Monday, February 27, 2012

மான் வெஜ் ஆனா நான் நான்வெஜ் (27/02/1947) செவ்வாய்

ஆல்பம்.
கடந்த இரண்டு நாட்களாகப் பெண்களூரில் வாசம்.. கடந்த வெள்ளிக்கிழமை திடீர் என்று  பெங்களுர் போய் வரலாம் என்று முடிவு எடுத்து உடனே குடும்பத்தோடு கிளம்பி விட்டோம்.
முன்னை விட குளிர் போகும் போதே வாட்டி எடுக்கின்றது.. கிருஷ்ணகிரி டூ ஓசூர் சாலைகள்  விரிவுபடுத்தப்படுவதால் மலைகளைக் குடைந்து கொண்டு இருக்கின்றார்கள்.. அவர்களிடம் சென்று உகாண்டாவுக்கு வழி கேட்டேன்.. உளியால் உச்சி மண்டையைக் கொத்தி விட்டனர். 


காஞ்சிபுரத்தில்  இருந்து பூந்தமல்லி வரை ரோடு கச்சடாவாக இருக்கின்றது.. ஆனால் டோல் மட்டும் வக்கனையாக வாங்குகின்றார்கள்..
நானும் டோல் கட்ட சென்றேன்.. தள்ளுவண்டிக்கெல்லாம் எதுக்குடா தொழு என்று துரத்தி விட்டனர்.  கனரக வாகனங்கள் இடது புறம் செல்லவேண்டும் என்று எத்தனை இடத்தில் எழுதி வைத்தாலும் எந்த லாரி டிரைவரும்  மதிப்பதாகத் தெரியவில்லை..உடனே நான் என்னுடைய தள்ளுவண்டியை எடுத்துக்கொண்டு இடது புறமாகச் சென்றேன்.  ஆனால் ஒரு சில லாரி டிரைவர்கள்.. மிகச்சரியாக ஓட்டிவந்து என்னை டிக்கியில் இடித்து சாக்கடையில் உருட்டி விட்டனர்.
=================================================
12 மணிக்கு ஆரம்பித்த போலிஸ் என்கவுண்டர் பரபரப்பு விடியல் மூன்று வரை தொடர்ந்தது என்று என்கவுண்டர் நடந்த வீட்டுக்கு பக்கத்து வீட்டு நண்பர்  தெரிவித்தார்.. நாலுமணிநேரம் பக்கு பக்குன்னு வீட்டுக்குள்ளேயே உயிரைக் கையில புடிச்சிகிட்டு விளக்கு எல்லாத்தையும் அனைச்சிட்டு உட்காந்துகிட்டு இருந்தோம் என்றார்.. நல்ல வேள உசுர கீழ உட்ருந்தா அவ்ளோதான் என்று டைமிங் காமடி அடித்தேன்.. நண்பரின் மனைவி கண்ணில் மிளக்காயப்பொடியை தூவி அடித்தார். 
=================================================
என்கவுண்டர் நடந்த போது வாசக நண்பர் ஒருவரின் அழைப்பு வந்ததும் பேச பால்கனி பக்கம் வந்தேன். அப்போது என்னைப் பார்த்து ஒரு போலிஸ் இன்ஸ்பெக்டர்.. ஒரு தர சொன்னா அறிவு வேணாம் ..த்தா  உள்ளே போய்ப் பேசுடா.. என்று கடிந்து கொண்டு இருக்கின்றார்.. உடனே உள்ளே ஓடிவிட்டேன். பின்பு என்கவுண்டர் முடிந்ததும் கூட்டத்தில் அனானியாக நின்று கொண்டு "ஜெய் ஜெட்லி" என்று கத்தினேன். திரிபாதி என்னையும் என்கவுண்டரில் போட உத்தரவிட்டுள்ளார். 
==========================================
இன்றில் இருந்து இரண்டு மணிநேரம் சென்னையில் மின்வெட்டு அமுலுக்கு வருகின்றது.. அதனால் நான் அமுல்டப்பா வாங்குவதை நிறுத்திவிட்டேன். எப்படி என்னுடைய அறிவு? வாசக நண்பர்கள் இதே நடைமுறையை பின்பற்றவும்.. 
==================================
நேற்று இரவு பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டு இருந்தேன்.. கிருஷ்ணகிரி அருகே இருக்கும் மலையில் காட்டுத்தீ ஜெக ஜோதியாக எரிந்து கொண்டு இருந்தது.. வேலூர் அருகே வந்தால் அங்கேயும் மலையில் அதே  தீ எரிந்து கொண்டு இருந்தது.. எப்படி ஒரே நேரத்தில் இரண்டு பக்கமும் ஒரே தீ எரியும் எனக் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டேன்.. யாரோ விஷமிகள் வைத்த தீ என்பது நன்றாகத் தெரிகின்றது.. உடனே கொஞ்சம் விஷ முறிவு மருந்தினை வாங்கி தீயில் ஊத்தினேன். ஹ்ம்ம்மம்ம்ம்ம் அனைகிறதா பார்க்கலாம் ..
==================================
இந்தவாரக் கடிதம்.
அன்பு சாம் ,
எப்படி இருக்கீங்க ? குட்டி பாப்பா நலமா? நாங்க இங்கு நலம். என் பெயர் ஜெட்லி முத்து குமார். உங்களுடைய தளம் பற்றிய விவரத்தை மிட்னைட்மசாலா  - இல் சொல்லியதைப் பின்னூட்டமிட்டிருந்தேன்.
நியாபகம் வரும் என்று நினைக்கிறேன்சரவணபவன் வாசலில் பொட்டி ட்டும் வேலை.
நான் உங்களுடய தீவிர வாசகன். காலையில் உங்களுடைய தளத்தை வாசிக்காமல் கக்கூஸ் கூட சென்றதில்லை. தினம் 2,3 தடவை (வயிறு சரி இல்லப்பா) உங்கள் தளத்தை பார்க்கும் அளவுக்கு பைத்தியம் முத்திப் போய் இருக்கிறது (உங்களை மாதிரியே). உங்களுடைய மான்வெஜ் நான்வெஜ், குத்துப் பரோட்டா மற்றும் பயண அனுபவங்கள் பிடிக்கும். பின்னுட்டம் குறைவாகவே இட்டிருக்கிறேன். பின்னுட்டம் இட்டால் அனானியாகத் தெலுங்கில் இடத்தான் விருப்பம். அதனால் தான் நிறைய இட முடியவில்லை...

நண்பர் ஜெட்லி முத்து குமாரின் திருமண ஆல்பம்
உங்களைப் பார்த்து நானும் எழுத வேண்டும் என்று (தேவை இல்லாத) ஆசை. ஜன ரஞ்சகமாக நிறைய படித்திருக்கிறேன். குஷ்பூ , தம்மன்னா ,சிலுக்கு, லக்ஷ்மிராய், தேஜாஸ்ரீ என்று பலர் பிடிக்கும். தீவிர இலக்கியத்தில் ஆர்வமில்லை. கடந்த வாரம் கென்யா  போய் வந்தேன். அந்த அனுபவத்தை ஒரு பதிவாக்கி என் பதிவுலக வாழ்கையை ஆரம்பிக்கிறேன். என் தள முகவரி
உங்களுடைய உண்மையான விமர்சனம் எனக்குத் தேவை.
உங்களுக்கு நான் நான்கு ஆப்சன் குடுக்கிறேன்
1 ) நீயெல்லாம் எழுதணுமா?
2 ) தம்பி உனக்கு முடி இன்னும் வளரனும்
3 ) பரவாயில்லை இன்னும் நன்றாக எலுத முயலுங்கள் 
4 ) நல்லா இருக்கு
நான் தள வடிவமைப்பிலும் தேர்ச்சி பெற்றவனல்ல. எதாவது மாற்ற வேண்டியிருந்தால் சொல்லவும். DUBAAKKOOR  வோட்  பட்டன்  போட்டு விட்டேன் ஆனால் எப்படி என் தளத்தை லிங்க் என்று தெரியவில்லை. எனக்கு சொல்லவும்நிறைய எழுதவும். எனக்கு ஒரு தரவு போடுவதுக்குள் தாவு தீந்து போய்விடுகிறது.  நீங்கள் எப்படித்தான் அடிக்கடி போடுகிறீங்களோஉங்கள் மெயிலை ஆவலுடன் எதிர் பார்க்கும். படித்து விட்டு தவறாமல் ஒட்டு போடவும்..
ஜெட்லி முத்து குமார்
எனது பதில்:
ஆன்பின்(அன்பின் என்று வாசிக்கவும்)  ஜெட்லி முத்துக்குமார்..ஏதோ என்னை பார்த்து எழுத வந்தது என்று எல்லாம் சொல்ல ஜல்லி அடிக்க வேண்டாம்..உங்களுக்கு எழுதவேண்டும் என்று உந்துதல் இருந்தால் மட்டுமே எழுத முடியும்.. எனக்கு வேலை இல்லை அதனால் எழுதுகிறேன் நீங்கள் அப்படியா? அதே போல உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டுக்கொள்ளாதீர்.. என்னிடம் இருக்கும் கெட்ட பழக்கம் அதுதான்..  வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர..அதுபோல அவ்வப்போது ஏதேனும் பரிசுப்பொருட்களும் வாங்கி அனுப்பவும் நன்றி.

3 comments:

  1. hahahaha semaya kalaichi irukra andha aaluku idhu theva than,,,

    ReplyDelete
  2. Super..naan enna seithu vitten naanbargale :)

    ReplyDelete

வந்தவங்க எல்லாரும் கமெண்ட் போடுங்க, இல்லே கனவில வந்து கண்ணை நோண்டிப்புடுவேன்!!

Indli