Thursday, March 29, 2012

வக்கிர குணங் கொண்ட பெண் பதிவரால் வாட்டமுறும் ஊழியர்கள்!


இன்று நாம் இந்த உண்மைச்(!!!!) சம்பவத்தினூடாகப் பார்க்கப் போகும் பெண் பதிவர் கொஞ்சம் வித்தியாசமானவர். ஒரு வகையில் பிரபல அல்லது ப்ராப்ள பெண் பதிவர் என்றே சொல்லலாம். வீடு சுத்தமாக இருந்தால் நாடும் சுத்தமாகும் நாடு சுத்தமானால் வீடு சுத்தமாகுமா? என்னும் தத்துவத்தை தனது பிலாக்கில் கொண்டு நடப்பவர்.


நிஜத்தில் கொடூரமான வக்கிர குணம் கொண்டவராக விளங்குபவரும் தான் இந்தப் பெண் பதிவர். இவருடைய வலைப் பதிவில் என்னுடைய பின்னூட்டம் ஒன்றினைப் பார்த்த வாசகர் ஒருவர், என்னிடம் இந்த குறிப்பிட்ட ப்ராணியினை சீ....குறிப்பிட்ட பிராணியின் பெயர் கொண்ட பதிவரைத் தெரியுமா என்று கேட்டார். நெருங்கிய பழக்கம் இல்லை. ஆனாலும் போகப்போக நெறுங்கி பழக ஆசை அதனால் தான் வலைப்பூ வழியே கருத்து போடுகிறேன் என்று சொன்னேன்.

உடனே அந்த வாசகர்  சில பதிவர்கள் பதிவுகளை தான் காப்பி அடிப்பர் ஆனால் இந்த பெண் பதிவர் பின்னூட்டங்களை கூட காப்பி அடிப்பவர் என்னும் குண்டை தூக்கிப்போட்டார் அது ஆற்றிலறியாக என்னுடய நடுமண்டயில் இறங்கியது. உடனே அதிர்ச்சியை மறைத்து விட்டு மேலும் விவரங்களை சேகரிக்க தொடங்கினேன்


ஆதாரம் இல்லாது ஒருவர் மீது எப்படி நண்பா குற்றம் சுமத்துவது என்று கேட்டேன். நண்பர் சொன்னார். உங்களுக்கு வேண்டிய ஆதாரங்களை அங்கே செல்லும் வாடிக்கையாளன் நானே ஒளிப்பதிவு செய்து தருகிறேன் என்றார். உடனே நானும் என்னுடைய நோக்கியா 1100 மொபைலை அவரிடம் கொடுத்து இதில் பதிவு செய்து தாருங்கள் என்றேன். மொபைலுடன் சேர்த்து என்னயும் குப்பை கூடையில் தூக்கி போட்டு விட்டார்பதிவர் பற்றிய அதிர்ச்சிகரமான உண்மைகள் : பாரத தலைநகர் (டில்லி என்னும் பெயரை குறிப்பால் உணர்த்த இவ்வாறு சொல்லப்படுகிறது) பகுதியிலுள்ள CSNL தொலைத் தொடர்பு அலுவலகம். எட்டு ஊழியர்களை மாத்திரம் உள்ளடக்கியது. அன்றைய தினம் வக்கிர குணங் கொண்ட அம்மணி அலுவலகத்திற்கு வரவில்லையே என்று எல்லோர் உள்ளமும் மகிழ்ச்சிக் கடலில் திளைத்திருந்த வேளையில், என்னுடைய உளவாளி வாசகர் உள்ளே சென்றார்
அப்போது.......
அம்மணி தன் கண்ணாடிக்குள்ளால் கோரப் பார்வை பார்த்தவாறு கொஞ்சம் தாமதமாக அலுவலகத்தினுள் நுழைந்தார்.
உளவாளி GUD MOANING MADAM என்றார்...
திமிர் பார்வை நுழைந்ததும் தான் தாமதம், முன் வாசலுக்கு அண்மையில் இருந்த பெண்ணிடம் "ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகத்த்தா" என்று ஏசத் தொடங்கினார். 

உடனே அந்த வாசலுக்கு அருகில் இருந்த பெண்மனியும் "ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகுதாத்தா" என்றார்
அம்மணி : ரக
பெண்மணி : ரகு
அம்மணி : ரக
பெண்மணி : ரகு
அம்மணி : ரக ரக
பெண்மணி : ரகு ரகு.......... இவ்வாறு அந்த பெண்மணியை கலாய்த்தார்


அம்மணி பற்றி முழுமையாக அறியாதோர் மாயாண்டி குடும்பத்தார் படத்தில் வரும் மாயாண்டியை மனதில் கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள்.
எம்மிடம் குறித்த நபர் ஒளிப்பதிவு செய்த வீடியோவில் பதிவுகளில் எழுதுவது போன்றே வக்கிர அம்மணியார் அசிங்கமாக, ஆபாசமாக ஒரு கேள்வி கேட்டார்.
அதற்கு நாம் சரியான விடை சொல்ல வேண்டும்

"ஏம்பா தண்டாயுதபாணி, நைட்டு - - - - விட்டு ஆட்டி விட்டு வந்தியா?அதான் நீ ரொம்ப டயர்டா?  

அ) தயிர் கடையும் மத்து ஆ)குழம்புக்குள்ள கரண்டி இ)தொட்டில்க்குள்ள குழந்தை

தண்டபாணியும் விடை தெரியாமல் விழித்திருக்கிறார்..
இதில் மகா கொடுமை என்னவென்றால் எல்லோருக்கும் தம் வேலை போய் விடுமே என்ற காரணத்தினால் இந்த வக்கிர அம்மணியின் மொக்கைகளை சகித்துக் கொள்ள வேண்டிய நிலமையில் ஒத்துழைக்க வேண்டியதாகின்றது.
அம்மணியை விட வயசான ஆண்களைக் கூட வக்கிர அம்மணியார் கொல வெறியோடு ஏசுவது தான் மிகக் கொடூரம்.
கடந்த குடியரசு தினத்தன்று ஒரு முதியவரிடம் பாரத் மாதா கீ ஜேஎன்று கூறி இருக்கிறார்
குறிப்பு : மாதா என்றால் அம்மா என பொருள் (போதுமா வக்கிரத்திற்கு உதாரணம்)


ப் பதிவின் சாராம்சம்:
அம்மணியைப் பற்றிய செல்போனில் எடுக்கப்பட்ட அசிங்கமான பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்கள் என்னிடம் குறித்த அந்த நண்பரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. "பழையன கழிதலும், புதியன புகுதலும்" எனும் சொல்லாடலுக்கு அமைவாக மணி 2012ம் ஆண்டு போகிப்பண்டிகை அன்று அதை தீயிட்டு கொளுத்திவிட்டேன்.

3 comments:

  1. thalaivaa vanakkam

    ReplyDelete
  2. தலைவா மீன்வேஜ்,குத்து பரோட்டா எப்போ வரும்.

    ReplyDelete

வந்தவங்க எல்லாரும் கமெண்ட் போடுங்க, இல்லே கனவில வந்து கண்ணை நோண்டிப்புடுவேன்!!

Indli