Tuesday, October 11, 2011

நாம் ஏன் அமைதியா அந்த தோசையை சாப்பிட்டுருக்ககூடாது?

இரண்டு நாள் முன்னதாக ஒரு ஆங்கில வலைப்பதிவு திரட்டி மற்றும் வலைப்பதிவாளர்களை இந்தியாவெங்கும் குழுமமாய் அமைக்க முயற்சிக்கும் ஒரு நிறுவனம் சென்னையில் ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. இவர்கள் வருடா வருடம் நடத்துவதுதான். இம்முறை நிறைய தமிழ் வலைப்பூக்கள் நடத்துபவர்களும் கலந்து கொண்டோம்.

வைகிங்  நிறுவனத்தின் லுல்லாஹ் எனும் ஜட்டி விளம்பரத்துக்காக வைகிங்  இவர்களுடன் சேர்ந்து இலவச ஜட்டி ட்ரையல், ஆளுக்கொரு செட்  இட்லி  வடை  ,போன்ற ஏற்பாடுகளுடன் சிறப்பாக வடிவமைத்திருந்தார்கள். சென்னையின் புதிய நட்சத்திர ஹோட்டலான கையேந்திபவனில் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

வந்திருந்த இருநூறு சொச்ச பதிவர்களுள் ராண்டமாய் செலக்ட் செய்யப்பட்ட சிலரின் அறிமுகப்படலத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு அவர்களின் ஸ்பான்ஸர்களான லுல்லாஹ் ஜட்டியை பற்றிய ஒரு சிறு நிகழ்ச்சியும், அவர்களின் செயல்பாடுகள் பற்றிய ஒரு சின்ன பேச்சும், என்று சுவாரஸ்யமாய் ஆக்க முயற்சித்தார்கள். மதியம் டீ பார்ட்டியில் அருமையான உணவுகள் பரிமாறப்பட்டன. சுவைத்து உண்டேன் அதிகமாக கேட்டேன் செருப்பால் 
அடித்தனர் ஓடிவந்து விட்டேன்  வழக்கமாக கொடுக்கும் இட்லி இல்லை
என்பதால் கடுப்பாக இருந்தேன்
நிகழ்வின் கடைசி விஷயமாய் lounge எனும் ஒரு நிகழ்ச்சி. அதில் ஐந்தாறு குழுவை ஏற்படுத்தி யார் யாருக்கு எதில் சேர விருப்பமோ அதில் சேர்ந்து கசமுசா செய்யலாம் என்பது போன்ற நிகழ்ச்சி அப்போது ஒவ்வொரு குழுவிற்குமான போர்டை எடுத்து வந்தார்கள். அதில் ஒரு போர்டை பார்த்தும், என்னுள் தாங்க முடியாத கோபம் வந்துவிட, உடனடியாய் அந்த போர்டை எடுக்க வேண்டும் என்று வாதிட்டேன். நாங்கள் சாப்பிடும்  இட்லி எந்த விதத்தில் குறைந்துவிட்டது. நீங்கள் எங்களுக்கு எப்படி தோசை வைக்கலாம் அதுவும் சட்னி இல்லாமல்?. என்று ஆரம்பித்து தொடர்ந்து என் கண்டணங்களை பதிவு செய்தவுடன், உடன் இருந்த பெரும்பாலான இட்லி வெறி உணர்வு கொண்ட தமிழ் இட்லி தின்னிகளும் சேர்ந்து எதிர்க்க, அந்த போர்டு எடுக்கப்பட்டது. பின்பு இட்லி தீர்த்து விட்டது என சாணியை கரைத்து ஊத்தினார் ஓடிவந்து விட்டேன் .
அவர்களை எந்த விதத்தில் தோசை போடா தூண்டியது என்றே புரியவில்லை. தமிழில் மட்டும் சுமார் எட்டாயிரத்திலிருந்து பத்தாயிரம் பேர் மதியம் இட்லி சாப்பிடுகிறோம் . உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் ரீஜினல் உணவு இட்லி இரண்டாவது இடத்திலிருக்கிறது என்று சொல்கிறார்கள். எனக்கு அவ்வளவு சரியாக தெரியவில்லை. தோசை சாப்பிடுபவர்கள் பெரும்பாலும் எந்த பிராந்திய மொழிக்காரராய் இருந்தாலும் உலகம்  முழுவதும் பயன் படுத்தப்படும் மசாலா தோசையை(இந்த இடத்தில என் வாயிலிருந்து ஒழுகிய எச்சிலால் என் மானிடர் நனைகிறது) உண்பதால் சிறப்பானவர்கள் என்று அர்த்தமா?  எந்த விதத்தில் நாம் குறைந்து போய்விட்டோம்? இட்லில் இல்லாத வகைகளா? நாம் இட்லி சாப்பிடுவதற்கே இட்லிபொடி எனும் ஒரு விஷயத்தை பயன்படுத்தி, அதை தொட்டு உண்பவர்கள் நாம்.
மீண்டும் அதிகமாக சப்தம் போட்டதால் வேலைக்காரி தொடப்பக்கடயால் அடித்து விரட்டினால் ஆனாலும்  நான் ஓடவில்லை என் தன்மானத்தை இழந்துவிட்டு, வீட்டிற்கு வந்து பதிவு போடுவது எனக்கு பழக்கமில்லை. என்னைப் பொறுத்தவரை கேட்டால் தான் கிடைக்கும் என்றால் அதை கேட்காமல் இருக்க மாட்டேன்
அந்த போஸ்டர் உங்கள் பார்வைக்காக


டிஸ்கி : இதில் இருப்பது கடைசியாக எனக்கு இட்லி சுட்டு தந்த துணி


என்னை வெறுப்பேற்றிய போர்டு
.
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'

7 comments:

 1. ஏ என்னய்யா நடக்குது இங்கே ஒன்னுமே புரியலை இட்லியை தவிர....!!!

  ReplyDelete
 2. kalavaani thanaththa paththi therinjukka inge padiyungal http://www.parisalkaaran.com/2008/09/blog-post_2970.html

  ReplyDelete
 3. super.. innum konjam muyarchi thevai.. நல்ல பகடி.. எனக்கென தனி ப்ளாக் ஆரம்ப்பித்து செய்தால் இன்னும் நன்றாய் இருக்கும்.

  யாராக இருந்தாலும் ஐ லைக் இட்..:))

  ReplyDelete
 4. சங்கர் நாராயண் @ Cable Sankar
  December 4, 2011 1:48 AM
  //super..// thanks

  // innum konjam muyarchi thevai..// kandippaa sir

  // நல்ல பகடி..// நன்றி

  // எனக்கென தனி ப்ளாக் ஆரம்ப்பித்து செய்தால் இன்னும் நன்றாய் இருக்கும்//.நெறைய பேர் இருப்பதால சுழற்சி முறையில கண்டிப்பா பதிவு பண்றேன் சார்

  //யாராக இருந்தாலும் ஐ லைக் இட்..:))// மறுபடியும் நன்றி

  ReplyDelete

வந்தவங்க எல்லாரும் கமெண்ட் போடுங்க, இல்லே கனவில வந்து கண்ணை நோண்டிப்புடுவேன்!!

Indli