவரை என்னுடைய வாசகர் ஹர்பஜன் சிங்க் அவர்கள் கன்னத்தில் அடித்துள்ளார்.. அவருக்கு என் வாழ்த்துக்கள் ஆனால் அவர் அடித்த பிறகு தான் பார்த்தேன் சரத் பவார் வாய் எனது வாயை விட கேவலமாக கோணலாகி இருந்தது.
அவருக்கு என் கண்டனங்கள் 



=====================================================

மிக்சர்.
எதிர் வீட்டுக் குழந்தையிடம் மிக்சர் கேட்டேன்.
அவளும் அவளது தம்பியும் சேர்ந்து என்னை நன்றாக கவனித்து அனுப்பினர் ஆனாலும் கொல்லை புறமாக வந்து களவாடி விட்டேன் 

எப்படிடா உன்னால மட்டும் இப்படி முடியுது  என்னமோ போடா ஜெட்லி??


என்று தனக்கு தானே பேசிக்கொண்டேன் மனைவி கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்.

========================================================

இன்று தெருவில் எனக்கும் நாய்க்கும் நடந்த சண்டையில் நாய் செத்து விட்டதால் 
ப்ளூ கிராஸ் எனும் அனானி அமைப்பினர் என்னை கைது செய்து சிறையில் வைத்துள்ளனர்.  நண்பர்கள் யாராவது சந்திக்க விரும்பினால் திஹார் ஜெயிலில் என்னை சந்திக்கலாம் 



=========================================================

தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது இப்போதெல்லாம் மெஷினிலே பணம் போடும் வசதி வந்து விட்டது. என்னுடைய மனைவி 10000 ரூபாயை கொடுத்து மெஷினில் போட்டு விட்டு வருமாறு சொன்னார் யாரும் பார்க்காத நேரத்தில் ATM அறையினுள் பணத்தை போட்டு விட்டு வந்து விட்டேன். மனைவி மாமியார் இருவரும் கூட்டணி அமைத்து அடித்தனர் 

=========================================================


இந்தவாரக் கடிதம்.....
முல்லை பெரியார் அணை சம்மந்தமாக திரு உம்மன் சாண்டி அவர்களுக்கு நான் எழுதிய கடிதம்

Dear boss
     
                                me disappoin mullai issue tamil need water u no water me no veg no beef me no current we shakila watch u kamal watch but we sight shakila but u not sight tamil .
u me last warning give water else shakila chechi omana kuttan chenna we no tea drink


இப்போ தெரிஞ்சிதா என்னோட தமிழ்நாடு பாசம் 

===========================================


நான்வெஜ்..18+
     
   நான் எனது 18 வயது முதல் நான்வெஜ் அதனால் தான் இது நான்வெஜ் (18+)

நன்றிகளுடன் 


சாம்



Sunday, December 11, 2011

கடுப்பாகி போன பேருந்து பயணம் (சென்னை முதல் ஆப்ரிக்கா வரை )- பகுதி 1 மற்றும் பகுதி 2


வருகைக்கு நன்றி. விருந்தினராக வந்தால் நீங்க தின்பதற்கு வடை,முறுக்குஅல்லது கடலை மிட்டாய் ஏதேனும் வாங்கி வரவும் . பின்னூட்டமிடாவிட்டால் இரவில் கனவில் வந்து கண்ணை குத்தி விடுவேன் 

அன்பார்ந்த குஷ்பூ ரசிகர்களுக்கு,

    நான் எனது சொந்த ஊரான ஆப்ரிக்காவிலிருந்து எனது மைத்துனன் பெண் எடுத்த ஊரான அண்டார்ட்டிக்காவிர்க்கு சென்ற பயணக்கட்டுரை 


மிக நீளமாக இருப்பதால் பகுதி வாரியாக பிரித்து பதிவிடலாம் என நினைக்கிறேன் ஆனால் திடீர் என்று நேரம் கிடைத்து விட்டபடியால்(!) அதை இங்கே ஒரே பதிவாக தருகிறேன். பகுதி வாரியாக(தனித்தனியாக) படித்துக்கொளவும்.


பகுதி 1:

சொந்தக்காரர் வீட்டு திருமணத்திற்காக நானும் என் மனைவியும் சனியன்று சென்னையிலிருந்து புறப்பட்டு உசிலம்பட்டி சென்று, அங்கிருந்து எனது பெற்றோருடன் இணைந்து ஆண்டிபட்டி விமான நிலையம் வழியாக ஆப்ரிக்கா சென்று திருமணத்திலும், புதன் அன்று அண்டார்ட்டிக்காவில் நடைபெற்ற வரவேற்பு மற்றும் கறிவிருந்தில் பங்கேற்று இன்று காலை தான் சென்னை வந்ததன் பயண கட்டுரை தான் இது. 

சனியன்று சென்னையிலிருந்து ஆப்ரிக்க செல்வதற்காக ஏற்கனவே டிராவல்ஸ்ஸில் (பெயர் வேண்டாம் தெரிந்தால் அவர்கள் வீடு தேடி வந்து அடிப்பர்) ட்விட்டர் மூலம் புக் செய்திருந்தேன். ஆனால் அந்த சமயம் என்னை பாலோ  செய்த அந்த நாதேரி சரக்கடித்திருந்ததால் என்னுடைய பெயரில் டிக்கெட் புக் செய்ய மறந்து விட்டிருந்தது. பின்னால் தான் அது எனக்கு தெரிய வந்தது. எனவே எனக்கு பின்னாடி ஒரு கண் இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன் 

                                                     நான் மற்றும் சில அனானிகள் 

ஆனாலும் யாரிடமும் சொல்லாமல் ஒரு இருக்கையை ஆக்கிரமித்தேன். கோயம்பேடு பேருந்து நிலைய வாசல் வரை விரட்டி விரட்டி அடித்தனர்.

சிறிது நேரம் எல்லா வாகனங்களிலும் சார் ஆப்ரிக்கா செல்கிறீர்களா? என லிப்ட் கேட்டு விட்டு,பிறகு அரசுப் பேருந்து நிலையத்திற்கு சென்று பேருந்து கிடைக்குதா என பார்க்கலாம் என்று அங்கு நடந்து சென்றோம். ஆட்டோக்காரரை கேட்டால் காசு வேண்டும் என்றார் அதனால் நடந்தே சொல்லலாம் என முடிவு செய்தேன் (நன்றி : அமெரிக்ககாரன்).

                                                            நான் செல்லவிருந்த  ஏர் பஸ் 

அரசுப் பேருந்து நிலையத்திற்கு இத்தனை லக்கேஜூடன் நடந்து சென்று பார்த்தால் ஒரு பேருந்திற்கு 200 பேர் என கூட்டம் அலைமோதுகிறது. 

சரி நல்லது கூட்டமாக இருந்தால் டிக்கெட் எடுக்க தேவையில்லை என நினைத்திருந்தேன் நேரடியாக ஆப்ரிக்கா டிக்கெட் கிடைக்காது என்று முடிவு செய்து வேறெந்த வழியாகவும் ஊருக்குள் சென்று விடலாம் என்பதால் மன்கோலியாவுக்கோ பாகிஸ்தானுக்கோ அல்லது அந்தமான் தீவிர்க்கோ பேருந்தில் சென்று விடலாம் என்று பார்த்தால் அந்தப்பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதியது, மணி வேறு 11 மேல் ஆகிக்கொண்டிருக்கிறது. அப்பொழுது ஒரு பேருந்து உள்நுழைந்தது. அமெரிக்க வழியாக முல்லைபெரியார் அணை செல்லும் பேருந்து அது. அதில் டிக்கெட் கிடைத்தது. சரி 06 மணிக்கு முல்லைபெரியார் சென்றாலும் ஆப்ரிக்கா 08 மணிக்கெல்லாம் சென்று விடலாம் என்று முடிவு செய்து ஏறி விட்டோம்.

பெரியார் பேருந்து நிலையம் - நைரோபி -அந்த கூட்டத்துக்கு நடுவில் நான் தாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறேன் 

கென்யா சென்றதும் பேருந்து டிரைவரால் வண்டியை இயக்க முடியவில்லை யாருக்காவது வண்டியை ஓட்டத்தெரியுமா? என்று கேட்டனர்.


நானும் சென்று எனக்கு ஓட்ட தெரியும் என்று சொன்னேன் பயணிகள் அனைவரும் பாராட்டி விட்டு சென்றனர் 

ஒருவர் வண்டி ஒட்டு என்றார்... 


எனக்கு வண்டி எல்லாம் ஓட்ட தெரியாது எல்லா வண்டியில் உள்ள ஓட்டைகளும் தெரியும் என்றேன் அடி பந்தாடினர்......
===========================================
பகுதி ஒன்று முடிவுற்றது என்னுடைய மைத்துனன் மகாலிங்கம் இங்கே டீ கடை வைத்துள்ளார் டீ வடை சாப்பிடுபவர்கள் சாப்பிட்டுமுடித்து விட்டு வந்து பகுதி இரண்டை தொடரவும் 

============================================
பகுதி 2

மறுபடியும் வண்டி பஞ்சரானது ஸ்டெப்னி இல்லாததால் பேருந்தில் இருந்த மக்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர்.

அப்போது நான் சென்று என்னிடம் ஒரு ஸ்டெப்னி இருக்கிறது என்றும் அவள் தன் குழந்தைகளுடன் என்னுடைய சின்ன வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் சொன்னேன். 

என் மனைவி உட்பட அனைவரும் என்னை தாக்கினர். அப்போது இரத்தம் வந்ததால் கென்யாவை ரத்தபூமி என்று சொன்னேன் அங்கே இருந்த ஒரு கறுப்பர் என்னை இழிசொற்க்களால் பூஜித்தார்.

                                             நான் எனது வாசகர் வட்ட நண்பர்களுடன் 

ஆனால் என் தந்தையோ எதற்கு லேட்  என என்னை திட்டிக்கொண்டே இருந்தார்.

இப்படியாக நான் ஆப்ரிக்க பேருந்துநிலையம் சென்றடையும்போது மணி 12.30

வீட்டிற்குள் சென்றால் அப்பா எதும் பேசாமல் கிளம்பி என் சைக்கிள் கேரியரில் ஏறி அமர்ந்து அமர்ந்து கொண்டார்.



அம்மாவும் கிளம்பியதும் தூங்கி எழுந்து என் சைக்கிளில் நானும் என் மனைவியும் அண்டார்டிக்கா சென்றோம்.

அங்கோ அத்தனை சொந்தக்காரர்களிடமும் என்னுடைய பயண அனுபவ கட்டுரை பற்றி சொன்னேன் இதெல்லாம் ஒரு கத இத இங்க வேற வந்து சொல்றியான்னு அனைவரும் சேர்ந்து என்னை மொத்து மொத்தென மொத்தினர்.

சாப்பாட்டு கூடத்திற்கு சென்றேன். என் அப்பா சமையல் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டிருந்தார் அவரிடம் நீங்கள் எந்த கல்லூரியில் நிர்வாகவியல் படித்தீர்கள் என்று கேட்டேன் அவரது மொத்த கோவத்தையும் என்மீது இறக்கினார். 

                                        பயணத்தின்போது  ஒரு மகிழ்ச்சியான தருணம் 

 இரவு மாப்பிள்ளை அழைப்பு துவஙகியதால் பெண் உறவினர்கள் அனைவரும் கோயிலுக்கு ஊர்வலத்தில் சீர்வரிசை தட்டுடன் நடந்து செல்ல ஆரம்பித்தனர். அவர்களை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்ததை என்னுடைய மனைவி கவனித்து விட்டு என்னை நன்றாக கவனித்தார் 

எல்லாரிடமும் அடி வாங்கிய களைப்பினால் கொஞ்சம் உற்சாகபானம் குடித்தால் தேவலாம் என தோன்றியதால்  நிறைய உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்தேன். ஆனாலும் ஒன்றும் தேறவில்லை 



அதில் மகேஷ் குமார் என்று எங்களால் அழைக்கப்படும் (பெயர்க்காரணம் : அவனது பெற்றோர் அவனுக்கு இட்ட பெயர் மகேஷ் குமார் ) அவனை 10 வருடங்களுக்கு பின் சந்தித்தேன். நானும் அவனும் பால்ய வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள் தூரத்து உறவினரும் கூட. இடையில் அவன் வெளிநாடு(தேனீ மாவட்டம்) சென்று விட்டதால் பார்க்க முடியாமல் போய் விட்டது. நாங்கள் இருவரும் போகிற வருகிறவர்கள் எல்லோரிடமும் வம்பிழுத்து அடி வாங்கியதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று மறைத்த கதையை பேசி சிரித்துக் கொண்டிருந்தோம். 

அடுத்து மணப்பெண் ஊரான ஜப்பானிற்கு கடல் மார்கமாக செல்வதாக என்னுடைய அத்தான் திரு விஜய் மல்லையா அவர்கள் சொன்னதால் மரியாதை நிமித்தமாக நான் கொஞ்சம் சரக்கு அடித்து விட்டு செல்லலாம் என்றேன் மச்சான் மற்றும் அவருடைய பங்காளிகள் என்னுடைய உடலை அடித்து துவைத்தனர் 

நல்லப்பிள்ளைகளாக சாப்பிட்டு விட்டு மீண்டும் மண்டபம் வந்து உறவினர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

ஆனால் ஜப்பானில் நடந்ததோ...

(தொடரும்...)
போரூர் சானா ஆண்டர்சன் 

டிட் பிட்ஸ் 18 (+): இன்று முதல் என்னுடைய தளம் 18 (+) தளம் ஆகிறது.
அட! யாரும் தப்பா நினைக்க வேணாம் என்னுடைய பாலோயர்ஸ் எண்ணிக்கை பதினெட்டை தாண்டியதுன்னு சொல்ல வந்தேன்..... அனைவருக்கும் நன்றிகள் 




Thursday, December 8, 2011

என்னைக் காயப்படுத்திய உயர்திரு உளுந்தவடை உன்னி கிருஷ்ணன் அவர்கள்

நானும் உன்னி கிருஷ்ணனும் நண்பர்கள் என்பது எல்லாரும் அறிந்ததே ஆனால் அவர் கொஞ்ச நாட்களாகவே என்னைக் காயப்படுத்தி வருகிறார்.





கொஞ்ச நாட்களுக்கு முன்னர் எங்களிருவரிடையே நடந்த உரையாடல் 


உன்னி: உங்க வீட்ல இன்னிக்கு கோழிக் குழம்பா?

நான் : ஆமாடா எப்படி கண்டுபுடிச்ச?

உன்னி : எங்க வீட்டு கோழிய காணோம்டா.. அதான் கேட்டேன்


 என்று சொல்லி அடித்துக் காயப்படுத்தினார்.



அடுத்ததாக எனக்கு நண்பர் உன்னிகிருஷ்ணனிடம் இருந்து, வரவிருக்கும் 2012, பிப்ரவரி 30 தேதி அன்று 50க்கும் மேற்ப்பட்ட மெயில்கள் வந்தன..

அது மேல்பட்ட மெயில் ஆக இருந்ததால் மேல் படி விசயமாகத் தான் இருக்கும் என்ற ஆர்வம்+நம்பிக்கையில் வேக வேகமாக மெயில் ஓபன் பண்ணினால் என்னுடைய கணினி அப்படியே நின்று விட்டது. நானும் அதை மறுபடியும் உட்கார வைக்க எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை..

கடைசியில் பழக்க தோஷத்தில் பிரம்பு வைத்து அடித்துப் பார்த்தேன். மானிட்டர் உடைந்தது. சரி உன்னி அவர்களின் மானிட்டரை எடுத்து கொள்ளலாம் என்று அவரது அறைக்குச் செல்ல எத்தனித்தேன். மறுபடியும் அவர் என்னை அடித்துக் காயப்படுத்தினார்.



ஆனாலும் என்னுள் ஒரு பொறி அந்த மெயிலில் என்ன உள்ளது என்று கண்டு அறிய வேண்டும் என்று.

நண்பர் ஒருவர் அது பிஷிங் மெயில்(FISHING MAIL) என்றார். நான் அவரிடம் அதற்கு வாய்ப்பே இல்லை எனவும் நான் மீன் பிடிக்கவோ குளிக்கவோ சென்று 3 மாதங்களுக்கு மேல் ஆகிறது என்றும் சொன்னேன்.

நல்ல யோசிச்சு பாருடா என்று அவர் சொன்னதை செயல் படுத்திப் பார்த்ததும் எனக்கு உள்ள LONG TERM MEMORY GAIN சக்தியை "ஜீன் ஆச்டிவேசன்" முறையில் ஸ்ருதிஹாசன் உதவியுடன் ஆக்டிவேட் செய்தேன்.

அதன் மூலம் அது 3 மாதம் அல்ல 3 எனவும் வருடம் எனவும் கண்டு பிடித்தேன்.

அடுத்து ஒரு நண்பர் அதை ஸ்பாம்(SPAM) என்றார். நான் இந்தியாவில் அடிக்கடி ஸ்காம்(SCAM) கேள்வி பட்டதுண்டு அது என்ன ஸ்பாம் என்று நான் அவரையும் புறக்கணித்தேன்.


அடுத்ததாக ட்ராஜன் ஹார்ஸ்(TROJAN HORSE) ஆக இருக்கலாம் என நண்பர் ஒருவர் ட்வீட் செய்தார். நான் டார்ஜான் படம் பார்த்திருக்கிறேன் ஆனால் அதில் குதிரை வராது என கடுமையாக வாக்கு வாதம் செய்தேன்.

கடைசியாக அது வைரஸ் தொல்லையாகத் தான் இருக்கும் என்று நண்பர் தகவல் சொன்னதும் எந்த ஒரு பேச்சும் பேசாமல் என்னுடைய மடிக்கணினியை கொதிக்கும் நீரில் முக்கினேன் ஆனாலும் வைரஸ் இன்னும் சாகவில்லை என்ற சந்தேகம் என்னுள் இருந்து கொண்டே இருக்கிறது.... 

மனசு கேட்காமல் நண்பர் உன்னியிடம் சென்று கடுமையான வாக்கு வாதத்தில் ஈடு பட்டேன்.

நான் யார் மனதையும் புண் படுத்த மாட்டேன் நான் கோழை அல்ல நான் மதுரையிலிருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் வாழ்பவன் போன்ற வாதங்களை முன்வைத்தேன்.


அப்புறம் அவர் வீட்டு வாசலுக்கு வந்து என்னுடைய அலக்ஸாஆன்ட்ரியா (ALEXA என வாசிக்கவும்) ரேன்க் 3500000 ஆனால் உன்னுடைய ரேங்க் வெறும் 75000 நான் தான் பெரியவன் எனக் கூச்சலிட்டேன்.


அப்போதும் அவர் என்னை அடித்துக் காயப்படுத்தினார்.. இது நியாயமா?




மேலமாசி வீதி ஆண்டர்சன் 

Tuesday, December 6, 2011

நன்றி நடிகர் திலகமே (சாம் ஆண்டர்சன்)


டீ கடைக்கு காலையில் சீக்கிரமாக போனால்தான் ஓசி டீ கிடைக்கும்..
ஆனால் டீ ஓசியில்  கிடைப்பது போல் இன்று வரை உணவு வகைகள் சரியா கிடைத்து  இல்லை(ஓசியில்)


நேற்று தேதி ஆறு என்பதால் எல்லாரும் சம்பளம் வாங்கி இருப்பார்கள் என்ற காரணத்தினால் அடித்து பிடித்து எங்கள் கொளப்பாக்கம் டீ கடைக்கு சென்றேன்.. வாசகர் விளாத்திகுளம் வீரமணி அவர்கள் நின்று கொண்டிருந்தார் அவரிடம் மெதுவாக பேச்சு குடுத்து சீக்கிரம் டீ குடித்து விட்டு சென்று விடலாம் என்று கனவு கண்டேன்..ஆனால் ஒன்றரைமணி நேரம் ஆகும் என்று நான் கனவிலும்  நினைக்கவில்லை..


முன்பு போல் காலைவேளைகளில் அதிகமான ஆண்களை டீ கடைகளில் இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை... சிம்பிள் காரணம்தான்... என்னுடைய மான் வெஜ் ஆனா நான் நான்வெஜ் தொடரில் நான்வெஜ் 18+ பகுதி படித்து விட்டு இரவு தாமதமாக தூங்க செல்வதே அதற்கு காரணம்.....

ஆனால் என் நினைப்பில் மண்.. எனது சைக்கிள் உள்ளே நுழையும் போதே வேறு ஒரு தள்ளு வண்டி வந்ததை நான் சரியாக கவனிக்கவில்லை.. நான் நேராக போய் ஓசி டீ குடிப்பவர்களுக்கான வரிசையில் நடுவில் சென்று சொருக பார்த்தேன் ஏற்கனவே நின்றிருந்தவர்கள் அடி பிழிய பிழிய அடித்தனர் .. கூட்டமே இல்லை ஆனாலும் ஒரு பில்டப்பை கொடுக்குறீர்களா என கேட்டேன் அதற்க்கு இவரு பெரிய இவரு என சொல்லி மிதித்தனர்... ஆனால் அந்த தள்ளு வண்டியில் இருந்து ஆர்பாட்டம் இல்லாமல் இறங்கி நடந்து வந்தார்.. அவர் நடிகர் சாம் ஆண்டர்சன்.

அவரை பார்த்த உடன் எங்கள் ஊர் கொளப்பாக்கம் டீ கடைகாரர் மாதவன் நாயர் பதட்டமானார்..சாம் ஆண்டர்சன்  டீ குடிக்க வந்தார் என்றால் யாருக்கு தான் பதட்டமாக இருக்காது.

காலையில் என் முகத்தில் முழித்து அவருக்கு ஞாபகம் வந்திருக்கலாம் சுடு தண்ணியை பிடித்து மூஞ்சியில் ஊத்தினார் ஆனாலும் பொறுத்துக்கொண்டு வரிசையில் நின்றேன்.

அவர் 555  சிகரெட் பாக்கெட் ஒன்றை வாங்கினார் ஆனால் உள்ளே 20 சிகரெட் தான் இருக்கிறது என்று கூச்சலிட்டார் நானும் சேர்ந்துகொண்டு குரலை உயர்த்தினேன் மாதவன் நாயர் மங்கி நாயராக மாறி தலையில் இருந்த சொச்ச முடிகளையும் பதம் பார்த்தார்....

அவருக்கு ஆதரவாக பேசியதினால் சாம் ஆண்டர்சன் எனக்கு ஒரு டீ வாங்கி தந்து தனது பேச்சை தொடர்ந்தார்.


வேறு எதாவது பிரச்சனை இருந்தால் சொல்லுங்கள் என்றார் சாம் ..நான் வர வர மக்கள் விழிப்புணர்வு பெற்று வருவதாக சொன்னேன் அவர் யாருக்கு யாரோ தோல்வியின் போதே இதை புரிந்து கொண்டேன் என்றும் அவரது படையப்பா பார்ட் 2 படத்தில் வாய்ப்பும் தருவதாக சொன்னார்

பக்கத்தில் இருந்த ஒரு பையனிடம் அவர் பேச்சு குடுக்க தொடங்கினார் 

உங்க பேர் என்ன தம்பி-?
ஜெட்லி ..
எத்தனாவது படிச்சிருக்கிங்க??
பத்தாவது ஐயா...
என்ன வேலை பாக்குறிங்க?
ஒன்னுக்கு ரெண்டு வியாபாரம் பாக்கறேன் 
பஸ் ஸ்டாண்ட்ல கக்கூஸ் நடத்துறின்களா?
அட அது இல்லைங்க ரெண்டு தொழில் பாக்கறேன்னு சொன்னேன் 


சரி நல்லா நடிக்கணும் என்று ஜெட்லி சாம்க்கு கை கொடுத்தார்...

வாசகர் வாணியம்பாடி வண்ணமுத்து வந்தார் அவரிடம் டீயும் பன்னும் வாங்கி கொண்டு ஜுட் விட்டேன்..

Indli