Wednesday, January 11, 2012

கேபிள் ஆண்டர்சன்- குத்துப் பரோட்டா - 11/01/2012

புத்தகக் கண்காட்சியில் புத்தகம் வெளியிடச் சொல்லி என்னை அழைத்திருந்தனர்.. நானும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளலாம் என முடிவு செய்து கிளம்பினேன். நேஷனல் ஜியாக்ரபிக் புக்பேலஸ் நடத்திய புத்தக விழாவில் புத்தகம் வெளியிட சொன்னார்கள். என்ன புத்தகம் கையில் கொடுத்தால் வெளியிடுகிறேன் என்றேன். திடீரென  நாதஸ்வரம் சணிஜி மற்றும் ஜெட்லி இருவரும்  இணைந்து தாக்கினர்.. என்னதான் உங்கள் பிரச்சனை? என்றேன். மறுபடியும் யுவஏசு மற்றும் மிதிஷா இணைந்து புத்தகம் வெளியிடச் சொல்லித் தாக்கினர். எனக்குப் புரியவில்லை. பின்பு பதிவர் கில்மா குமார் அவர்கள் விளக்கமாக,
" அண்ணே நீங்க திருடி சட்டைக்குள்ள ஒளிச்சு வச்சிருக்க புத்தகங்கள வெளில உடுங்கன்னே "
என்றார். ஆறு புத்தகங்களை வெளியிட்டேன்.
 
 #############


நக்கீரன் மீதான தாக்குதலைப் பற்றி ஆளாளுக்கு ஏதேதோ பேசினாலும், என்னைப் பொறுத்த வரை சண்டை நடக்கவில்லை என்றே சொல்லுவேன். இதைக் கண்டித்து நான் எழுதிய கவிதை பின்வருமாறு:

     “அண்ணே அண்ணே.. அன்பு அண்ணே.. நக்கி நக்கீரண்ணே
     மம்மி ரொம்ப நல்ல மம்மி நக்கி நக்கி காமரஜண்ணே..” 
இந்தக் கவிதையைக் கேட்டவுடன் சண்டை முடிந்து விட்டதாக அறிகிறேன். மம்மி ராக்ஸ்..


குறிப்பு :என்னுடைய பரோட்டா கடை எனும் பகுதியை வாசித்து தான் மம்மி பீப்(beef) சாப்பிட்டதாக அறிகிறேன் அவருக்கு என் நன்றிகள்.


###################


இந்த வார சந்தோஷம்: இந்த வாரம் படம் எதுவும் வெளிவராததால் வழக்கமாக வெள்ளி வெள்ளிக் கிழமைகளில் என்னை மொக்கைப் பதிவர் எனக் கழுவி ஊத்தும் வாசகர்கள் இல்லை.. அவர்களது அவதூறு பேச்சைக் கேட்காமல் இரவு நிம்மதியாகத் தூக்கம் வருகிறது.

######################
சிகிச்சை பலனளிக்காமல் மனைவி இறந்ததால் டாக்டரைக் கொலை செய்த கொடூரத்தைக் கண்டித்து,  டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கொலைகாரனிடம் சென்று மனைவி இறந்தால் நல்லதுதானே? என்றேன்.. என்னையும் கொலை செய்ய தேடி வருவதாக அறிகிறேன். கமிஷனர் விஜயகாந்திடம் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்திருக்கிறேன்.

#################

அங்கீகாரம்: என்னுடைய கேள் இயக்கம் பற்றி எல்லோரும் அறிந்ததே அந்த இயக்கத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் நடிகர் சூர்யா அவர்கள் அந்த விளம்பரத்தில் நடித்துத் தருவதாகச் சொன்னார். அதற்கான போட்டோ ஷூட் நேற்று நடந்தது. அதற்கான எக்ஸ்க்ளுசிவ் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக..

முதலில் சூர்யா தயங்கவே செய்தார் பின்பு நான் KFC-யில் இலவசமாக வாங்கிய சாக்கோ லாவா கேக் மற்றும் சரவணபவனில் கேட்டு வாங்கிய கெட்டி சட்னி பத்திப் பேசியதும் அவரும் தான் இப்போது கோடீசுவரன் நிகழ்ச்சியின் மூலமாக இதே வேலையை தான் செய்து வருவதாகவும் தனக்குப் பிடித்திருக்கிறது என்றும் சொல்லி உடனடியாக நடித்து கொடுத்தார்.






#########################

ப்ளாஷ்பேக்: மன்சூர் அலிகான் அமீர்கானின் மாமா. அவர் தான் அமீர்கானை ஜுராசிக் பார்க்  படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். கடைசியாய் பவர் ஸ்டாரை வைத்து “மூலம் வந்த முருகன்” என்கிற படத்தைக் கொடுத்துவிட்டு, சினிமாவிலிருந்து விலகி, குன்னூரில் காட்டேஜுகள் அமைத்து செட்டிலாகிவிட்டார். எனக்குத் தெரிந்து தமிழ் சினிமாவைக் கொஞ்சம் க்ஸான ஹாலிவுட் பாணிக்கு மாற்றியதில் இவரின் பங்கு முக்கியமானது என்று நினைக்கிறேன். இவரது படங்களில் வரும் பாடல்கள், நல்ல மெலடியாக இருக்கும். அதிலும் இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் ப்ரெஷ்ஷாக


##############################

அடல்ட் கார்னர்

15 comments:

  1. ஹ ஹ ஹ சத்தியமா முடியல , நாறக் கலாய் , விழுந்து விழுந்து சிரிச்சேன் , அப்புறம் நான் , ஷகிலா , தகரம் , பிஞ்ச வயரின் கதை எல்லாம் எப்போ வரும் ... நான் உன்கிட்ட ரொம்ப எதிர் பார்க்கறேன் தல .........

    ReplyDelete
  2. good... continue...

    ReplyDelete
  3. ஆகட்டும்டா தம்பி ராசா:-)

    ReplyDelete
  4. தம்பி.. இன்னும் இன்னும் நல்லா ட்ரை பண்ணு..இல்ல எழுதறதுக்கு முன்னாடி எனக்கு ஒரு காப்பி அனுப்பு.. பட்டிப் பார்த்துதர்றேன்..:))

    எனிவே கீப் ப்ளாகிங் நண்பா.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. //
    சங்கர் நாராயண் @ Cable Sankar
    January 12, 2012 4:27 AM

    தம்பி.. இன்னும் இன்னும் நல்லா ட்ரை பண்ணு..இல்ல எழுதறதுக்கு முன்னாடி எனக்கு ஒரு காப்பி அனுப்பு.. பட்டிப் பார்த்துதர்றேன்..:))
    //

    இவ்வளோ அக்கறையா இருக்கிங்களே யாருன்னே நீங்க?
    சொன்னா உங்களயும் புகழ்ந்த்து எழுதுவேன்ல......

    ReplyDelete
  6. The reply to Mr. Cable Sankar is "awesomer" than actual article.

    The Adult corner is mind blowing btw.

    ReplyDelete
  7. இவ்வளோ அக்கறையா இருக்கிங்களே யாருன்னே நீங்க?
    சொன்னா உங்களயும் புகழ்ந்த்து எழுதுவேன்ல...////////

    avaru than cable andersonoda allakai , lolllllllllll

    ReplyDelete
  8. அடல்ட் கார்னர் செம நக்கலு ஹா ஹா

    ReplyDelete
  9. @சங்கர் நாராயண் @ Cable Sankar
    January 12, 2012 4:27 AM

    //தம்பி.. இன்னும் இன்னும் நல்லா ட்ரை பண்ணு..இல்ல எழுதறதுக்கு முன்னாடி எனக்கு ஒரு காப்பி அனுப்பு//

    எதுக்கு உங்க பிளாக்ல போட்டுக்கவா?lol

    ReplyDelete
  10. கேபிள் ஆண்டர்சன் பேரு அவ்வளவு சரியில்லைங்க...
    அவரு ஒசி-ல டேபிள் டேபிளா உட்கார்ந்து ருசி
    பார்ப்பதால் "டேபிள் பங்கர்"நு பேரு வைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்.

    ReplyDelete
  11. very good .keep rocking young man.Write something about copy and paste blog writers.

    ReplyDelete
  12. ha ha ha arumaiya irukku.........eppo adutha post poduveenga

    ReplyDelete

வந்தவங்க எல்லாரும் கமெண்ட் போடுங்க, இல்லே கனவில வந்து கண்ணை நோண்டிப்புடுவேன்!!

Indli