Monday, December 5, 2011

cable ஆண்டர்சன்--- குத்து பரோட்டா – 05/12/11

(10 லட்சம்/ 5 ஆயிரம்) ஹிட்டுகளையும் (50ஆயிரம்/2ஆயிரம்) பின்னூட்டங்களையும் வாரி வாரி (?) வழங்கிக்கொண்டிருக்கும் வாசக (???) கண்மணிகளுக்கு நன்றிகள் கோடி 
====================================================
கடந்த சில வருடங்களாய் எந்த சேனலைத் திறந்தாலும் ஏதாவது ஒரு டேலண்ட் ஹண்ட் நிகழ்ச்சி பெரும்பாலும், பாட்டு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கிறது என்று நண்பன் சொன்னான் நானும் ஆர்வத்தில் தொலை காட்சியை ஸ்க்ரூ டிரைவர் உதவியுடன் திறந்து பார்த்தேன் ஆனால் அப்படி ஒன்றும் இல்லை. வீட்டில் உள்ள அனைவரும்  என்னை வீட்டை விட்டு அடித்து வெளியில் துரத்தி விட்டனர் 


ஆனாலும் விடா முயற்சியின் காரணமாக சலூன் கடையில் டேலண்ட் நிகழ்ச்சியை கண்டு பிடித்து விட்டேன்.உங்க டீவீல மட்டும் எப்படி இந்த நிகழ்ச்சி வருகிறது என கேட்டேன் நாயை விட்டு கடிக்க வைத்தனர் ஓடி வந்து விட்டேன் .நாராயணா சேனல் ஒரு வித்யாசமான டேலண்ட் ஹண்ட் நிகழ்ச்சியை துவங்கியிருக்கிறது. நிகழ்ச்சி பெரும்பாலும் எல்லோராலும் வரவேற்கப்படும் பாட்டு சம்பந்தப்பட்டதாய் இருந்தாலும் அதில் கில்மா  பஜன்களை வைத்து நடத்தி வருகிறார்கள். 


உடனே அந்த நிகழ்ச்சியில் என்னையும் பங்கேற்க சொன்னார்கள் வழக்கம் போல வெற்றியும்
பெற்றேன் அந்த நிகழ்ச்சியின் வீடியோ  உங்களுக்காக


பி கு :எனக்கு இந்த நிகழ்ச்சிக்காக மொக்கை திலகம் பட்டமும் தயிர் சாதமும் பரிசாக வழங்கப்பட்டது====================================================
நான் அடுத்த நூற்றாண்டில் இயக்கவிருக்கும் படம் இந்தியாவெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கு. 


 படம் பார்பவர்கள் தற்கொலை செய்வதிலிருந்து தடுப்பது பற்றியும், ஏன் பார்த்தவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றும் அமெரிக்காவிலிருந்து  வெளிவரும் THE TIME  என்கிற பத்திரிக்கையிலியிருந்து என்னிடம் பேட்டி எடுத்தார்கள்.


ஆனால் ஆங்கிலம் ஆனதால் முடியாது என சொல்லி விட்டேன் எனக்கு தமிழ் தான் முக்கியம் 


=========================================================


நேற்று முன் தினம் அண்ணாநகர் திருமங்கலத்திலிருந்து காலையில் ஒரு பக்கம் முழுவதையும் ஒன்வே ஆக்கிவிட்டார்கள். ரோடு ஏதாவது போடுகிறார்களா? என்றால் அதுவும் இல்லை. அனால் அங்கே நின்றிருந்த போலீஸ்காரர்களிடம் கேள் எனும் முகப்புத்தக குழுமம்,பற்றியும்கேட்டால் தான் கிடைக்கும் என்பது பற்றியும் வெகுநேரம் பேசினேன் போலீஸ்காரர்களிடமிருந்து சரியான பதில் வரவில்லை.  திடீரென அவர்கள் எதிர்பாராத நேரத்தில் ஒன்வே-யில் வேகமாக எனது சைக்கிளை மிதித்தேன் விரட்டி வந்து புரட்டி எடுத்து விட்டனர் 


===========================================================
ஜெட்லி -யுடான்ஸ் நடத்தும் சவால் வாசகர் கடித போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.வெற்றி பெற்றவர்களுக்கு பதிவர் ஜெட்லி அவர்களின் பொன்னான கரங்களால் பரிசு வழங்கப்படும் 
மொத்தம் மூன்று கடிதங்கள் தேர்ந்தெடுக்கப்படும் மூன்று கடிதங்களையும் பதிவர் சாம் அவர்களே எழுத உள்ளார் 


முதல் கடிதம் 


நிகழ்ச்சி நிரல்


வரவேற்ப்புரை :பதிவர் கில்மா குமார் (www.podramokka.blogspot.com)


சிறப்புரை : பதிவர் நாராயணன்(www.wiresankar.blogspot.com)


பரிசுகளை வழங்குபவர் : பதிவர் ஜெட்லி சேகர் (www.jetleysekar.com)


வாழ்த்துரை மற்றும் நன்றி அறிவித்தல் : பதிவர் மார்த்தாண்டன் (www.mokkaiblog.blogspot.com)
================================================


கொஞ்ச நாளாகவே நான் திரைப்படங்களுக்கு மதிப்பெண் முறை கொண்டுவந்தது 
அனைவரும் அறிந்ததே என்னுடைய முயற்சியினை பாராட்டி திரு விஜய T ராஜேந்தர் 
அவர்கள் பேசும் காணொளி இதோ உங்கள் பார்வைக்கு 


================================================


அடல்ட் கார்னர் 


    விரைவில் நான் எழுத போகும் "நீ ஷகிலா தகரம்" நமது இனைய தளத்தில் 
புடிக்க மன்னிக்கவும் படிக்க தவறாதீர்கள் 
===================================================6 comments:

 1. நல்ல காமெடி.....இன்னும் நல்லா எழுதலாம்..

  ReplyDelete
 2. //ராஜ்
  December 6, 2011 3:00 AM
  நல்ல காமெடி.....இன்னும் நல்லா எழுதலாம்..//


  நன்றி ராஜ் இன்னும் முயற்சி செய்கிறேன்

  ReplyDelete
 3. cable wire arunthu poochu

  ReplyDelete
 4. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கிது..

  ReplyDelete
 5. கலாய்த்து இருக்கிறீர்கள் ...பிரபல பதிவர்கள் பாவம்

  ReplyDelete

வந்தவங்க எல்லாரும் கமெண்ட் போடுங்க, இல்லே கனவில வந்து கண்ணை நோண்டிப்புடுவேன்!!

Indli