Sunday, December 11, 2011

கடுப்பாகி போன பேருந்து பயணம் (சென்னை முதல் ஆப்ரிக்கா வரை )- பகுதி 1 மற்றும் பகுதி 2


வருகைக்கு நன்றி. விருந்தினராக வந்தால் நீங்க தின்பதற்கு வடை,முறுக்குஅல்லது கடலை மிட்டாய் ஏதேனும் வாங்கி வரவும் . பின்னூட்டமிடாவிட்டால் இரவில் கனவில் வந்து கண்ணை குத்தி விடுவேன் 

அன்பார்ந்த குஷ்பூ ரசிகர்களுக்கு,

    நான் எனது சொந்த ஊரான ஆப்ரிக்காவிலிருந்து எனது மைத்துனன் பெண் எடுத்த ஊரான அண்டார்ட்டிக்காவிர்க்கு சென்ற பயணக்கட்டுரை 


மிக நீளமாக இருப்பதால் பகுதி வாரியாக பிரித்து பதிவிடலாம் என நினைக்கிறேன் ஆனால் திடீர் என்று நேரம் கிடைத்து விட்டபடியால்(!) அதை இங்கே ஒரே பதிவாக தருகிறேன். பகுதி வாரியாக(தனித்தனியாக) படித்துக்கொளவும்.


பகுதி 1:

சொந்தக்காரர் வீட்டு திருமணத்திற்காக நானும் என் மனைவியும் சனியன்று சென்னையிலிருந்து புறப்பட்டு உசிலம்பட்டி சென்று, அங்கிருந்து எனது பெற்றோருடன் இணைந்து ஆண்டிபட்டி விமான நிலையம் வழியாக ஆப்ரிக்கா சென்று திருமணத்திலும், புதன் அன்று அண்டார்ட்டிக்காவில் நடைபெற்ற வரவேற்பு மற்றும் கறிவிருந்தில் பங்கேற்று இன்று காலை தான் சென்னை வந்ததன் பயண கட்டுரை தான் இது. 

சனியன்று சென்னையிலிருந்து ஆப்ரிக்க செல்வதற்காக ஏற்கனவே டிராவல்ஸ்ஸில் (பெயர் வேண்டாம் தெரிந்தால் அவர்கள் வீடு தேடி வந்து அடிப்பர்) ட்விட்டர் மூலம் புக் செய்திருந்தேன். ஆனால் அந்த சமயம் என்னை பாலோ  செய்த அந்த நாதேரி சரக்கடித்திருந்ததால் என்னுடைய பெயரில் டிக்கெட் புக் செய்ய மறந்து விட்டிருந்தது. பின்னால் தான் அது எனக்கு தெரிய வந்தது. எனவே எனக்கு பின்னாடி ஒரு கண் இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன் 

                                                     நான் மற்றும் சில அனானிகள் 

ஆனாலும் யாரிடமும் சொல்லாமல் ஒரு இருக்கையை ஆக்கிரமித்தேன். கோயம்பேடு பேருந்து நிலைய வாசல் வரை விரட்டி விரட்டி அடித்தனர்.

சிறிது நேரம் எல்லா வாகனங்களிலும் சார் ஆப்ரிக்கா செல்கிறீர்களா? என லிப்ட் கேட்டு விட்டு,பிறகு அரசுப் பேருந்து நிலையத்திற்கு சென்று பேருந்து கிடைக்குதா என பார்க்கலாம் என்று அங்கு நடந்து சென்றோம். ஆட்டோக்காரரை கேட்டால் காசு வேண்டும் என்றார் அதனால் நடந்தே சொல்லலாம் என முடிவு செய்தேன் (நன்றி : அமெரிக்ககாரன்).

                                                            நான் செல்லவிருந்த  ஏர் பஸ் 

அரசுப் பேருந்து நிலையத்திற்கு இத்தனை லக்கேஜூடன் நடந்து சென்று பார்த்தால் ஒரு பேருந்திற்கு 200 பேர் என கூட்டம் அலைமோதுகிறது. 

சரி நல்லது கூட்டமாக இருந்தால் டிக்கெட் எடுக்க தேவையில்லை என நினைத்திருந்தேன் நேரடியாக ஆப்ரிக்கா டிக்கெட் கிடைக்காது என்று முடிவு செய்து வேறெந்த வழியாகவும் ஊருக்குள் சென்று விடலாம் என்பதால் மன்கோலியாவுக்கோ பாகிஸ்தானுக்கோ அல்லது அந்தமான் தீவிர்க்கோ பேருந்தில் சென்று விடலாம் என்று பார்த்தால் அந்தப்பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதியது, மணி வேறு 11 மேல் ஆகிக்கொண்டிருக்கிறது. அப்பொழுது ஒரு பேருந்து உள்நுழைந்தது. அமெரிக்க வழியாக முல்லைபெரியார் அணை செல்லும் பேருந்து அது. அதில் டிக்கெட் கிடைத்தது. சரி 06 மணிக்கு முல்லைபெரியார் சென்றாலும் ஆப்ரிக்கா 08 மணிக்கெல்லாம் சென்று விடலாம் என்று முடிவு செய்து ஏறி விட்டோம்.

பெரியார் பேருந்து நிலையம் - நைரோபி -அந்த கூட்டத்துக்கு நடுவில் நான் தாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறேன் 

கென்யா சென்றதும் பேருந்து டிரைவரால் வண்டியை இயக்க முடியவில்லை யாருக்காவது வண்டியை ஓட்டத்தெரியுமா? என்று கேட்டனர்.


நானும் சென்று எனக்கு ஓட்ட தெரியும் என்று சொன்னேன் பயணிகள் அனைவரும் பாராட்டி விட்டு சென்றனர் 

ஒருவர் வண்டி ஒட்டு என்றார்... 


எனக்கு வண்டி எல்லாம் ஓட்ட தெரியாது எல்லா வண்டியில் உள்ள ஓட்டைகளும் தெரியும் என்றேன் அடி பந்தாடினர்......
===========================================
பகுதி ஒன்று முடிவுற்றது என்னுடைய மைத்துனன் மகாலிங்கம் இங்கே டீ கடை வைத்துள்ளார் டீ வடை சாப்பிடுபவர்கள் சாப்பிட்டுமுடித்து விட்டு வந்து பகுதி இரண்டை தொடரவும் 

============================================
பகுதி 2

மறுபடியும் வண்டி பஞ்சரானது ஸ்டெப்னி இல்லாததால் பேருந்தில் இருந்த மக்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர்.

அப்போது நான் சென்று என்னிடம் ஒரு ஸ்டெப்னி இருக்கிறது என்றும் அவள் தன் குழந்தைகளுடன் என்னுடைய சின்ன வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் சொன்னேன். 

என் மனைவி உட்பட அனைவரும் என்னை தாக்கினர். அப்போது இரத்தம் வந்ததால் கென்யாவை ரத்தபூமி என்று சொன்னேன் அங்கே இருந்த ஒரு கறுப்பர் என்னை இழிசொற்க்களால் பூஜித்தார்.

                                             நான் எனது வாசகர் வட்ட நண்பர்களுடன் 

ஆனால் என் தந்தையோ எதற்கு லேட்  என என்னை திட்டிக்கொண்டே இருந்தார்.

இப்படியாக நான் ஆப்ரிக்க பேருந்துநிலையம் சென்றடையும்போது மணி 12.30

வீட்டிற்குள் சென்றால் அப்பா எதும் பேசாமல் கிளம்பி என் சைக்கிள் கேரியரில் ஏறி அமர்ந்து அமர்ந்து கொண்டார்.



அம்மாவும் கிளம்பியதும் தூங்கி எழுந்து என் சைக்கிளில் நானும் என் மனைவியும் அண்டார்டிக்கா சென்றோம்.

அங்கோ அத்தனை சொந்தக்காரர்களிடமும் என்னுடைய பயண அனுபவ கட்டுரை பற்றி சொன்னேன் இதெல்லாம் ஒரு கத இத இங்க வேற வந்து சொல்றியான்னு அனைவரும் சேர்ந்து என்னை மொத்து மொத்தென மொத்தினர்.

சாப்பாட்டு கூடத்திற்கு சென்றேன். என் அப்பா சமையல் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டிருந்தார் அவரிடம் நீங்கள் எந்த கல்லூரியில் நிர்வாகவியல் படித்தீர்கள் என்று கேட்டேன் அவரது மொத்த கோவத்தையும் என்மீது இறக்கினார். 

                                        பயணத்தின்போது  ஒரு மகிழ்ச்சியான தருணம் 

 இரவு மாப்பிள்ளை அழைப்பு துவஙகியதால் பெண் உறவினர்கள் அனைவரும் கோயிலுக்கு ஊர்வலத்தில் சீர்வரிசை தட்டுடன் நடந்து செல்ல ஆரம்பித்தனர். அவர்களை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்ததை என்னுடைய மனைவி கவனித்து விட்டு என்னை நன்றாக கவனித்தார் 

எல்லாரிடமும் அடி வாங்கிய களைப்பினால் கொஞ்சம் உற்சாகபானம் குடித்தால் தேவலாம் என தோன்றியதால்  நிறைய உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்தேன். ஆனாலும் ஒன்றும் தேறவில்லை 



அதில் மகேஷ் குமார் என்று எங்களால் அழைக்கப்படும் (பெயர்க்காரணம் : அவனது பெற்றோர் அவனுக்கு இட்ட பெயர் மகேஷ் குமார் ) அவனை 10 வருடங்களுக்கு பின் சந்தித்தேன். நானும் அவனும் பால்ய வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள் தூரத்து உறவினரும் கூட. இடையில் அவன் வெளிநாடு(தேனீ மாவட்டம்) சென்று விட்டதால் பார்க்க முடியாமல் போய் விட்டது. நாங்கள் இருவரும் போகிற வருகிறவர்கள் எல்லோரிடமும் வம்பிழுத்து அடி வாங்கியதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று மறைத்த கதையை பேசி சிரித்துக் கொண்டிருந்தோம். 

அடுத்து மணப்பெண் ஊரான ஜப்பானிற்கு கடல் மார்கமாக செல்வதாக என்னுடைய அத்தான் திரு விஜய் மல்லையா அவர்கள் சொன்னதால் மரியாதை நிமித்தமாக நான் கொஞ்சம் சரக்கு அடித்து விட்டு செல்லலாம் என்றேன் மச்சான் மற்றும் அவருடைய பங்காளிகள் என்னுடைய உடலை அடித்து துவைத்தனர் 

நல்லப்பிள்ளைகளாக சாப்பிட்டு விட்டு மீண்டும் மண்டபம் வந்து உறவினர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

ஆனால் ஜப்பானில் நடந்ததோ...

(தொடரும்...)
போரூர் சானா ஆண்டர்சன் 

டிட் பிட்ஸ் 18 (+): இன்று முதல் என்னுடைய தளம் 18 (+) தளம் ஆகிறது.
அட! யாரும் தப்பா நினைக்க வேணாம் என்னுடைய பாலோயர்ஸ் எண்ணிக்கை பதினெட்டை தாண்டியதுன்னு சொல்ல வந்தேன்..... அனைவருக்கும் நன்றிகள் 




9 comments:

  1. நல்லா கலாய்க்கிறீர்கள் ....

    ReplyDelete
  2. பயங்கர கலாய்....நல்ல காமெடியா இருந்திச்சு..

    ReplyDelete
  3. @கோவை நேரம்
    @NAAI-NAKKS
    @ராஜ்


    உங்கள் வாழ்த்துக்களை கேட்ட உடன் என் கண்களில் நீர்?

    ReplyDelete
  4. Boss klakkureenga. Eppudi ippadi ellaan idea varuthu?

    ReplyDelete
  5. WE WANT DAILY POSTS..
    WE WANT DAILY POSTS..
    WE WANT DAILY POSTS..
    WE WANT DAILY POSTS..
    WE WANT DAILY POSTS..
    WE WANT DAILY POSTS..
    WE WANT DAILY POSTS..
    WE WANT DAILY POSTS..

    ReplyDelete
  6. கலாய்ப்புகள் தோற்பதில்லை!

    ReplyDelete

வந்தவங்க எல்லாரும் கமெண்ட் போடுங்க, இல்லே கனவில வந்து கண்ணை நோண்டிப்புடுவேன்!!

Indli