Tuesday, October 22, 2013

ரொம்ப தேங்கஸ் ஜாக்கியன்னா

சென்னை அதன் மாலை நேர இயக்கத்தில் குறியாய் இருந்தது....

நேற்று  இரவு எட்டு மணி... அந்த நபர்    தனது தள்ளு வண்டியை தள்ளிக்கொண்டு வியர்வை வழிய கேகே நகர் சிவன் பார்க் அருகே தள்ளிக்கொண்டு நடந்து சென்றுக்கொண்டு இருந்தார்....

முதலில் அவரை நான்  தாண்டி சென்றாலும் மனது கேட்கவில்லை... ஒருவேளை பெட்ரோல் இல்லையென்றால் அந்த நபர் எவ்வளவு தூரம் நடந்து செல்ல  வேண்டி வரும்? பக்கத்தில் பெட்ரோல் பங்கும் இல்லை...



காலையிலேயே மனைவியிடம் விளக்குமாத்து பூசை வாங்கியாகிவிட்டது ...வீட்டுக்கு அவசரமாக போய் பெரிய வேலை இல்லை என்பதால் அந்தநபர்   நடந்து வர  காத்திருக்க ஆரம்பித்தேன்...

இது போல வலிய உதவி செய்ய போகும் போது இருக்கும் பெரிய  பிரச்சனை என்னவென்றால்..?  இது போன்ற நபர்கள் நம்மை தோஸ்த்தானாவாக  நினைத்துக்கொண்டு  நம்முடைய வாயில் வெற்றிலை பாக்குபோட வைத்து விடுவார்கள்.

நானும் நண்பர் தள்ளுவண்டி தங்கராசுவும் 

நாய் நக்கும் இயல்புடையது .... நான் காப்பாற்றும் இயல்புடையவன்(அடுத்தவன் காசில்)   என்ற அந்த சித்தாந்தத்தை ஒரு சில இடங்களில் நான்பிரயோகப்படுத்தி ஆசுபத்திரியில் அட்மிட் ஆகியவன் ...ஒரு வேளை அந்ததள்ளுவண்டிமீன்பாடி  வண்டியாக இருந்தால் அய்யகோ.....இப்படி முட்டாள்தனமாக உளறிவிட்டு காரணமே இல்லாமல்   சரி கிளம்பலாம் என்று நினைத்தேன்...

 ஒருவேளை அந்த நபருக்கு இன்று தேர்வு ஏதேனும் இருந்தால்  லேட்டாகிவிடுமே இன்னும் அந்த  வேதனையோடு எவ்வளவு தூரம் நடக்க வேண்டுமோ? என்று  யோசித்த காரணத்தால் நின்று வெயிட் செய்தேன்...


த்தா என்ன பிரச்சனை. பெட்ரோல்  இல்லையா?

பங்க் பக்கத்துல எதுவும்  இல்லை... நான் வேணா வாங்கி வரட்டா...

இல்லைங்க  இன்னும் ரெண்டு தெரு தள்ளிதான் வீடு... தம்பிக்கு போன் செஞ்சி இருக்கேன்...  வந்துக்கிட்டு இருக்கான்...

அப்ப சரிசார் ... நான் கிளம்பறேன்....

அண்ணா.....

நான் திரும்பினேன்...



பொளேர் என கன்னம் பழுத்தது ...ஏன்டா   நானும் 40 வருஷமா தள்ளு வண்டி தள்ளிகிட்டு இருக்கேன் மனநிலை பிறழ்ந்தவன் கூட பெட்ரோல் இல்லையான்னு  கேள்வியை கேட்டதில்ல போ அந்தால என் தாக்கத்தொடங்கினார்.

ரொம்ப தேங்கஸ்ண்ணா என்றேன் .....

ஏன்டா இந்த அடி அடிக்கிறேன் தேங்கஸ்கிற என்றார் 

இல்ல தினுமும் பொண்டாட்டி அடிப்பா இன்னிக்கு நீங்க அடிச்சு ஒரு மாறுதல் குடுத்துருக்கிங்க அதான் என்றேன் 

 அண்ணா என  அழைக்கு சில அழைப்புகளில் பாசமும், நேசமும் , கனிவும் ஒளிந்து இருக்கும்.

ஆனாலும் அடி தொடர்ந்தது. நடைபாதை மக்களும் ஆளுக்கு ஒரு கை போட்டனர் 

இந்த  தேங்ஸ்ண்ணாவில் எல்லாமும் உணர்ந்தேன்..(என்னா அடி )



பிரியங்களுடன்
சாம் .


2 comments:

  1. ஏன்டா நானும் 40 வருஷமா தள்ளு வண்டி தள்ளிகிட்டு இருக்கேன் மனநிலை பிறழ்ந்தவன் கூட பெட்ரோல் இல்லையான்னு கேள்வியை கேட்டதில்ல// ROFL

    ReplyDelete
  2. என்னங்க இப்படிப் போட்டு தாக்குறிங்க..

    ReplyDelete

வந்தவங்க எல்லாரும் கமெண்ட் போடுங்க, இல்லே கனவில வந்து கண்ணை நோண்டிப்புடுவேன்!!

Indli