Monday, November 14, 2011

தொட்டு பார்த்தேன் சுகமாக இருந்தது

இது எனது வாழ்வில் நடந்த உண்மை கதை 
செமஸ்டர் விடுமுறை....


பொதுவாகவே விடுமுறைக்கு முதல் நாள் இருக்கும் ஆர்வம் விடுமுறை அன்று இருப்பதில்லை, இதில் விடுமுறை முடிந்து செமஸ்டர் தேர்வுகள் வேறு என்றால் சொல்லவா வேண்டும்?


ஒரு மாலை பொழுதில் மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை வந்து அடைந்தேன் அங்கே தேனி செல்லும் பேருந்துகளில் அரசு பேருந்துகளை மக்கள் மதிப்பதில்லை. தனியார் பேருந்துக்கு வரிசை கட்டி நிற்கின்றனர்..


தேனி மட்டும் ஏறுப்பா.... 


முன்னந்தலையில் கொஞ்சம் வழுக்கையும் பின்னால் பன்க் முடியும் வைத்திருந்த கண்டக்டர் பயணிகளை மிரட்டிகொண்டிருந்தான்


என்னை பார்த்ததும் முன்னமே பழக்கம் இருந்ததால் உரிமையுடன் எனது மடிக்கணினி பையை 
வாங்கி


டேய் ஊட்டி இத நாலாவது சீட் ஜன்னல்ல வைடா... என்று கிளீனரை அரற்றினான்


ஏற்கனவே சீட் போட்டுருக்கு பாண்டி ... என்றான் 


வைடா பாத்துக்கலாம்... என்றான் கண்டக்டர் 


சீட் போடப்பட்டது...


ஜன்னல் சீட் அறுபது வயது பெரியவரால் ஆக்கிரமிக்கப்பட வேறு வழியின்றி பேருந்து தொலைகாட்சியில் மூழ்கினேன்


படம் போடப்பட்டது.... சந்தோஷ் சுப்ரமணியம் 


எனது வரிசைக்கு அருகிலுள்ள வரிசையில் ஜன்னலருகில் ஒரு ஆண் 30 வயது இருக்கலாம் சின்ன பாப்பா போல ஜன்னல் சீட்டை வேடிக்கை பார்ப்பதை பார்த்தால் சரியான ஈத்தரை என தோன்றியது
அருகில் 25  வயது மதிக்க தக்க பெண் அப்புறமாக ஓரத்தில் 20 வயது  பருவமங்கை அநேகமாக அந்த பெண்ணின் தங்கையாக இருக்கலாம், அழகுன்னாலும் அழகு அவ்வளவு அழகு


பேருந்து கிளம்ப தயாராக இருந்தது...


உசிலம்பட்டி ஆண்டிபட்டி எல்லாம் எறிக்க...  சொன்னதும் படையெடுத்து வந்து பேருந்தை நிரப்பியது ஒரு கூட்டம் 


ஜெனீலியாவா இல்லை தேனிகார புள்ளயா? 


ஜெயிச்சது என்னமோ தேனிகார புள்ள தான் .... 
திடீரென தொடர்ச்சியாக அவளிடம் இருந்து உச்ச் சத்தம் கேட்க என்னருகில் இருந்த மலையூர் மம்பட்டியானை தாண்டி பார்வையை ஓட விட்டேன் 


அங்கே ஒரு பன்னி பயல் அவளிடம் சொல்லுவதற்க்கே கூசும் அளவிற்கு சில்மிஷத்தில் ஈடுபட்டிருந்தான் 


அவளது பிரச்சனையை அங்கே இருந்த யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.


அவள் அருகில் இருந்த தம்பதிகள் கண்டுகொள்லாததில் இருந்து இருவருக்கும் சம்மந்தம் இல்லை என தெரிந்தது 


ஒரு கணம் கூட தாமதிக்க வில்லை 


என்னடா பண்ற என்று அவனை அடிக்க கையை ஒதுக்கியது தான் தாமதம்.... முஷ்டியை மடக்கி ஒரு குத்து எனது கண்ணுக்கு கீழே, மயக்கமே வந்து விட்டது எனக்கு 
ஆனாலும் சுதாகரித்து எழுந்தேன் ஆனாலும் பேருந்தில் யாரும் கண்டுகொள்ளவே இல்லை 


ஹா ஹா ஹாசினி என்ற வசனத்தை கேட்டு சிரித்து கொண்டிருந்தனர்.... 


கண்டக்டர் பாண்டி வேகமாக முன்னேறி வந்து ஒக்காபு*****  இதுக்குன்னே பஸ்சுல வரின்களாடா என்று சொன்னவுடன் சில சமூக  ஆர்வலர்கள் ஆங்காங்கே முளைத்தனர் 


ஆனாலும் எல்லாரும் அவனை கேட்ட வார்த்தைகளால் வசை பாடுவதில் தான் குறியாக இருந்தனரே தவிர என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை 


அந்த காம வெறி பன்னி இறக்கிவிடப்பட்டது. அந்த பெண்ணை இடம் மாற்றி ஜன்னல் அருகில் அமர்த்தினர்


கண்டக்டர் மெல்ல என்னிடம் வந்து "இதெல்லாம் தேவயா பாஸ் " என்று சொல்லிவிட்டு 


செக்கானம் எல்லாம் எறங்குப்பா..  என்று வேலை கவனிக்க சென்று விட்டார் 


நான் அந்த பெண்ணை பார்த்தேன் அடி வாங்கின அவமானம் எனக்கு வலியை விட அதிகமாக இருந்தது 


அவள் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக ஊற்றியது எனக்கு என்னமோ அதில் எனக்கும்  கண்டிப்பாக பங்கு உண்டு என தோன்றியது 


அதன்பின் அவளை பார்க்கவில்லை வலியில் தூங்கிவிட்டேன் தேனி பேருந்து நிலையம் வந்து தான் கண்டக்டர் எழுப்பினார். அவளை தேடினேன் காணவில்லை.. 


போய்டா போல இருக்கே ? அதுவும் நல்லது தான் என்று மனதுக்குள் கூறியபடியே எழுந்தேன் 


"பாஸ் ஆசுபத்திரி போய்ட்டு போங்க " சரி பாஸ் என்று சொல்லிவிட்டு கீழே இறங்கினேன் 
அப்படியே நேரா போயி நாகர்ல சாப்புடலாமா இல்ல இந்த பக்கமா கட் பன்னி போய் எவரெஸ்ட்ல சாப்புடலாமா அப்படின்னு யோசிச்சுட்டு இருக்கும் போது ஒரு குரல் கேட்டது


ரொம்ப நன்றி சார் ஒரு 25 வயது இளைஞன் கூடவே ஒரு வழுக்கை தலை ஆள் அப்புறமா அந்த பெண் 


இளைஞன் அவளது அண்ணனாக இருக்கலாம் நடுத்தர குடும்பம்


வாங்க ஹாஸ்பிடல் போகலாம்? அந்த பெரியவர் சொன்னார்..


இல்லைங்க பரவாயில்ல சரியாகிடும். எனக்கு பஸ்சுக்கு வேற நேரமாகிடுச்சு என்று கூறிவிட்டு அவர்களிடமிருந்து விடைபெற்று திரும்பினேன் 


அதற்குள் அந்த மூவரும் திரும்பி நடக்க தொடங்கியிருந்தனர் ...
தொலைவில் அந்த பெண் திரும்பி திரும்பி என்னையே பார்ப்பது தெரிந்தது... காயத்தை தொட்டு பார்த்தேன் சுகமாக இருந்தது 


7 comments:

 1. பல்சுவை கலவை சூப்பர் மக்கா, நானும் வந்துட்டேன் ஹி ஹி...!!!

  ReplyDelete
 2. //MANO நாஞ்சில் மனோ
  December 3, 2011 8:29 AM
  பல்சுவை கலவை சூப்பர் மக்கா, நானும் வந்துட்டேன் ஹி ஹி...!!!//

  Nandri Mano Anna....

  ReplyDelete
 3. /காயத்தை தொட்டு பார்த்தேன் சுகமாக இருந்தது// இந்த ரணகளத்துலியும் ஒரு கிளுகிளுப்பு...

  ReplyDelete
 4. இப்படி இன்னும் நிறைய அடி வாங்குவான் போல தெரியுதே!

  ReplyDelete
 5. இப்படி இன்னும் நிறைய அடி வாங்கும் போல தெரியுதே! ஸாரி..பிழையை திருத்திக் கொள்ளவும்...

  ReplyDelete

வந்தவங்க எல்லாரும் கமெண்ட் போடுங்க, இல்லே கனவில வந்து கண்ணை நோண்டிப்புடுவேன்!!

Indli