Sunday, January 29, 2012

எழுதுகிறேன் ஒரு கடிதம் (18+) -- A LETTER FROM A REDLIGHT GIRL - PINKY

குறிப்பு : வழக்கமான பதிவு போல் அல்லாமல் கொஞ்சம் சீரியஸ் பதிவு.....

கடந்த வாரம் ஒரு விலை மாதுவினை மீட்டு அவளது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் வாய்ப்பினை ஜீசஸ் எனக்களித்தார். அந்தப் பெண்ணிடம் இருந்து எனக்கு வந்த ஆங்கிலக் கடிதம், தமிழில்..டியர் சாம்,

            உன் நலமறிய ஆவல். நான் நலமில்லை. இந்தக் கணத்தில் இந்த மெயில் யார்கிட்ட இருந்து வந்திருக்குனு கூட உனக்குத் தெரியாமல் இருக்கலாம். ஒருவேளைபிங்கிஎன்ற என் பேரைச் சொன்னாக் கூட உனக்கு ஸ்ட்ரைக் ஆகாமல் போகலாம். ஆனால், சந்தித்த நாள்முதல் உன்னையே நினைத்துக்கொண்டு இருக்கும் ஒரு மனசு தான் இந்த லெட்டரை எழுதுகின்றது என்று நினைத்துக் கொள்ளவும்.

            இன்னையில் இருந்து சரியாகப் பதினைந்து நாட்கள் பின்னோக்கிச் சென்றால் ஒருவேளை நான் யாரென்று உனக்கு நினைவுக்கு வரலாம். இருட்டுவதற்கு முன்னால் உள்ள சாயங்கால வேளையில் என்கஸ்டமர்என்னைக் கைவிட்ட காரணத்தால் நான் நடுத்தெருவில் நின்றிருந்த நிலை உனக்கு நினைவுக்கு வரலாம். கையில் ஒரு பைசா கூட இல்லாமல் வெறும் க்ரெடிட் கார்டை வைத்துக் கொண்டு தங்கச்சிலை போன்ற செக்ஸியான ஒரு பெண் ஜீன்ஸ் டி-சர்ட்டில் ஃபுல் போதையோடு நின்றிருந்த நிலை உனக்கு மறந்திருக்கும் என எனக்குத் தோன்றவில்லை.

            மும்பையின் வீதிகளையும் சந்துகளையும் அசால்ட்டாகக் கடந்துவந்த நான் மொழி தெரியாத ஓர் ஊரில் ஓர் அனாதையாக நின்றிருந்த நிலை எனக்கு ஒன்றும் புதிதல்ல தான். எனக்கு இந்த உலகத்தின் எந்தப் பகுதியும்கஸ்டமர்ஸ்வந்து பிஸினஸ் தரும் ப்ளாட்ஃபார்ம் தான். தமிழனானாலும் ஹிந்திக்காரனானாலும் மலையாளியானாலும் குல்ட்டியானாலும் அமெரிக்கா போனாலும் ஆப்ரிக்கா போனாலும் கூட ஒவ்வொருத்தனுக்கும்அதுதேவைதான் படுகிறது.

            அதிலும் நம்ம ஊர்க்காரன் அதுக்குப் பிச்சை எடுக்காத குறை தான். என்னைப் பொறுத்தவரைக்கும் ஆண்களின் பார்வையில் செக்ஸ் என்பது பல சமயம் பசி, தாகம் மாதிரி இன்றியமையாதது. சில சமயம் சளி வந்தால் எப்படிச் சீந்திப்போட வேண்டுமோ அப்படியேஅதையும் வெளியேற்றிவிட வேண்டியதாகிறது. ஆனால் நம்ம ஊர்க்காரனுக்கு செக்ஸ் என்றால்பாவம்’ ‘குற்றம்’. நான் எவ்வளவுதான் ஒருத்தனைப் படுக்கையில்நிறைவுபடுத்தினாலும் முடிந்ததும் ஒரு சிலர் தான் அந்த நிறைவுடன் வெளியேறுகிறார்கள். பலர், ‘அந்தவிஷயம் முடிந்ததும் என் முகத்தைக் கூடப் பார்க்கத் திராணியில்லாமல் பணத்தைக் கையில் திணித்துவிட்டு வேகமாக வெளியேறும்போது சிறிது குற்றவுணர்ச்சியை எனக்குள்ளும் திணித்துவிட்டே செல்கின்றனர். ஆரம்பக் காலக்கட்டத்தில் அது என்னைப் பாதிக்கத்தான் செய்தது. இப்பொழுதெல்லாம் காசு கிடைக்கிறதா? சுகம் கிடைக்கிறதா? என்று மட்டும் தான் பார்க்கின்ற பழக்கம்.

            அதிலும் காசை மட்டும் தான் எதிர்பார்க்கமுடியும். சுகத்தை எல்லோராலும் தந்துவிட முடியாது அல்லது தருவதற்கு மனது இருக்காது. பொண்டாட்டியிடம் செக்ஸ் வைத்துக் கொள்பவன் காலையில் அவள் முகத்தில் விழிக்க வேண்டிய காரணத்தினால் அவளைத் திருப்தி படுத்துகிறான். பணம் கொடுத்துச் சுகத்தை அனுபவிக்க வருபவனிடம் என்னத்தை எதிர்பார்க்க? அப்படியே அந்த விஷயத்தில் என்னைச் சந்தோஷப்படுத்த ஆளில்லாமல் இல்லைதான். ஆனாலும் மனது வெரைட்டி கேட்கிறது. ஒவ்வொருவரிடமும் ஒன்று இருந்தால் இன்னொன்று இருப்பதில்லை. என்ன செய்ய?

            உனக்கு இதெல்லாம் கேட்பதற்கு அசிங்கமாக அருவெருப்பாக இருக்கிறதா சாம்? உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு உயிரும் ஏங்கித் தவிக்கும் ஒரு சுகத்தை வெறும் பணத்தை வாங்கிக்கொண்டு நான் தந்து கொண்டிருக்கிறேன். இந்தத் தொழிலில் இருப்பதனாலோ என்னவோ செக்ஸ் தான் எனக்கு சொர்க்கத்தைக் காட்டும் ecstasy யாக இருந்து வந்திருக்கிறது. It is a blissful state.

            ஆனால் இதுவரை எனக்குக் கிடைத்த சுகத்தை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் சுகமாகவும் நான் அனுபத்திருக்கிற போதை வஸ்துகள் என்றுமே தந்திராத ஒரு போதையாகவும் என்னை மயக்கடித்த அந்தச் சம்பவத்தையும் அதற்குச் சொந்தக்காரனான உன்னையும் என்னால் நினைவில் வைக்காமல் இருக்க முடியவில்லை சாம்.

            வாய்ப்பு கிடைத்தவன் தப்பானவன். கிடைக்காதவன் நல்லவன்என்று சாக்குப் போக்கு சொல்லிக்கொண்டிருப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். நான் கூட அது உண்மை என்று தான் இதுவரை நினைத்திருந்தேன். அப்படிப் பார்த்தால் நீ நல்லவனா? கெட்டவனா?

            அன்று மொழி தெரியாமல் நான் தனியாக அந்த ஊரில் நின்றிருந்த வேளையில் என்னிடம் பேசி எனக்குப் பணமும் கொடுத்து என்னைப் பத்திரமாகப் போக வேண்டிய இடத்துக்கு அனுப்பிவைத்தாயே.. உன்னிடம் சில கேள்விகள்..

ஆறடி உயரத்தில் அடுத்த வீட்டுப்பையன் போல இருந்த நீ...............அவனவன் தொடுவதற்காகத் தவம் கிடக்கும் ஒரு வெல்வெட் சொர்க்கமான நான் பலமுறை பல வழிகளில் பலரின் மூலம் விரும்பி அழைத்தும் என்னைப் புறக்கண்ணால் கூடச் சீண்டாமல் இருக்கிறாயே? எப்படி? ஏன்?

என்னை மயக்குவதற்கு உன் பார்வையே போதுமாயிருந்தது சாம்...... இக்கணம் கடவுள் என்று ஒருவன் இருந்து அவன் என் முன்னால் தோன்றிஎன்ன வரம் வேண்டும்என்று என்னிடம் கேட்டால்உன்னை உன் கண்களைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்என வரம் கேட்பேன்.....................................

இதுவே இப்படி இருக்கையில்உன்னைச் சேர்வதுஎன்பது என் கற்பனைக்கே எட்டாத ஒரு சுகமாக.. நினைத்துப் பார்த்தாலே மரித்துப் போகும் ஒரு எல்லையற்ற இன்பமாக இருந்து என்னை வாட்டுகிறது. முதன்முறையாகஎன் உலகத்தைவிட்டுவிட்டு ஒரு சராசரிப் பெண்ணாக வாழ வேண்டும் போல் ஒரு ஆசை வந்திருக்கிறது.........

பதில் மெயிலை எதிர்பார்த்து,
உலகை உன் ஒருவனில் காணும்
பிங்கி.

5 comments:

 1. வணக்கம் சார்,
  ஹார்ட்டை டச் பண்ணிட்டீங்க.

  அருமையான படைப்பு.

  உங்களால் இப்படியும் எழுத முடியும் என்பதற்கு அடையாளமாய் இப் படைப்பு.

  ReplyDelete
 2. அட சாமா இப்படி ஆச்சரியமாய் இருக்கின்றது..!! வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. enuku ennovo antha aaloda kathiku ulkutha irukkumo nu ninikaren

  ReplyDelete
 4. இது கதைக்கான உள்குத்துதான்!...

  ReplyDelete

வந்தவங்க எல்லாரும் கமெண்ட் போடுங்க, இல்லே கனவில வந்து கண்ணை நோண்டிப்புடுவேன்!!

Indli