Wednesday, December 14, 2011

மினி மான் வெஜ் ஆனா நான் நான்வெஜ் (13/12/1947) புதன்

நானும் சான்ட்விச் வரும் வரும் என இலவு காத்த கிளி போல காத்திருந்து
 (1 நாள் 12 மணி 3 நிமிடம் 37 வினாடி) ஏமாந்து விட்டேன் அதனால் நானே என்னுடைய மான் வெஜ் பகுதியை வெளியிடுகிறேன்.. இது எனது சொந்த படைப்பு 
=================================================
வாழத்தகுதி இல்லாத நகரமாகச் சென்னை மாறிக்கொண்டு இருக்கின்றது...
மழையில் வெளியே போய் வரவே கடுப்பாக இருக்கின்றது... இதைக் காரணம் சொல்லி வீட்டிலேயே இருந்தேன் மனைவி கழனி தண்ணியை மூஞ்சியில் ஊத்தினார். 

சாலைகள் எங்கும் நீர் நிறைந்து இருக்கின்றது... எந்த இடத்தில் பள்ளம் இருக்கின்றது, எது சாலை என்று தெரியவில்லை.. போரூர் சிக்னல் அருகே சாலையில் தண்ணீர் இருந்த காரணத்தால் அதில் நீச்சலடித்துக் குளித்தேன் பொதுமக்கள் வழக்கம் போல நடுரோட்டில் ஆசை தீர அடித்தனர்..=================================================

சரத் பவரை என்னுடைய வாசகர் ஹர்பஜன் சிங்க் அவர்கள் கன்னத்தில் அடித்துள்ளார்.. அவருக்கு என் வாழ்த்துக்கள் ஆனால் அவர் அடித்த பிறகு தான் பார்த்தேன் சரத் பவார் வாய் எனது வாயை விட கேவலமாக கோணலாகி இருந்தது.
அவருக்கு என் கண்டனங்கள் =====================================================

மிக்சர்.
எதிர் வீட்டுக் குழந்தையிடம் மிக்சர் கேட்டேன்.
அவளும் அவளது தம்பியும் சேர்ந்து என்னை நன்றாக கவனித்து அனுப்பினர் ஆனாலும் கொல்லை புறமாக வந்து களவாடி விட்டேன் 

எப்படிடா உன்னால மட்டும் இப்படி முடியுது  என்னமோ போடா ஜெட்லி??


என்று தனக்கு தானே பேசிக்கொண்டேன் மனைவி கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்.

========================================================

இன்று தெருவில் எனக்கும் நாய்க்கும் நடந்த சண்டையில் நாய் செத்து விட்டதால் 
ப்ளூ கிராஸ் எனும் அனானி அமைப்பினர் என்னை கைது செய்து சிறையில் வைத்துள்ளனர்.  நண்பர்கள் யாராவது சந்திக்க விரும்பினால் திஹார் ஜெயிலில் என்னை சந்திக்கலாம் =========================================================

தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது இப்போதெல்லாம் மெஷினிலே பணம் போடும் வசதி வந்து விட்டது. என்னுடைய மனைவி 10000 ரூபாயை கொடுத்து மெஷினில் போட்டு விட்டு வருமாறு சொன்னார் யாரும் பார்க்காத நேரத்தில் ATM அறையினுள் பணத்தை போட்டு விட்டு வந்து விட்டேன். மனைவி மாமியார் இருவரும் கூட்டணி அமைத்து அடித்தனர் 

=========================================================


இந்தவாரக் கடிதம்.....
முல்லை பெரியார் அணை சம்மந்தமாக திரு உம்மன் சாண்டி அவர்களுக்கு நான் எழுதிய கடிதம்

Dear boss
     
                                me disappoin mullai issue tamil need water u no water me no veg no beef me no current we shakila watch u kamal watch but we sight shakila but u not sight tamil .
u me last warning give water else shakila chechi omana kuttan chenna we no tea drink


இப்போ தெரிஞ்சிதா என்னோட தமிழ்நாடு பாசம் 

===========================================


நான்வெஜ்..18+
     
   நான் எனது 18 வயது முதல் நான்வெஜ் அதனால் தான் இது நான்வெஜ் (18+)

நன்றிகளுடன் 


சாம்6 comments:

 1. thalaivaa..antha aal'a super'a naaradikkarai..poonthu vilayaadu

  ReplyDelete
 2. பாஸ் அவனவன் ஜெட்லியோட நான் வெஜ்ஜுக்காக வாழ்க்கை பூரா காத்துக்கிட்டு இருக்க தயாரா இருக்கான். நீங்க என்னடான்னா ஒருநாள் காத்திருந்ததுக்கே டயர்ட் ஆக்கிட்டீங்களே... ஜெட்லி வாசகர்களுக்கு இருக்கும் பொறுமை உங்களுக்கு இல்லையே...

  ReplyDelete
 3. super........ continue

  ReplyDelete
 4. ungal sevai naatuku thevai..
  Welcome back

  ReplyDelete
 5. எப்படிடா உன்னால மட்டும் இப்படி முடியுது என்னமோ போடா ஜெட்லி??

  ReplyDelete

வந்தவங்க எல்லாரும் கமெண்ட் போடுங்க, இல்லே கனவில வந்து கண்ணை நோண்டிப்புடுவேன்!!

Indli